என்ன நடந்தாலும் அன்றாட வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும்... நேரடியாக நாமினேஷனுக்கு செல்லும் நபர்
சென்னை: டாஸ்க்கில் விதிமீறும் போட்டியாளர்கள் நேரடியாக நாமினேஷன் செய்யப்படுவார்கள் என்று பிக்பாஸ் பயங்கரமான திட்டத்தை தீட்டி இருக்கிறது.
டேய் சும்மா இருடா...என்று டாஸ்கிற்க்கு புது பெயர் வைத்திருக்கிறது பிக்பாஸ்.
என்ன நடந்தாலும் வேலையில் கவனம் இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு டாஸ்க் வைத்து போட்டியாளர்களை வைத்து செய்ய தொடங்கிவிட்டதா??பிக்பாஸ் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

புதுமாதிரி தலைப்பு
பிக்பாஸ் போட்டியில் ஒவ்வொரு டாஸ்க்கும் வித்தியாசமாக தலைப்புகளில் வைத்து போட்டியாளர்களை மட்டுமல்லாமல் பார்க்கும் ரசிகர்களுக்கும் சில நேரங்களில் என்டர்டைமெண்ட் கொடுத்துவிடுகிறது. பல நேரங்களில் மொக்கையாகவும் செய்துவிடுகிறது. அது போலத்தான் தற்போதைய டாஸ்க் கூட வித்தியாசமான தலைப்புகளில் அமல்படுத்த பிக்பாஸ் நினைத்து இருக்கிறது. ஆனாலும் அதிலும் எந்த மாதிரி பிரச்சனை வருமோ என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்

பிக்பாஸ் ஸ்கிரிப்ட்டா??
பிக்பாஸ் டாஸ்க் என்றாலே அதில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டியாளர் போர் கொடியை தூக்கி கொண்டு இருக்கிறார். சில நேரங்களில் அவர்கள் தெரிந்து செய்கிறார்களா??அல்லது தெரியாமல் இப்படி செய்கிறார்களா??என்று ரசிகர்கள் குழம்பி வருகின்றனர். இன்று போட்டி போட்டு சண்டை போடும் போட்டியாளர்கள் அடுத்த நாளே சமாதானம் ஆகி விடுகின்றனர். அதனால் இதில் ஸ்கிரிப்ட் தானா என்று பலருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. ஆனாலும் ஒரு சில நேரங்களில் இவர்களுடைய ஆக்ரோஷத்தை பார்த்து இது உண்மைதான் என்று நம்பவும் தோன்றுகிறது.

டேய் சும்மா இருங்கடா டாஸ்க்
நேற்றைய கனா காணும் காலங்கள் டாஸ்கில் ஸ்கூல் லைஃபை கொண்டுவந்த பிக் பாஸ் இன்று வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்தும் வகையில் டேய் சும்மா இருங்கடா...என்று தலைப்பிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் என்ன நடந்தாலும் தனது அன்றாட வேலையில் கவனமாக செய்து கொண்டிருக்கவேண்டும் அதில் கவனத்தை சிதற விட்டால் அவர்கள் நேரடியாக நாமினேஷன் செய்ய தகுதியை உடையவர்களாக மாறி விடுகிறார்கள் என்று பிக்பாஸ் விதியை அண்ணாச்சி உரக்கப் படித்துக் கொண்டிருக்கிறார்.
Recommended Video

டாஸ்க்கை மறந்த பிரியங்கா
அண்ணாச்சி படித்து முடித்ததும் போட்டியாளர்கள் தங்களுடைய அன்றாட வேலைகளை தொடங்கி விட்டார்கள். அதுவும் ராஜூ தனக்கே உரிய அந்த நையாண்டி தனத்தோடு பேசி கொண்டிருக்கிறார். என்னதான் இவர்கள் தங்களுடைய வேலையில் கவனமாக இருந்தாலும் அடுத்த பக்கத்தில் பிக்பாஸ் பணியாளர்கள் உள்ளே கேக் கொண்டு வைத்து ஒரு சில வேலைகளையும் செய்து கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக பிக்பாஸ் கதவு திறந்து கொண்டிருக்கிறது. இதை பார்த்ததும் டாஸ்கை மறந்து பிரியங்கா யாரோ வருகிறார்கள் என்று கத்திக் கொண்டு ஓடுகிறார். இதை பார்த்து சக போட்டியாளர்கள் அவருக்கு அலாட் கொடுத்தாலும் அவர் கண்டுகொள்ளவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications