ஜெயிலுக்கு சென்ற கண்ணம்மா.. பாரதிக்கு ஊர்க்காரர்கள் கொடுத்த தண்டனை.. எதிர்பாராத சீரியல் கடைசி முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணமாவை தேடி பாரதி அலைந்து கொண்டிருக்க கடைசியாக அவர் இருக்கும் ஊரை தெரிந்து கொண்டிருக்கிறார்.

பாரதி இந்த ஊருக்கு வந்து விடக்கூடாது என்று லட்சுமி கண்ணம்மாவிடம் கேட்டு கொண்டிருக்கின்றனர்.

கண்ணமா இருக்கும் ஊருக்கே வந்த பாரதிக்கு கடைசியில் எதிர்பாராத தண்டனை கிடைத்திருக்கிறது.

கண்ணம்மா பைத்தியம்

கண்ணம்மா பைத்தியம்

பாரதிகண்ணம்மா சீரியலின் இன்றைய எபிசோட்டின் ஆரம்பத்தில் ஜெயிலில் இருக்கும் வெண்பாவிற்கு எதிரில் கண்ணம்மா அமர்ந்திருக்கிறார். வந்த இடம் பிடித்திருக்கிறதா? உன்னுடைய பிரண்டு இல்லை உன்னுடைய பாய் பெஸ்டி பாரதியை கல்யாணம் பண்ணிக்கிட்டு மாமியார் வீட்டுக்கு போகணும்னு ஆசைப்பட்டியே இந்த மாமியார் வீடு எப்படி இருக்கு என்று கேட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். வெண்பா சிரிக்காத, சிரிக்காத என்று சொல்லியபடி இருக்கிறார். நீ படித்த படிப்பு எல்லாம் இதற்கு தானா? இப்படி தரையில் அமர்ந்து கொண்டு களி தின்பதற்கு தானா என்று கேட்டுக் கொண்டிருக்க வெண்பா கடும் கோபத்தில் இருக்கிறார். அப்போது கண்ணம்மா சிரித்துக் கொண்டிருக்க சிரிக்காத சிரிக்காத சொல்றேன்ல என கோபத்தில் கண்ணம்மாவின் கழுத்தை நெரிக்கிறார். அங்கே போலீஸ் ஓடி வருகின்றனர். பின்பு பார்க்கும்போது வெண்பாவோடு இருந்த சக கைதியாக இருக்கிறார். இதை பார்த்த போலீஸ் இவளுக்கு கண்ணம்மா பைத்தியம் பிடித்திருக்கிறது, இங்க இருந்து மாற்ற வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கின்றனர்.

அப்பா என்ன சொல்ல வேண்டாம்

அப்பா என்ன சொல்ல வேண்டாம்

அடுத்ததாக கண்ணம்மா வீட்டில் அனைவரும் இரவு சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றனர்.அப்போது கண்ணம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்த தாமரையின் அப்பா குழந்தைகளிடம் உங்களுடைய பெயர் என்ன என்று கேட்க இருவரும் பெயரை சொன்னதும் இது என்ன ஒரு குழந்தைக்கு ஹேமா என்றும் ஒரு குழந்தைக்கு லட்சுமி என்றும் பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க ஹேமா அவருடைய அப்பாவிடம் வளர்ந்தால் என்று சொன்னதும், ஓ அப்படியா சரி என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது லட்சுமி டாக்டர் தேடி வந்துற எங்கே வர மாட்டாருலாமா? என கேட்கிறார். அதற்கு கண்ணமாவின் அப்பா கண்டிப்பா இங்க உங்க அப்பா தேடி வர மாட்டார் என சொல்ல டாக்டர் என்று சொல்லுங்க போதும் அவர் அப்பா என்ன சொல்ல வேண்டாம் என்று லட்சுமி கோபப்படுகிறார்.

கையைப் பிடித்த பாரதி

கையைப் பிடித்த பாரதி

அடுத்ததாக பாரதியும் கணபதியும் கண்ணம்மா இருக்கும் ஊருக்கு வந்து விடுகின்றனர். கணபதி கண்ணம்மா இங்கே இருப்பதை உறுதி செய்து பாரதியிடம் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது கண்ணம்மா அங்கே எதார்த்தமாக வருகிறார். பாரதி கண்ணம்மாவை பார்த்ததும் மறைந்து கொண்டு "பாரதியின் காதலியே கண்ணம்மா" எனும் பாடலை பாட கண்ணம்மா அதிர்ச்சியாகி சுற்றும் முற்றும் பார்த்து நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு தெரியுது வெளியில வாங்க என கூறுகிறார். பாரதியை பார்த்ததும் அதிர்ச்சியாகி கண்ணம்மா எதற்காக இங்கே வந்தீங்க என கேட்க, உன்னை இங்கு இருந்து கூட்டிட்டு போகாமல் நான் போக மாட்டேன் என்று கூறி கண்ணம்மாவின் கையைப் பிடிக்கிறார். கையை விடுங்கள் என்று கண்ணம்மா கூறியதை கேட்காமல் பாரதி பிடித்தபடியே இருப்பதால் கண்ணம்மா பக்கத்தில் இருப்பவர்களை காப்பாத்த வாங்க என கூப்பிடுகிறார்.

ஊர்க்காரர்களின் கேள்வி

ஊர்க்காரர்களின் கேள்வி

கண்ணம்மா சத்தம் போடுவதை கேட்டால் பக்கத்தில் இருந்த அனைவரும் ஓடி வந்து பாரதியையும், கணபதியையும் பஞ்சாயத்துக்கு கூட்டி செல்கின்றனர். பஞ்சாயத்து முன்னிலையில் பாரதியின் கைகளை கட்டிக்கொண்டு நிற்க வைத்திருக்கிறது. அப்போது பஞ்சாயத்தில் இருப்பவர்கள் இது யார் என்று கேட்க கண்ணம்மா வெளியே செல்லும்போது இந்த தம்பி கையை பிடித்து விட மாட்டேன் என்று சொல்லி இருக்கிறார் என்று சொன்னபோது, இதுதான் நீ சொன்ன அந்த டாக்டரா என்று பஞ்சாயத்து தலைவர் கேட்கிறார். அதற்கு கண்ணம்மாவின் அப்பா ஆமாம் என்று சொன்னதும், யோ டாக்டர் நீ எல்லாம் நல்ல படிச்சவன் தானே? இவ்வளவு படிச்சிருந்தும் பண்ற வேலையா இது? இப்போ எங்க ஊருக்கே வந்து நடுரோட்டில் வந்து வம்பு வளர்த்திருக்க உன்ன எல்லாம் என்னன்னு சொல்றது என கேள்வி கேட்கிறார் .

ஊர்க்காரர்களிடம் பாரதியின் கேள்வி

ஊர்க்காரர்களிடம் பாரதியின் கேள்வி

எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டை, மன கசப்பில் இங்க வந்து இருக்கா, அவங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியாம நான் தெருவெல்லாம் தேடிகிட்டு இருந்தேன். ஒரு வழியா தேடி கண்டுபிடிச்சி இங்க வந்தேன். கடைசியா அவளை வீட்டுக்கு வா வீட்டில் போய் பேசிக்கலாம் என கூப்பிட்டேன். கட்டண பொண்டாட்டி என்கிற உரிமையில் தான் கையை பிடித்து வீட்டுக்கு வா என கூப்பிட்டேன். இத பாருங்க இது எங்க ரெண்டு பேத்துக்கும் நடுவுல இருக்குற குடும்ப பிரச்சனை. புருஷன் பொண்டாட்டி பிரச்சனை இதுக்காக ஊர் ஜனங்களுக்கு முன்னாடி என்னை குற்றவாளி மாதிரி நிறுத்தி வைக்கணுமா? இது என்ன நியாயம் என பேசிக்கொண்டு இருக்க, ஊர் ஜனங்கள் பாரதியின் பேச்சைக் கேட்டு கோபப்படுகின்றனர். அதை பார்த்த கண்ணம்மா பாரதியை பாவமாக பார்க்கிறார். இத்துடன் இன்று எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+