அஸ்வினுக்கு மோட்டிவேஷன் கூறிய பாவனி... வேற லெவல் எக்ஸ்பிரஷன்
சென்னை: அஸ்வினுக்கு அதிகரித்து வரும் நெகட்டிவ் கமெண்டுகளுக்கு பாவனி பதில் கூறியுள்ளார்.
Recommended Video
பாவனியின் அசத்தலான அறிவுரைகளைக் கேட்டு அஸ்வின் ரசிகர்கள் நன்றிகளைக் கூறி வருகின்றனர்.

லைவில் பேசிய பாவனி
தற்போது நடந்து முடிந்த பிக் பாஸ் 5 சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்த பாவனி சமூக வலைத்தளத்தில் தன்னுடைய ரசிகர்களிடம் லைவில் பேசியுள்ளார். அப்போது அவர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் அஸ்வினுக்கு வாழ்த்துக்களை கூறி அவருக்கு எதிராக வரும் நெகட்டிவ் கமெண்ட்க்கு அஸ்வினுக்கு ஆதரவாக பதில் கூறியுள்ளார். சமீப காலமாகவே நெட்டிசன்கள் அஸ்வினை வாட்டி எடுத்து வருகிறார்கள் அதற்கு பாவனியின் கருத்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

நெட்டிசன்களிடம் மாட்டிய அஸ்வின்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் அதிகமாக கவர்ந்த இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக இவருக்கு வெள்ளித்திரையில் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவரைக்கும் ஆல்பம் சாங் மற்றும் குறும்படங்களிலும் நடித்து வந்த அஸ்வின் முதல் முறையாக என்ன சொல்லப் போகிறாய் என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது நெட்டிசன்கள் பலரையும் கலாய்க்க வைத்துள்ளது. இவருக்கு எதிராக பலர் சமூக வலைத்தளத்தில் கமெண்ட்களை அளித்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் அதிகமான மீம்ஸ்கள் வந்து கொண்டிருக்கிறது.

பாவனியின் கருத்து
ஏற்கனவே சின்னத்திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பெரிய அளவில் பலருக்கும் பரிச்சயமான பவானி ரெட்டி அஸ்வின் பற்றி உருக்கமாக பேசியுள்ளார். என்ன தான் இருந்தாலும் ஒரு குழந்தையாக இந்த சினிமா துறையில் காலடி எடுத்துவைத்து அஸ்வின் உயர்ந்திருக்கும் உயரம் பெரியது தான். இந்த நேரத்தில் இவர் குழந்தைத்தனமாக பேசியதை வைத்து பலரும் இவருக்கு நெகட்டிவ் கமெண்ட்களைக் கொடுத்து வருகின்றனர். எந்த சூழ்நிலையிலும மனம் தளராமல் முன்னேறி வருவது தன்னுடைய வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் கூறியுள்ளார்.

பாவனியின் வாழ்த்துக்கள்
எவ்வளவு நெகட்டிவ் கமெண்ட்களோடு போராடி வந்துகொண்டிருக்கும் அஸ்வின் ஒவ்வொரு இடமும் தனக்கு தடையாகவும் தோல்வியில் முடிந்தாலும் மனம் தளரவே இல்லை. இதனால் மீண்டும் பழைய இடத்திருக்கு வந்து வெற்றி பெறவார். அதுமட்டுமல்லாமல் தான் சின்னத்தம்பி சீரியலில் நடிக்கும் போது முதலில் இப்படித்தான் தனக்கு நடந்ததாகவும், பின்பு அது வெற்றி பெற்றது போல விரைவில் அஸ்வின் வெற்றி அடைவார் என்று கூறியுள்ளார். அஸ்வினின் ரசிகர்கள் இந்த வீடியோவோடு அஸ்வின் வீடியோவை எடிட் செய்து ஷேர் செய்து ரசிகர்கள் வருகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications