
லட்சுமியின் கேள்வியால் தவித்து போன குடும்பம்... வெண்பாவை கைது செய்த போலீஸ்.. பரபரப்பான இறுதி கட்டம்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலில் ஹேமாவை கடத்தியதற்காக பயத்தோடு இருக்கும் வெண்பாவிற்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கிடைத்திருக்கிறது.
இதுவரைக்கும் கண்ணம்மாவிடம் கேள்வி கேட்டு வந்த லட்சுமி இப்போது சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினரிடம் கேள்வி கேட்டு அனைவரையும் திணற வைத்திருக்கிறார்.
எதிர்நீச்சல் கதாநாயகர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அட எதிர்பார்க்கலையே இவருக்குத்தான் அதிகமாம்

வெண்பாவை கைது செய்த போலீஸ்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா இன்றைய எபிசொட்டில் ஆரம்பத்தில் வெண்பாவை கடத்தியதற்காக போலீஸ் கைது செய்வது போல கனவு கண்டு அதிர்ச்சி அடைகிறார். கணவை நிஜமென நினைத்து கத்திய வெண்பாவால் சாந்தி என்ன ஆச்சு என ஓடி வந்து தண்ணீரை கொடுத்து கேட்ட ஹேமாவை கொல்லாமல் விட்டது நான் செய்த தவறு. மாத்தி பண்ணனும் பயமா இருக்கு என கட்டிலில் கையை போட்டு அடிக்க காயம் ஏற்படுகிறது. இதனால் ஷர்மிளா மற்றும் ரோஹித் ஓடி வந்து என் ஆனது என கேட்க இருவரும் மழுப்பலாக பேசுகின்றனர். பின்பு மருத்துவமனைக்கு கூட்டி செல்கின்றனர். ஏற்கனவே ஹேமா அட்மிட் ஆகி இருக்கும் அதே மருத்துவமனைக்கு வெண்பாவும் வருகிறாள்.

பாரதியை குறித்த தகவல்
அடுத்ததாக சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் வெளியே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பாரதியை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். பாரதி தனக்கு போன் செய்த விஷயத்தை வேணுவிடம் சௌந்தர்யா கூறிக் கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் இனி பிரச்சனையே இல்லை என பாரதி கூறினான். அதுபோல இங்கே ஹேமா கடத்தப்பட்டதை சொன்னதும் பதறி போய்விட்டார். நாங்கள் ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்று சொன்னதும் ஹாஸ்பிடலுக்கு இன்னும் ஒரு சில மணி நேரத்திற்குள் வந்து விடுவேன் அங்கேயே இருங்கள் என்று கூறி இருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த பேச்சுக்கு மட்டும் குறை இல்லை
அடுத்ததாக வெண்பாவிடம், ஹேமாவும் இதே ஹாஸ்பிடல் தான் அட்மிட் ஆகி இருக்கா என விஷயத்தை சாந்தி கூறுகிறார். அது மட்டும் இல்லாமல் நான் ராசிபலன் பார்த்ததில் இந்த மாதம் உங்களுக்கு நேரம் சரியில்லை. போலீஸ் கைது செய்வது போலத்தான் இருக்கிறது. இந்த மாதம் முழுக்கவே உங்களுக்கு தவறாக நடப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று சொல்ல, என்னை யாராலும் கைது செய்ய முடியாது. நானாகத்தான் போலீஸ் ஸ்டேஷன் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஒரு முறை ஜெயிலுக்கு சென்று வந்ததை குறித்து எதுவும் சொல்லாமல் கெத்தாக பேசிக் கொண்டிருக்கிறார்.

லட்சுமியின் அடுத்தடுத்த கேள்வி
அடுத்ததாக சௌந்தர்யா, வேணு மற்றும் அஞ்சலி என அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது லட்சுமி அங்கே வருகிறார். அவரிடம் கண்ணம்மா எங்கே என சௌந்தர்யா கேட்க, டாக்டர் பார்க்க வேண்டும் என்று சொன்னதால் போய் இருக்கிறார் என்று கூறிக்கொண்டு இருக்க, லட்சுமி இடம் ஏன் ஒரு மாதிரி இருக்க என சௌந்தர்யா கேட்க, நான் உங்களிடம் ஒன்று கேட்பேன் நீங்கள் எனக்கு உண்மையை சொல்வீங்களா? என கேட்டபடியே அப்பாவும் அம்மாவும் பிரிந்து இருக்க அவர்களுக்குள் என்ன பிரச்சனை? அப்படியே அவங்க பிரிந்து இருந்தாலும் அப்பா எங்க கிட்ட ஏன் பேசிக்கல? எங்களை ஏன் கொஞ்சலை? என அடுக்கடுக்கான பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனால் சௌந்தர்யா மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் போது வேணு, லட்சுமி இடம் அமைதியாக எடுத்துக் கூறுகிறார். நீ குழந்தை உனக்கு சீக்கிரத்தில் எல்லாமே புரியும். அப்போது எல்லாம் சொல்லலாம். இப்போது இதை சொன்னால் உனக்கு புரியாது என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத லட்சுமி அழுது கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.