Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் வீட்டிற்குள் ஆயிஷாவிற்கு திடீர் உடல்நிலை குறைவு..காரணம்!? பிரார்த்திக்கும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஆயிஷாவின் உடல்நிலை திடீரென மோசமாக மாறி இருக்கிறது.

இரண்டு நாட்களாக அதிகமாக அழுது கொண்டிருந்த ஆயிஷாவின் நிலைமையை பார்த்து சக போட்டியாளர்கள் ஒரு நிமிடம் பயந்து போயிருக்கிறார்கள்.

ஆயிஷாவிற்கு உடனடியாக முதலுதவி கொடுக்கப்பட்டு பின்பு அவருடைய உடல்நிலை தேறி இருக்கிறது என்று பிக் பாஸ் கூறியிருக்கிறார்.

தொடங்கியது சண்டைக்கச்சேரி

தொடங்கியது சண்டைக்கச்சேரி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசன் தற்போது மூன்றாவது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நாளில் போட்டியாளர்கள் தங்களுடைய ஒரிஜினல் முகங்களை காட்ட தொடங்கி இருக்கின்றனர். எப்படியும் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு வாரங்களுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் மட்டும்தான் இருக்கும் அதற்கு பிறகு தான் போட்டியாளர்கள் தங்களுடைய சுய உருவத்தை காட்டி சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவார்கள் என்று அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே தொடங்கி விட்டார்கள்.

சத்யா சீரியல் ஆயிஷா

சத்யா சீரியல் ஆயிஷா

ஆறாவது சீசனில் நிகழ்ச்சிக்கு என்டர்டைன்மென்ட் ஆக ஜிபி முத்து இருந்து வருகிறார். இவருடைய அல்டிமேட் காமெடி போட்டியாளர்களையும், ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்து வருகிறது. ஜிபி முத்துவின் செய்கையை பார்த்து தனலட்சுமி காண்டாகி வருகிறார். அதை இன்றைய ப்ரோமோ மட்டும் அல்லாமல் ஹாட்ஸ்டாரிலும் பார்க்க முடிந்தது. ஆனால் மீதம் இருக்கும் போட்டியாளர்கள் ஜி பி முத்துவோடு நன்றியாக செட் ஆகி விட்டனர். ஜீ தமிழில் சத்யா சீரியலில் நடித்து வந்த ஆயிஷா இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

ரவுடி பேபி

ரவுடி பேபி

சத்யா சீரியலில் ரவுடி பேபியாக கலக்கி வந்த ஆயிஷா பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுது அலுமூச்சியாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறார்.
முதல் நாளில் அவருக்கும் அசல் கோளார்க்கும் பிரச்சனை ஏற்பட்டது. அடுத்த இன்று, ஆயிஷாவோடு நேற்று வரை ஜாலியாக விளையாடி சுற்றி வந்த ஜனனி இன்று சண்டைக்கு மல்லுக்கட்டி இருக்கிறார். இந்த நிலையில் தான் பேசும் ஸ்லாங்கில் மிஸ்டேக் இருக்கிறது என்று ஆயிஷா கதறி இருந்தார். தற்போது அவருக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது வீசிங் ப்ராப்ளம் வந்திருக்கிறது. ஏற்கனவே அவருக்கு ஜலதோஷம் சளி இருப்பதால் இவரால் மூச்சு விட முடியாமல் தவித்து இருக்கிறார்.

திடீர் உடல் நலக்குறைவு

திடீர் உடல் நலக்குறைவு

சக போட்டியாளர்கள் ஆயிஷாவிற்கு முதலுதவி செய்தாலும் ஆயிஷாவால் மூச்சு விட முடியாமல் தவித்து இருக்கிறார். அதற்கு பிறகு பிக் பாஸ் அழைத்து அவருக்கு மருத்துவ குழுவினரோடு முதலுதவி அளிக்கப்பட்டு இருக்கிறது. பின்பு இவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும் வீட்டிற்குள் வந்திருக்கிறார். வந்த பிறகு நேற்றைய டாஸ்க் மூலமாக வீட்டை விட்டு வெளியே இருந்த நான்கு போட்டியாளர்களுக்கு இன்று ஒரு சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் உள்ளே இருக்கும் யாரை நீங்கள் வெளியே இருக்க வைக்க போகிறீர்கள் என்று பிக் பாஸ் கேட்டிருக்கிறார். அதற்கு ஜனனி ஆயிஷா பேரை கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ரவுடி பேபி ஆயிஷா மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்திப்பதாக மீம்ஸ்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+