கண்ணம்மாவுடன் கிளம்பிய ஹேமா.. விரக்தியில் பாரதி எடுத்த முடிவு.. இந்த மாதிரி பரிதாபமான முடிவு தேவையா?
சென்னை: பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என ஹேமாவுக்கு தெரிந்ததும் கண்ணம்மாவுடன் வீட்டை விட்டு கிளம்பி போய் விட்டார்.
ஹேமா கண்ணம்மாவோடு போவதை பார்த்து கண்கலங்கியபடி பரிதாபமான நிலையில் பாரதி தவிக்கிறார்.
டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்துவிடும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு இன்றும் ஏமாற்றம்தான் மிஞ்சியது.

சௌந்தர்யா பாட்டி தான் காரணம்
விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் இன்றைய எபிசோட் ஆரம்பத்தில், கண்ணம்மா நான் தான் உன்னுடைய அம்மா என்று கூறியதை நம்ப முடியாமல் ஹேமா மீண்டும் மீண்டும் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார் .நான் உன்னை கூட்டிக் கொண்டு சென்று விடலாம் என இருந்தபோது சௌந்தர்யா பாட்டி தான் நீ இந்த வீட்டை விட்டு வெளியே போய்விட்டால், டாக்டர் உன்னை பிரிந்து இருந்து விடமாட்டார் என சொன்ன காரணத்தினால் தான் நான் உன்னை இந்த வீட்டிலே விட்டுவிட்டு இத்தனை நாள் இருக்கிறேன் என்று அழுதபடியே கண்ணம்மா கூறுகிறார்.

அடம் பிடிக்கும் ஹேமா
கண்ணம்மா சொல்வது உண்மைதானா என்று ஹேமா சௌந்தர்யாவிடம் கேட்டதற்கு சௌந்தர்யாவும் ஆமாம் கண்ணம்மா சொல்லுது எல்லாமே உண்மைதான் என்று சொல்கிறார். அடுத்ததாக வீட்டில் இருக்கும் அனைவரிடமும் கண்ணம்மா சொன்னது உண்மைதானா என்று ஹேமா கேட்டுக் கொண்டிருக்கிறார் .அனைவரும் ஆமா அதுதான் உண்மை. இதனால் நாங்க மறைத்து விட்டோம் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர். அப்போ இனி நான் உங்க கூட வந்துருவேன். வாங்க நம்ம வீட்டுக்கு போகலாம் என்று ஹேமா அடம் பிடிக்கிறார்.

எப்போதாவது வருகிறேன்
கண்ணம்மா இல்லை இந்த வீட்டில் உனக்கு தாத்தா, பாட்டி என எல்லாரும் இருக்காங்க நீ இங்கே தான் இருக்கணும் என்று எவ்வளவோ அறிவுரை கூறுகிறார். ஆனால் நானும் லட்சுமியும் இரட்டை குழந்தைகள் தானே? அப்போ லட்சுமி மட்டும் உங்க கூட இருக்கும்போது நானும் உங்க கூட தானே இருக்கணும் .நானும் உங்க கூட வந்துருவேன் எனக்கு அம்மா தான் வேணும், வேணும் என்றால் எப்பவாவது வந்து போய் இருக்கலாம் ஆனால் நம்ம வீட்டுக்கு போகலாம் நானும் லட்சுமியும் ஒன்றாக விளையாடனும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.

பரிதாபமாக தவிக்கும் பாரதி
ஹேமாவின் கெஞ்சலுக்கு அனைவருமே ஓகே சொல்லிவிட்ட நிலையில், பாரதியிடம் ஹேமா நீங்கள் என்னை பெற்ற மகள் போலத்தான் இத்தனை நாளும் பார்த்துக் கொண்டிருந்தீர்கள் .ஆனால் நீங்கள் என்னிடம் சொன்ன பொய்யை என்னால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியவில்லை .அந்த ஒரு ஏமாற்றத்தில் இருந்து என்னால் வெளியே வர முடியவில்லை .அதனால் என்னை மன்னிச்சிருங்க. நான் எங்க அம்மா கூடவே போயிருதேன் என்று கையெடுத்து கும்பிட்டு ஹேமா அழுது படியே கண்ணம்மாவின் கையைப் பிடித்து வா அம்மா நம்ம வீட்டுக்கு போயிரலாம் என்று கூப்பிடுகிறார். கண்ணம்மாவும் வேறு வழியில்லாமல் ஹேமாவை கூட்டிக்கொண்டு வெளியே காத்திருக்கு ஆட்டோவில் ஏறுகிறார். ஹேமா பிரிந்து செல்வதை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதபடி பாரதி வாசலிலே பார்த்துக் கொண்டிருக்கிறார் .இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்து இருக்கிறது. இன்றைய எபிசோடு முழுக்க கண்ணம்மா, பாரதி மற்றும் ஹேமாவின் அழுகை சீன்கள் தான் ஒளிபரப்பாகி இருக்கிறது. கடைசியில் பரிதாபமான நிலையில் பாரதி தவித்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது பாவமாக இருக்கிறது. ஆனால் அந்த டிஎன்ஏ டெஸ்ட் இன்னும் எத்தனை நாள் கழித்து வரும் என்று தான் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications