ஏலே ஏலே தோஸ்த்டா...புகழுக்கு திருமண மேடையில் பாலா கொடுத்த திருமண பரிசு
சென்னை: புகழ் திருமண மேடையில் விஜய் டிவி பாலா செய்த செயல் பலரையும் வாய்விட்டு சிரிக்க வைத்துள்ளது.
நண்பரின் திருமண நாளில் இப்படியா செய்வார்கள் என்று சிலர் சிரித்தபடியே கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
புகழ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான பாலா குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருட்கள் ஆன பொம்மை கார்களை புகழுக்கு பரிசளித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

விஜய் டிவி பிரபலங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சில நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சின்ன திரையில் இருந்து வெள்ளி திரைக்கு காலடி எடுத்து வைத்து விடுகிறார்கள். பலர் தங்களுடைய திறமையால் வெள்ளித்திரைகளும் ஜொலித்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் சந்தானம் தொடங்கி தற்போது புகழ், பாலா போன்றோரும் அந்த வரிசையில் இடம் பிடித்திருக்கின்றனர். இவர்களில் புகழ் தற்போது திருமணம் முடித்து இருக்கிறார். தன்னுடைய திருமணத்திற்கு திரை பிரபலங்கள் பலரையும் கூப்பிடாத அவர் தன்னுடைய ரிஷப்ஷனுக்கு அனைவருக்கும் அழைப்பு கொடுத்துள்ளார்.

பாடாய்படுத்திய நண்பர்கள் கூட்டம்
புகழ் தன்னுடைய திடீர் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதும் ரசிகர்கள் பலர் இன்ப அதிர்ச்சியை கொடுத்தனர். அதில் பலர் கேட்ட கேள்வி பிரபலங்கள் யாரும் வரவில்லையா??என்பதாகத்தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது புகழின் ரிசப்ஷன் போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகளை பதிவிட்டுள்ளார்.அதில் தான் ஒரு 90ஸ் கிட்ஸ் என்பதை நிரூபிக்கும் விதமாக மாப்பிள்ளையும், மணப்பெண்ணையும் பாலா மற்றும் அவர்களுடைய நண்பர்களும் சேர்ந்து கலாய்த்து இருக்கிறார்.

இப்படி பண்றீங்களேம்மா
புகழின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் பல விதமான பரிசு பொருட்களை வழங்கி கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு எல்லாம் வித்தியாசமாக பாலா கொடுத்த பொருள் பலரையும் சிரிக்க வைத்துள்ளது. மணமேடையில் புகழ் மற்றும் அவருடைய மனைவியான பெண்சியா இருவரும் இருக்கும்போது, நண்பர்கள் பெரிய ஒரு கிப்ட் பாக்ஸ் கொண்டு வந்து அதை புகழை ஓபன் செய்ய சொல்லி இருக்கின்றனர். புகழும் உள்ளே என்ன இருக்கப் போகிறதோ என்று ஆர்வத்தோடு திறந்து பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி தான் கிடைத்திருக்கிறது. அங்கே குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருள்கள்தான் இருந்துள்ளதாம்.

ஓயாத வாழ்த்து மழை
தான் திருமணம் செய்யாமல், தற்போது திருமணம் செய்து கொண்ட புகழை கலாய்த்து பாலா செய்த செயல் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. திருமண நாளில் நண்பர்கள் செய்யும் வழக்கமான சேட்டைகளாக இது இருந்தாலும் நெட்டிசன்கள் இதை கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த போஸ்டிற்கு பாலா, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என புகழ் மற்றும் பென்சியாவை டேக் செய்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு சிலர் திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகப்போகிறது இன்னும் இந்த அலை ஓயவில்லையா..!!!? என்று கேட்டு வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications