நெகட்டிவ் கருத்துக்களை எப்படி கையாளுவீர்கள்..?நச்சென்று பதில் கூறிய பாவனி.. வேற லெவல் அனுபவம்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிக்குப் பிறகு பவானி ரெட்டி தன்னுடைய ரசிகர்களின் கேள்விக்கு பதில் கூறுகிறார்.
தனக்கு வரும் நெகட்டிவ் கருத்துக்களை எப்படி சமாளிக்கிறீர்கள் என்ற ரசிகரின் கேள்விக்கு பாவனியின் பதில் பலருடைய வாழ்த்துக்களை பெற்று வருகிறது.

சீரியலில் நாயகி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் மூலமாக சின்னத் திரை ரசிகர்களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருந்த பாவனி பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் அடைந்து விட்டார். சமூக வலைத்தளத்தில் ஏற்கனவே பிசி ஆகவும் ஆக்டிவாகவும் இருக்கும் பாவனிக்கு இளைஞர்கள் பட்டாளம் ரசிகர்களாக இருந்து வருகிறது. குடும்ப பெண்களை சீரியல்கள் மூலமாக தன் வசப்படுத்திய பாவனி, சமூக வலைத்தளத்தில் போட்டோ சூட் மூலமாக ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

வழக்கமான நெகட்டிவ் கருத்துக்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு வரைக்கும் பாவனியை பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளாத ரசிகர்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருடைய சோக கதையை கேட்டு அவருக்கு அதிகமான ஆதரவு கொடுக்க தொடங்கிவிட்டனர்.ஒரு சில ரசிகர்கள் பாவனியின் நடவடிக்கைகள் நடிப்பு என்றும் அவரைப்பற்றி சமூகவலைத்தளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகிறார். ஆரம்பத்திலிருந்தே பாவனி அவருடைய திருமண வாழ்க்கையில் கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவர் தற்கொலை செய்து கொண்டதை வைத்து அதிகமாக நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்ததாம். அது மட்டுமல்லாமல் தற்போது கூட பிக் பாஸ் நிகழ்ச்சியில் பல செயல்கள் நடந்ததும் பாவனிக்கு எதிராக நெகட்டிவ் கருத்துக்களை தோன்ற வைத்துள்ளது.

பாவனியின் அசத்தல் பதில்
பாவனி பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதை தற்போது கூட அல்டிமேட் நிகழ்ச்சியில் அனிதா மற்றும் ஒருசில போட்டியாளர்கள் பாவனி என்ன விளையாட்டு விளையாடி விட்டார்?? எதனால் அவருக்கு மூன்றாவது இடம் வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது..?? என்று பாவனியைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தனர். இந்த மாதிரி குறை கூறுபவர்களை பற்றியும் நெகட்டிவ் கருத்துக்களையும் எப்படி நீங்கள் சமாளிக்கிறீர்கள் என்று ஒரு ரசிகை கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பாவனி அதை எல்லாம் இக்நோர் பண்ணிவிட்டு போய்க்கொண்டே இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பாவனியின் சூப்பர் பாலிசி
பாவனி சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்தாலும் தனக்கு வரும் பாசிட்டிவ் கமெண்டுகளுக்கு மட்டும்தான் செவி சாய்க்கிறார். நெகட்டிவ் கருத்துக்களை பற்றி கண்டு கொள்வதே இல்லையாம். நாம் என்ன செய்தாலும் அதில் குறை கூறுவதற்கு என்று ஒரு சிலர் இருந்து கொண்டுதான் இருப்பார்கள். அவர்களைப் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருந்தால் நமக்கு நல்லது நினைக்கும், சொல்லும் நபர்களை நாம் மறந்து விடுவோம். அதனால் நெகட்டிவ் கருத்துக்களை கூறுபவர்களை கண்டு கொள்வதே கிடையாது என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பாவனி யூடியூப் பக்கமே செல்லவே மாட்டாராம். போட்டோ ஷூட் நடத்தி அதை போஸ்ட் போடுவதோடு சரி அதற்கு வரும் கமெண்டுகளை பல முறை தான் படிப்பதே இல்லை என்று கூறியிருக்கிறார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications