அம்மாவை பற்றிய ஹேமா கேள்விக்கு பாரதி கூறிய உண்மை.. வெண்பா செய்யும் தில்லாலங்கடி வேலை..இன்றைய எபிசோட்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா தன்னுடைய அம்மா யார் என்று பாரதியிடம் கேள்வி கேட்டிருக்கிறார்.
பாரதி குடும்பத்திற்கே அதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஹேமாவிடம் உண்மையை கூறி இருக்கிறார்.
வெண்பா தன்னுடைய திருமணத்தில் சந்தோஷமாக இருப்பதாக அவருடைய அம்மாவிடம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இக்கட்டான சூழலில் பாரதி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோட்டில்தொடக்கத்தில் பாரதியிடம் ஹேமா என்னுடைய அம்மா யார் என்று கேட்டு அழுது கொண்டிருக்கிறார். அப்பொது ஹேமா காப்பாற்றிய பாட்டி என்னுடைய மகளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என்று அழுது கொண்டே கேட்கிறார். அதற்கு பாரதி ஹேமா என்னுடன் காலேஜில் ஒன்றாக படித்த பெண்தான்.அவளை எனக்கு ஏற்கனவே தெரியும் அவளுடைய ஞாபகமாக தான் என்னுடைய மகளுக்கு ஹேமா என்று பெயர் வைத்தேன். மீதம் இருக்கும் கதையை நான் உங்களிடம் வீட்டில் வந்து பேசுகிறேன் தயவு செய்து இங்கே இருந்து போங்க, இந்த இடத்தில் ஒரு என்னால் எதுவும் பேச முடியாது என்று அனுப்பி வைக்கிறார்.

ஹேமா கேட்ட வார்த்தை
ஹேமா அப்போது என்னுடைய உண்மையான அம்மா யாரு? அப்பா நீங்க இருக்கும்போது எனக்கு யாரு அம்மா? நீங்கள்தான் என் அப்பா என்றால் என்னுடைய அம்மா உங்களுக்கு தெரியும் தானே ?நீங்கள் எதற்காக என்னிடம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் என்று பாரதியிடமும் சௌந்தர்யா குடும்பத்தினரிடமும் கேட்கிறார். ஆரம்பத்தில் பாரதியும் ஏதோ பேசி சமாளித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஹேமா விடாப்பிடியாக உங்களுக்கு அம்மா இருக்கிறது. எனக்கு அம்மா யாரு என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். அப்போது உன்னுடைய அம்மா யார் என்று எனக்கு தெரியாது என்று பாரதி கூறுகிறார்.

பாரதி கூறிய உண்மை
என் மீது கோபத்தில் தானே நீங்கள் இப்படி பேசுகிறீர்கள் என்று ஹேமா அழுது கொண்டே கேட்கிறார். அதற்கு பாரதி உண்மையில் உன் அம்மா யார் என்று எனக்கு தெரியாது. நான் உன்னுடைய அப்பா இல்லை என்ற உண்மையை கூறியிருக்கிறார். சௌந்தர்யா இவர்கள் பேசும்போது என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார். பாரதி ,ஹேமா நீ என்னுடைய குழந்தை இல்லை என்று சொன்னதும் திரும்பி திரும்பி அழுது, அப்போ நான் என்னுடைய அம்மாவை நானே கண்டுபிடித்து விடுகிறேன் நான் இந்த வீட்டை விட்டு கிளம்புகிறேன் என்று அழுது கொண்டே கூறிக் கொண்டிருக்கிறார்.

வெண்பாவின் பிளான்
அடுத்ததாக வெண்பா தன்னுடைய திருமணத்திற்காக போட்டோ சூட்டுக்கு ரெடி ஆகி கொண்டிருக்கிறார். எந்த மாதிரி உடை உடுத்த வேண்டும் என்று கேமரா மேனிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். இவர் ஜாலியாக இருப்பதை பார்த்து வெண்பாவின் அம்மா வெண்பாவின் மனமாற்றத்தை நினைத்து சந்தோஷப்பட்டு, உண்மையில் வெண்பா நீ இவ்வளவு மாறிவிட்டாய் என்று நம்புவதற்கு என்னால் முடியவில்லை என்று கூறுகிறார். அப்போது ரோகித்தும் நான் தான் ஏற்கனவே சொன்னேன்ல ஆன்ட்டி வெண்பா மாறி விடுவாள் என்று எனக் கூறுகிறார். அப்போது உங்களுடைய சந்தோசம் தான் எனக்கு முக்கியம் அம்மா என்று கூறுகிறார். அப்போது அருகில் இருக்கும் வேலைக்கார பெண் நீங்கள் உண்மையிலேயே மாறிவிட்டீர்களா? என்று வெண்பாவிடன் கேட்கும் போது இல்லை.. திருமண வரைக்கும் நான் இப்படித்தான் நடித்துக் கொண்டிருப்பேன் .திருமணத்தின் போது மண்டபத்தை விட்டு வெளியேறி எனக்கு மனதிற்கு பிடித்த பாரதியை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். இதோடு இன்றைய எபிசோடு முடிந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications