திருமணத்திற்குப் பிறகு நான் நினைத்த மாதிரி இல்லை கன்னிகா.. சினேகனின் பீலிங்க்
சென்னை: திருமணத்திற்கு பிறகு கன்னிகா பற்றி தான் நினைத்தது தவறு என்று சினேகன் கூறியுள்ளார்.
குறையாத காதலோடு சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பதை பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

எட்டு வருட காதல்
பாடல் ஆசிரியரான சினேகனும் நடிகையான கன்னிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதல் ரசிகர்கள் பலருக்கும் ஆரம்பத்தில் அதிர்ச்சியை கொடுத்திருந்தது காரணம், இவர்களுடைய வயது வித்தியாசம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் ஆரம்ப முதலே இவர்களுடைய தீவிர ரசிகர்கள் இவர்களை வாழ்த்தி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் சினிமா துறையில் இருப்பவர்கள் பலர் ஒரு சில வருடங்களிலே திருமணத்திற்கு பிறகு பிரிந்து விடும் நிலையில், எட்டு வருடங்களாக காதலித்து அதே காதலோடு தற்போது வரைக்கும் வாழ்ந்து வரும் சினேகன் மற்றும் கன்னிகா தம்பதியினர் ரசிகர்களின் மத்தியில் நன் மதிப்பை பெற்றுள்ளனர்.

மனைவிக்காக மாறிய சினேகன்
சினேகன் மற்றும் கன்னிகா இருவரும் பிசியாக இருந்தாலும் வாழ்க்கை என்று வரும்போது இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து தங்களுடைய காதலை குறையாமல் வைத்துக் கொண்டு வருகிறார்கள். சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் கன்னிகா அடிக்கடி தன்னுடைய காதல் கணவரான சினேகன் மீது இருக்கும் பாசத்தை வெளிப்படுத்தும் விதமாக போஸ்ட் வெளியிட்டு வருவார். அந்த வகையில் திருமணத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தை அதிகமாக பயன்படுத்தாத சினேகன் தற்போது தனது காதல் மனைவியின் ஆசைக்காக பல வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

பிடித்துப் போன குணம்
சினேகன் ஆரம்பத்தில் கன்னிகா சாதாரணமாக அனைத்து பெண்களும் இருப்பது போல தான் திருமணத்திற்கு பிறகும் இருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் திருமணத்திற்கு பிறகு கன்னிகாவை பார்த்து பல நேரங்களில் பெருமை பட்டிருக்கிறாராம். அதற்கு காரணம் தன்னுடைய அம்மாவை போலவே குடும்பத்தை வழிநடத்தி சென்று கொண்டிருப்பது என்று கூறி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பிற பெண்களைப் போல தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று ஒருபோதும் அவர் சிநேகனை கஷ்டப்படுத்தியதே கிடையாதாம்.

பலருக்கும் இப்படி கிடைக்காது
திருமணத்திற்குப் பிறகு கன்னிகா அதிகமாக செலவு செய்வதை குறைத்துக் கொண்டாராம். அதனால் சினேகனாக இதை வாங்கிக் கொள் என்று சொன்னால் கூட அதைப்பற்றி அதிகமாக யோசித்து கொண்டிருப்பாராம். இதை பார்க்கும் போது தான் கன்னிகாவை பற்றி நினைத்தது தவறு என்று கூறி இருக்கிறார். சினேகனை விடவும் சினேகன் உடைய உறவினர்களிடம் அதிகமாக கன்னிகா பாசமாகவும் குடும்பத்தை ஒற்றுமையாகவும் வைத்திருக்கிறாராம். அதனால் தான் கன்னிகாவை தப்பாக குறைவாக மதிப்பிட்டு விட்டேன் என்று சினேகன் கூறியிருக்கிறார். இதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் பலர் இதே போல நீங்கள் பல நாட்கள் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications