சீரியலா...சினிமாவா...தான் தொடர போவது இதுதான்.. பாவனியின் முடிவால் ரசிகர்கள் மகிழ்ச்சி
சென்னை: தன்னுடைய நடிப்பு பற்றி ரசிகர்களின் கேள்விக்கு அவர்களுக்கு சந்தோஷம் கொடுக்கும்விதமாக பாவனி பதில் கூறியுள்ளார்.
Recommended Video
சின்னத்திரையில் அறிமுகமான பாவனி வெள்ளித்திரை வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் அவருடைய உறுதியான முடிவு ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்திருக்கிறது.

சின்னத்திரையில் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதற்குப்பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி சீரியல் மூலமாகவும் குடும்பத் தலைவிகளையும், இளைஞர்களையும் தன்னுடைய நடிப்பால் கவர்ந்துள்ளார். சீரியல்களில் இவரை பார்த்து பல ரசிகர்கள் இவருக்கு ரசிகர்களாக மாறிய நிலையில் இவர் சீரியலை விட்டு விலகி இருந்தார். தொடர்ந்து ஒரு சில ஆண்டுகள் சீரியலின் பக்கம் தலை காட்டாமல் இருந்த இவர் மீண்டும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டுள்ளார்.

முதலாவதாக தொடங்கப்பட்ட ஆர்மி
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக பவானி ரெட்டி அறிமுகமானதும் இவருடைய சமூகவலைத்தள ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுத்து இருந்தது. அதனால் தான் இவருக்கு முதல் முதலாக ரசிகர்கள் பேன்ஸ் பேஜ்களை தொடங்கி ஆர்மிகளை அமைத்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக ரசிகர்களுடன் போட்டோ சூட்டின் மூலமாக நெருக்கமாக இருந்தார். இதனால் இவருக்கு அதிகமான ரசிகர்கள் சமூக வலைத்தளம் மூலமாக ஆதரவு தெரிவித்து வருகிறார்.

லைவில் ரசிகர்களுக்கு நன்றிகள்
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவர் ஐந்தாவது சீசனின் மூன்றாவது போட்டியாளராக வெற்றி பெற்றுள்ளார். இவருடைய வெற்றி இவருடைய ரசிகர்களால் இவருக்கு கிடைத்ததாக இருந்தாலும், தற்போது தன்னுடைய ரசிகர்களுக்கு நன்றி கூறி இன்ஸ்டாகிராமில் லைவ் வீடியோ வந்துள்ளார் .ஏற்கனவே இவர் ஒருமுறை லைவில் வந்து தன்னுடைய ரசிகர்களுக்கு பதிலளித்த நிலையில் தனக்கு கொரானா வந்துள்ளதாகவும் தான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு செய்தியை கூறியிருந்தார். தற்போது இவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் லைவ் வந்துள்ளார்.

இனி இதுதான் முடிவு
இவரிடம் தொடர்ச்சியாக பல்வேறு ரசிகர்கள் தங்களுடைய கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் உங்களுக்கு அடுத்ததாக சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதா?? என்று கேட்டதற்கு இது வரைக்கும் எந்த வாய்ப்புகளும் அப்படி வரவில்லை. ஆனால், அதற்காக தான் நான் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இன்னொரு ரசிகர் அப்போது சீரியலில் இனி வருவீர்களா?? என்று கேட்டதற்கு இனி சீரியலில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை... சினிமாவில் தன்னுடைய திறமையை காட்டுவதற்காகத்தான் காத்துக் கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார். இதைக் கேட்ட அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications