போட்டியாளர்களின் உறவினர்களின் சப்போர்ட்டை அள்ளும் ஒரே போட்டியாளர்..கடைசிநேரத்தில் திடீர் பாசங்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இது வரைக்கும் இல்லாத வகையில் தற்போது போட்டியாளர்களுக்கு சப்போர்ட் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
வழக்கமாக ரசிகர்கள் மட்டும் தான் போட்டியாளர்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள்.ஆனால், தற்போது போட்டி போடும் போட்டியாளர்களின் குடும்பமும் ஒரே போட்டியாளருக்கு சப்போர்ட் கொடுத்து வருவது அதிசயமாக இருக்கிறது.

வித்தியாசமான இந்த சீசன் நடவடிக்கை
குறிப்பாக ஐந்தாவது சீசன் ஆரம்பத்திலிருந்தே இதற்கு முந்தைய சீசன் களை விட வித்தியாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவந்தனர். காரணம் இதில் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து குடும்பம் போல இருந்தனர். பொதுவாக பிக்பாஸ் என்றாலே சண்டை சச்சரவு பஞ்சமில்லாமல் இருக்கும். ஆனால் இந்த சீசன் வித்தியாசமாக ஆரம்பத்தில் ஒரு சில வாரங்களை கொண்டுவந்தனர். பின்பு வழக்கம் போல சண்டை போட்டாலும், அது முடிந்ததும் போட்டியாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.

மறைமுகமாக கூறப்பட்ட கருத்து
இதற்கு முந்தைய சீசன்களில் போட்டியாளர்களில் குறிப்பாக இவர் தான் டைட்டிலை ஜெயிக்க போகிறார் என்று ரசிகர்கள் ஒரு சில வாரங்களில் முடிவு எடுத்து விடுகின்றனர். அதே போலத்தான் இந்த சீசனில் இருந்து தன்னுடைய காமெடி மட்டுமல்லாமல் திறமையின் மூலமாக அனைவரிடமும் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருப்பவர் ராஜூ. ராஜூ தான் ஜெயிப்பார் என்பது ரசிகர்கள் பலருடைய கருத்தாக இருந்தது. போட்டியாளர்களின் உறவினர்கள் கூட பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்போது இதைத்தான் பலமுறை மறைமுகமாக எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர்.

கடந்த சீசனிலும் இப்படித்தான். .
தற்போது இந்த சீசன் முடிவடைய ஒருநாள் இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் ராஜுவுக்கு அதிகமான ஆதரவு குவிந்து வருகிறது. பிரபலங்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களின் உறவினர்கள் கூட இந்த சீசனை யார் ஜெயிப்பார்கள் என்று தங்களுடைய கருத்து என்னவென்று கேட்டால் ராஜுவின் பெயரை தான் கூறி வருகிறார்கள். இது அதிசயமாக இருந்தாலும் ஏற்கனவே கடந்த சீசனில் ஆரியை இப்படித்தான் அனைவரும் புகழ்ந்து தள்ளினார்கள் அதுபோலத் தான் இதுவும் என்று சிலர் கருத்து கூறி வருகின்றனர்.

இமான் அண்ணாச்சி பேசிய வார்த்தை
வெளியே இருக்கும் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கும் கூட இந்த சந்தேகம் பல வாரங்களுக்கு முன்பே தோன்றி விட்டது. நிரூப் ஏற்கனவே பிரியங்கா மற்றும் ராஜு இவர்கள் இருவரும் தான் முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று அவர் வெளிப்படையாக கூறிவிட்டார். முதல்முறையாக கதை சொல்லும் டாஸ்க்கில் இமான் அண்ணாச்சி இந்தமுறை டைட்டிலை ஒரு காமெடி நடிகர் தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்று கூறியது போல தற்போது காமெடி நடிகர் தான் ஜெயிக்க போகிறார் என்று பலரும் சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

குவியும் எதிர்பாராத ஆதரவுகள்
ராஜுவின் உடன் நடிக்கும் நடிகர்கள் மட்டுமல்லாமல் நண்பர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஓட்டு போட சொல்லி ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர். இந்தநிலையில் அமீரின் குடும்பம் கூட அமீர் முதல் மூன்று இடங்களுக்குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கின்றனர். யார் ஜெயிப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் என கேட்டதற்கு மக்களின் எதிர்பார்ப்பு படி நானும் ராஜு தான் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என கூறியிருக்கின்றனர். ஏற்கனவே தாமரை செல்வியின் குடும்பம் இதை கூறிவிட்ட நிலையில், பிக் பாஸ் வீட்டை விட்டு எலமினேஷன் ஆன போட்டியாளர்களின் பலருடைய குடும்பத்தினரும் ராஜூவுக்கு தான் ஆதரவு தெரிவித்து வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications