கண்ணம்மாவிடம் பாரதியின் கடைசி முயற்சி.. ஹேமாவின் பிடிவாதம் .. வெண்பாவின் நடிப்பு..எதிர்பாராத முடிவு
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி சென்னைக்கு கண்ணம்மாவோடு காரில் செல்கிறார்.
பாரதியிடம் டைவர்ஸ் வாங்கி விட வேண்டும் என்று ஹேமா உறுதியாக கண்ணம்மாவிடம் கூறுகிறார்.
ஜெயிலில் இருந்து வெளிவருவதற்காக வெண்பா மனநிலை பாதிக்கப்பட்டவராக நடிக்கிறார்.

தாமரையின் அறிவுரை
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று எபிசோட் ஆரம்பத்தில் காலையில் சென்னைக்கு நீ கிளம்பி சென்று தான் ஆக வேண்டுமா? என கண்ணம்மாவிடம் தாமரை கேட்க, ஏதோ கோபத்தில் தெரியாமல் அப்படி ஒரு உண்மை சந்தேகப்பட்டு இருக்கிறார் பாரதி, அவரை நீ மன்னித்துவிடு என்று பாரதியும் தாமரையும் தாமரையின் அப்பாவும் கண்ணம்மாவுக்கு அறிவுரை கூற, கண்ணம்மா குழந்தைகளிடம் உங்களுடைய முடிவு என்னவென கேட்கிறார். லட்சுமி அம்மா உங்களுடைய முடிவில் மாற்றம் செய்யலாம் என சொல்ல போகும்போது ஹேமா பாரதியை மன்னிக்க சொல்கிறாயா? என்று கேள்வி கேட்க, வேண்டாமம்மா உங்களை எப்படி எல்லாம் அவர் பேசி இருக்கிறார், அதனால் அவர் வேண்டாம் என்று கூறி விடுங்கள் என்று கூறுகிறார்.

பஸுக்காக காத்திருப்பு
தன்னுடைய குழந்தைகளின் முடிவும் தன்னுடைய முடிவு போலத்தான் இருக்கிறது என்பதால் நான் இனி அதைத்தான் செய்யப் போகிறேன் என்று கண்ணம்மா உறுதியாக கூறுகிறார். பின்பு அடுத்த நாள் காலையில் சென்னைக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதியும் அங்கே பஸ்ஸுக்காக வந்து நிற்கிறார். அந்த வழியாக வரும் நபர் நீங்கள் செய்தி பார்க்கவில்லையா? இன்று புயலின் காரணமாக பஸ் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சொல்ல அப்போ சென்னைக்கு எப்படி போக வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

டாக்டர் முடிவு
ஏற்கனவே பாரதி காருக்கு சொல்லி வைத்திருப்பதால் அங்கு கார் வருகிறது, பாரதி அந்த காரில் ஏறிக்கொண்டு நான் சென்னையில் டிராப் செய்கிறேன் சும்மா இல்லை பணம் பெற்று கொள்கிறேன் என்று சொன்ன பிறகு கண்ணமாவும் சம்மதித்து காரில் செல்கிறார். அதே நேரத்தில் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்திருக்கும் வெண்பா மருத்துவர் முன்பு மீண்டும் மீண்டும் கண்ணம்மா உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். மருத்துவர் எல்லா டெஸ்டும் பார்த்தாச்சு, இவர் உடல் நிலையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை அதனால் மனநிலையில் தான் பிரச்சனையில் இருக்கிறார். இவரை ஜெயிலில் வைப்பதற்கு நான் சொல்ல மாட்டேன் என்று சொல்ல, ஜெயில் வார்டன் அப்போ அதையே எனக்கு எழுதி தாருங்கள் நான் கோட்டில் கொடுத்து விடுகிறேன் என்று கூறுகிறார்.

கண்ணம்மாவின் அதிரடி பதில்
வெண்பா மனரீதியாக சரியில்லை என்று டாக்டர் எழுதிக் கொண்டிருக்கும்போது வெண்பா தான் ஜெயித்துவிட்ட மாதிரி சிரித்து கொண்டிருக்கிறார் .அடுத்ததாக பாரதியும் கண்ணம்மாவும் காரில் சென்று கொண்டிருக்கும் போது கண்ணம்மாவுக்கு சீட்டு பெல்ட் போட்டுக்கொள்ள பாரதி கூறுகிறார். பின்பு முதல் முறையாக நீ என்னோடு காரில் வரும்போது நான் தான் உனக்கு சீட்டு பெல்ட் போட கத்துக்கொடுத்தேன் என்று பழையதை நினைவுபடுத்துகிறார். கண்ணம்மா கடந்து போனதை நான் நினைத்துப் பார்ப்பதில்லை. அதை நினைவில் வைக்கவும் இல்லை என்று பேசுகிறார் இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.












Click it and Unblock the Notifications