கடைசியாக ராதிகாவின் கழுத்தில் தாலி..!! இனிதான் பாக்யாவின் ஆட்டம் ஆரம்பம்.. கோபிக்கு இந்த நிலைமையா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்திருக்கிறது.
ராதிகா கழுத்தில் தாலியோடு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
கடைசியாக கோபி வெற்றிகரமாக திருமணத்தை முடித்து விட்டார் இனி தான் பாக்யாவின் ஆட்டம் ஆரம்பமாக போகிறதாம்.

எதிர்பார்ப்பு வீணாகி போச்சு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ஒரு சில வாரங்களாகவே கோபியின் இரண்டாவது திருமணம் நடக்குமா? இல்லையா? என்று எதிர்பார்ப்போடு ஒளிபரப்பாகி வந்தது. கடைசி நேரத்தில் கோபியின் திருமணத்தை யாராவது நிறுத்தி விட மாட்டார்களா? என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கெல்லாம் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அந்த சீரியலில் ராதிகாவாக நடிக்கும் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள் இருந்து வருகிறது.

ரசிகர்கள் நினைத்தது
பாக்கியாவை பிடிக்காமல் அவரோடு வாழ்ந்து வந்த கோபி தற்போது அவரை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்த நிலையில் கோபியின் திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று அவருடைய தந்தை சத்தியம் செய்து இருக்கிறார். கோபியின் திருமணத்திற்கு பாக்யாவே சமையலுக்கு காண்ட்ராக்ட் எடுத்து சமையல் செய்து வருகிறார். இதனால் திருமணத்தில் ஏற்படும் குழப்பங்கள் மூலமாக கடைசி நேரத்தில் திருமணம் என்று விடும் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர்.

திருப்புமுனை
தற்போது சீரியல் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது. ராதிகாவிற்கு திருமணம் முடிந்து கழுத்தில் மஞ்சள் கயிறும், கையில் காப்பு கயிறு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இதனால் ராதிகாவை, கோபி திருமணம் செய்து விட்டார் என்று கோபியின் ரசிகர்கள் ஆரவாரம் இட்டு வருகின்றனர். ஆனால் சீரியலில் கதையில் இனி தான் திருப்புமுனை வரப்போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

ரசிகர்களின் கருத்து
ராதிகாவும் பாக்கியாவும் ஆரம்பத்தில் நல்ல நண்பர்களாக இருந்தனர். ஆனால் பாக்கியாவின் கணவர் தான் கோபியின் காதலர் என்று தெரிந்த பிறகு இருவர்கள் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போது தன்னுடைய கணவரை ராதிகா திருமணம் செய்து கொண்டதால் இனி பாக்கியலட்சுமி எடுக்கும் அதிரடியான முடிவுகளால் சீரியல் விறுவிறுப்பு அதிகரிக்க போகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தன்னுடைய முதல் பெரிய ஆர்டர் வெற்றிகரமாக முடித்து விட்ட மகிழ்ச்சியில் பாக்கியலட்சுமி தன்னுடைய புருஷன் இன்னொருத்தரை திருமணம் செய்தாலும் கண்டுகொள்ளவில்லை என்று ரசிகர்கள் பாக்கியலட்சுமி கலாய்த்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications