Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அபிஷேக்கை அசிங்கப்படுத்திய பிக்பாஸ்..கலாய்த்து தள்ளிய பிரியங்கா

Subscribe to Oneindia Tamil

சென்னை : எதை செய்ய சொன்னாலும் செய்யாமல் சுற்றிவரும் அபிஷேக்குக்கு பிக் பாஸ் வார்னிங் கொடுத்திருக்கிறது.

இதைத்தான் எதிர்பார்த்தோம் என்று நெட்டிசன்கள் ஒருபுறம் ஆரவாரமிட்டு வருகின்றனர்.

மைக்கை சரியாக மாட்டாமல் அடுத்தவர்களை கலாய்ப்பதில் குறியாக இருக்க கூடாது என்று ரசிகர்கள் ஒரு புறம் அறிவுரையும் கூறி வருகின்றனர்.

கலகலப்புக்கு பஞ்சம் இல்லை

கலகலப்புக்கு பஞ்சம் இல்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி ஐந்தாவது சீசனில் ரசிகர்கள் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. நிகழ்ச்சி இதற்கு முன்பு பல சீசன்களில் ஒளிபரப்பாகி வந்தாலும், அதை எல்லாம் பின்னுக்குத் தள்ளும் வகையில் இந்த சீசன் இதுவரைக்கும் கலகலப்பாகவும் ஜாலியாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் இதில் பல புதுமுகங்கள் அறிமுகமாகி இருந்தாலும் அவர்கள் அனைவருமே ஒரு கூட்டுப் பறவை போல சுற்றி வருவது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், எத்தனை நாள் இந்த மாதிரி இருக்க போகிறார்கள் என பலர் கூறி வருகின்றனர்.

புதுமுக போட்டியாளர்கள் அதிகம்

புதுமுக போட்டியாளர்கள் அதிகம்

தமிழ்நாட்டு போட்டியாளர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் போட்டியாளர்கள் இந்த சீசனில் அறிமுகமாகின்றனர். அது மட்டுமல்லாமல் பெண் போட்டியாளர்கள் அதிகமாக இருக்கும் நிலையில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது என்று ரசிகர்கள் கூறி வந்தனர். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் மீறி போட்டியாளர்கள் அனைவருமே ஒற்றுமையோடு இருந்து கொண்டிருந்தனர். ஒரு சில நேரங்களில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் வயதில் மூத்த போட்டியாளர்கள் அதனை சரி செய்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் இதற்கு முன்பு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் அனைத்தையும் நன்றாக பார்த்து விட்டு தான் இந்த போட்டியாளர்கள் இந்த முறை வந்திருக்கின்றனர்.

நெகட்டிவ்வர்ஸ்களுக்கு கொண்டாட்டம்

நெகட்டிவ்வர்ஸ்களுக்கு கொண்டாட்டம்

முதல் சீசனில் இருந்து இதுவரைக்கும் பல போட்டியாளர்கள் பாடகராகவும், நடிகராகவும் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமான முகங்களாக இருப்பர். ஆனால் இந்த முறை அந்த மாதிரி அதிகம் இல்லாததால் நிகழ்ச்சியில் சுவாரசியம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ஒவ்வொரு நாளும் கன்டன்ட் கொடுப்பதற்காகவே ஒரு சில போட்டியாளர்கள் இருந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஒருவராக அபிஷேக் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே யூடியூப் சேனல் மூலமாக பலருக்கும் பரிச்சயமானவர் தான். ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்று தெரிந்ததும் இவருக்கு அதிகமாக இருக்கும் நெகட்டிவ்வர்ஸ் அப்போ செம என்டர்டைன்மென்ட் இருக்கு என்று கூறி வந்தனர்.

ப்ரியங்கா கலாய்ப்பு

ப்ரியங்கா கலாய்ப்பு

இந்த சீசனில் ஒருசிலர் வந்த இடம் தெரியாமல் அமைதியாக இருந்து கொண்டிருக்கும் நேரத்தில் இவர் எல்லா இடங்களிலும் அட்டென்டன்ஸ் போட்டு விடுகிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி ரிவ்யூ எடுத்து பலருக்கும் பயத்தையும் காட்டி விடுகிறார். தற்போது இவர் அனைவரையும் கலாய்த்துக் கொண்டு இருந்ததை பார்த்து பிக் பாஸ் இவரை சரியாக மைக்கை மாட்டும்படி எச்சரித்திருக்கிறது. அதைப் பார்த்ததும் பிரியங்கா அபிஷேக் அசிங்கப்பட்டான் அபிஷேக் என்று கலாய்த்து தள்ளியிருக்கிறார். இதை பார்த்ததும் நெட்டிசன்கள் இதை கொண்டாடி ட்ரோல் வீடியோக்களில் இந்த சீனை சேர்த்துவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+