என்னது பாரதிகண்ணம்மாவில் மீண்டும் முதலில் இருந்தா??கண்ணம்மாவை பார்த்து கதறும் ரசிகர்கள்
சென்னை: பாரதிகண்ணம்மா சீரியலின் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் இருக்கின்றனர்.
இந்த சீரியலின் புது கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷா வெளியிட்ட வீடியோ தான் ரசிகர்களை மட்டுமல்லாமல் சமூகவலைத்தையும் கவர்ந்துள்ளது.

நெட்டிசன்களை கவர்ந்த சீரியல்
விஜய் டிவியில் பரபரப்பாக முன்னணியில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 2019ஆம் ஆண்டு இந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அதற்குப் பிறகு டிசம்பர் 2020இல் இது எட்டு வருடங்களுக்கு பின்பு என்று இரண்டாவது பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இதுவரைக்கும் எந்த சீரியலிலும் இல்லாத வகையில் அதிகமாக மீம்ஸ்களால் கலாய்க்கப்பட்டது. இந்த சீரியலின் கண்ணம்மா கேரக்டரில் நடித்து வந்த ரோஷ்னி ஹரிப்ரியன் வெறுத்து போகும் அளவிற்கு மீம்ஸ் கிரியேட்டர்கள் கலாய்த்து வந்தனர்.

ரசிகர்களை கவர்ந்த கண்ணம்மாவின் வீரநடை
கனவரின் சந்தேகம் மற்றும் அதை இல்லை என்பதற்காக நிரூபிக்கும் மனைவியின் போராட்டத்தோடு இந்த சீரியல் கதை இப்ப வரைக்கும் தொடர்ந்து வருகிறது. ஆரம்பத்தில் இந்த சீரியல் மாமியார் மருமகளுக்கும் இடையில் இருக்கும் கருத்து வேறுபாடுகள் போன்று தொடங்கியது. பின்பு மாமியார் மருமகள் மீது பாசத்தைக் கொட்ட தொடங்கியதும், கணவர் சந்தேகத்தையும் வெறுப்பையும் காட்ட தொடங்கிவிட்டார். குழந்தை வயிற்றில் இருக்கும் போது வீராப்போடு வீட்டை விட்டு கிளம்பிய கண்ணம்மாவை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் வகைவகையாக கலாய்த்து வந்தனர்.

வில்லத்தனத்தை தொடங்கிய வெண்பா
தற்போது கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து இருந்தாலும் பாரதிக்கு அது இரண்டும் தன்னுடைய குழந்தை தான் என்று தெரியாமல் தான் இருந்து வருகிறது. ஒரு டிஎன்ஏ டெஸ்ட்டில் முடிந்துவிடும் விஷயத்தை இத்தனை வருடங்களாக இழுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், தற்போது பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் விவாகரத்து வேண்டி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் வீட்டில் ஒன்றாக வாழ சொல்லி கோர்ட் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கனவே இவர்களை பிரிப்பதற்காக வெண்பா பல்வேறு பிரச்சனைகளை கிளப்பிக் கொண்டிருந்த நேரத்தில் அவர் தற்போது குழந்தை பிறந்திருந்தால் கொஞ்ச நாட்கள் சீரியல் இல்லாமல் இருந்தார். ஆனால் மீண்டும் நடிப்பிற்கு வந்த வெண்பா தன்னுடைய வில்லத்தனத்தை காட்டத் தொடங்கிவிட்டார்.

மீண்டும் முதலில் இருந்தா?
ஒரு பக்கம் வெண்பாவின் வில்லத்தனம் சீரியலில் தொடங்கியிருக்கும் நேரத்தில் பாரதி மற்றும் கண்ணம்மாவிற்கும் இடையே ரொமான்ஸ் தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில் சாமியார் ஒருவர் பாரதியிடம் சில அறிவுரைகளை கூறியதால் பாரதி இனி திருந்தி விடுவாரா??என்று எதிர்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நேரத்தில் கன்னம்மாவாக நடிக்கும் வினுஷா சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று இருக்கிறது. இதை பார்த்ததும் நெட்டிசன்கள் மீண்டும் இவர்களை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே முதல் முறை எடுக்கவேண்டிய டிஎன்ஏ இன்னும் எடுக்கப்படாமல் இருக்கும் நிலையில் மீண்டும் கர்ப்பமா??என்று கலாய்த்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications