பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ
சென்னை: தவெக தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து விமர்சித்து வரும் பிக் பாஸ் ஜூலி, மீண்டும் ஒரு புதிய வீடியோ மூலம் பரபரப்பை கிளப்பியிருக்கிறார். ஏற்கனவே விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை எதிர்த்து பேசியதன் பின்னர் தனது வாழ்க்கையே பாதிக்கப்பட்டுவிட்டதாக செய்தியாளர்களை சந்தித்து பேசியிருந்த ஜூலி, தற்போது வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான ஜூலி, அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆனால் அந்த புகழ் நீண்ட காலம் நீடிக்கவில்லை. சின்னத்திரை மற்றும் சினிமாவில் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், மீண்டும் தனது செவிலியர் பணியையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அரசியல் கருத்துக்களால் அடிக்கடி செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். குறிப்பாக தவெக மற்றும் விஜய்யை நேரடியாக விமர்சித்து பேசியதன் மூலம் பல சர்ச்சைகளிலும் சிக்கினார்.

ஜூலி பேட்டி
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தன்னை குறிவைத்து சமூக வலைதளங்களில் பல்வேறு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக ஜூலி குற்றம்சாட்டியிருந்தார். "கிட்னி திருட்டு வழக்கில் என்னை தொடர்புபடுத்துகிறார்கள், என் குடும்பத்தைப் பற்றியும் அவதூறு பரப்புகிறார்கள்" என்று அவர் கண்ணீர் மல்க பேசியிருந்தார்.
குற்றச்சாட்டு
அதுமட்டுமல்லாமல், தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் விஜய்யை ஆதரிக்கும் சிலரின் தாக்குதல்களே காரணம் என மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். அந்த பேச்சு அப்போது பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய நிகழ்ச்சியை தொடர்ந்து ஜூலி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும்போது, "வேலூர் பரப்புரையில் விஜய் பேசியதில் ஒண்ணுமே இல்லைன்னு நான் சொன்னதுக்குத்தான் கிட்னி சட்னின்னு கொண்டு வந்தாங்க. இப்போ திருச்சியிலும் பெருசா ஒன்றும் இல்லைன்னு சொல்லத் தோணுது. ஆனா இப்போ அவர் நிர்வாகப் பொறுப்பில் இருக்கிறார். அதெல்லாம் பார்த்தா ரொம்ப பயமா இருக்குண்ணா... ரொம்ப பயமா இருக்கு" என்று பேசியுள்ளார்.
தவெகவினர் ரியாக்ஷன்
ஜூலியின் இந்த வீடியோ வெளியானதும் தவெக ஆதரவாளர்கள் பலரும் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். "முன்பு இருந்த அதே தைரியத்தில் பேச முடியாமல் தற்போது பயப்படுவது போல பேசுகிறார்", "கவனத்தை ஈர்க்கவே மீண்டும் விஜய் பெயரை பயன்படுத்துகிறார்", "திமுக ஆதரவுக்காக தொடர்ந்து தவெகவை விமர்சித்து வருகிறார்" என்று சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில் ஜூலிக்கு ஆதரவாக பேசும் தரப்பினரும் இருக்கிறார்கள். "தனக்கு நடந்ததை தான் வெளிப்படையாக சொல்கிறார்", "கருத்து சொல்லும் உரிமை அனைவருக்கும் இருக்கிறது" என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடங்காத ஜூலி?
கடந்த சில வாரங்களாகவே விஜய், தவெக, கிட்னி சர்ச்சை, பத்திரிகையாளர் சந்திப்பு, ஜென் Z நிகழ்ச்சி என தொடர்ந்து சர்ச்சைகளில் இடம்பிடித்து வரும் ஜூலி, தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோ மூலம் செய்திகளில் இடம்பிடித்துள்ளார்.
ஏற்கனவே தனது கருத்துக்களால் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள அவர், இனியும் தவெக குறித்து தொடர்ந்து பேசுவேன் என்ற நிலைப்பாட்டில்தான் இருப்பதாக அவரது சமீபத்திய நடவடிக்கைகள் காட்டுகின்றன. இந்த நிலையில் ஜூலியின் புதிய வீடியோவுக்கு தவெக தரப்பில் இருந்து ஏதேனும் நேரடி பதில் வருமா? அல்லது சமூக வலைதள விவாதமாகவே இது முடிவடையுமா? என்பது தான் தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள கேள்வியாக இருக்கிறது.
-
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா!












Click it and Unblock the Notifications