எதிர்பார்த்த தருணம் நிறைவேறிய மகிழ்ச்சியில் அமீர்..குவியும் வாழ்த்துக்கள்.. திறமைக்கு கிடைத்த வெற்றி
சென்னை: டான்ஸ் மாஸ்டர் அமீர் பல நாட்களாக ஆசைப்பட்டது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் இணையதளத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் வாழ்த்துக்களைப் பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமீர் இருக்கும் போது, தான் பிரபுதேவா மாஸ்டரின் தீவிரமான ரசிகர் என்று கூறி இருக்கிறார். இன்று பிரபுதேவா உடன் புகைப்படம் எடுத்து அதை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக வைல்ட் கார்டு என்ரியாக உள்ளே நுழைந்து டான்ஸ் மாஸ்டர் அமீர் கடைசி வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நான்காவது இடத்தில் வெற்றி பெற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு சில டான்ஸ் நிகழ்ச்சிகளில் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அதே நிலையில் இவருடைய மாணவர்களையும் டான்ஸ் ஆட வைத்து பல வெற்றி பரிசுகளையும் பெற்று இருக்கிறார்.

அடைக்கலம் கொடுத்த குடும்பம்
ஆரம்பத்தில் இருந்து ஒரு சிங்கிள் மதரின் அம்மாவின் வளர்ப்பில் இருந்து வந்த அமீர் அவருடைய அம்மாவின் திடீர் இறப்பின் காரணமாக பல்வேறு சோதனைகளை அனுபவித்து வந்த நிலையில் அம்மாவின் ஆசைப்படியே ஒரு டான்ஸராக வேண்டும் என்ற வெறியோடு இவர் இருந்து வந்துள்ளார். அந்த நேரத்தில் தொடங்கிய பல செயல்கள் முடக்கப்பட்டு வந்தாலும் இவருக்கு உறுதுணையாக அஷ்ரப் என்பவரின் குடும்பம் இருந்துள்ளது. அஷ்ரப் என்பவரின் குழந்தைகள் அமீரிடம் டான்ஸ் கற்றுக் கொள்வதற்காக வந்த நிலையில் அமீரின் திறமையை பார்த்து அஷ்ரப் தங்களுடைய வீட்டில் ஒரு நபராகவே அமீரை மாற்றி இருக்கிறார்.

பிடித்த ரோல் மாடல்
அமீருக்காக அஷ்ரப் மற்றும் அவருடைய மனைவி இருவருமே குடும்பத்தில் பல்வேறு அவமானங்களை சந்தித்திருக்கின்றனர். ஆனாலும் அமீர் எப்படியாவது ஒருநாள் நல்ல நிலைக்கு வருவார் என்று தான் அவருக்காக பல உதவிகளை செய்து இருக்கின்றனர். தங்கள் வீட்டிலேயே அவருக்கு டான்ஸ் ஸ்கூல் வைத்துக் கொடுத்திருக்கின்றனர். இந்த நிலையில் சிறுவயதில் இருக்கும் போது பிரபுதேவாவின் தீவிரமான ரசிகராக அமீர் இருந்திருக்கிறார். அதனாலேயே அவருடைய அசைவுகள் பல பிரபுதேவாவை பிரதிபலிப்பதாக இருந்து வரும். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமீர் தன்னுடைய விளையாட்டு ஒரு பக்கம் என்றால் பாவனியோடு காதல் ரொமான்ஸ் ஒரு பக்கத்தில் இருந்து வந்தார்.

மகிழ்ச்சியும் பாராட்டும்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியிலும் பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு இருவரும் டைட்டில் ஜெயித்திருந்தனர். அதே நேரத்தில் தன்னுடைய காதலை அமீருடம் கூறி இருந்தார். தற்போது காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர்களில் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாக இருக்கின்றனர். அதை குறித்து ஏற்கனவே இவர்கள் சமூக வலைத்தள பக்கங்களில் கூறியிருந்தனர். இந்த நிலையில் இன்று அமீர் தனது ரோல் மாடலாக நினைக்கும் பிரபுதேவாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்து பதிவிட்டு இருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அதே நேரத்தில் அமீரின் வளர்ப்பு தந்தையான அஷ்ரப் இது பாராட்ட வேண்டிய தருணம் என்று பாராட்டி இருக்கிறார்.
-
உருவ கேலியால் உடைந்த மனம்... அந்த நடிகர் கேட்ட கேள்வியால் கதறி அழுதேன்.. நடிகை ஊர்வசி உருக்கம் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
"40 வயசுல 25 வயசு மாதிரி இல்லை..." சர்ச்சைகளுக்கு மத்தியில் திரிஷா போட்ட பதிவு! யாருக்கு கொடுத்த பதில்? -
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
சிறகடிக்க ஆசை: முத்துக்கு இவ்வளவு பெரிய சோதனையா? பைனான்சியர் சொன்ன கண்டிஷன்.. நெஞ்சுவலியில் அண்ணாமலை -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications