Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக் பாஸ் உள்ளே மீண்டும் வந்த ரச்சிதா.. அந்த ஒரு நபரை மட்டும் புறக்கணிப்பு.. உண்மையை உளறி விட்டாரே

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்குள் மீண்டும் ரச்சிதா இன்று வந்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த ரச்சிதா உள்ளே இருக்கும் ராபர்ட் மாஸ்டரிடம் மட்டும் எதுவும் பேசாமல் தவிர்த்து இருக்கிறார்.

உள்ளே இருக்கும் அனைத்து போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய ரச்சிதா ராபர்டிடம் மட்டும் பேசாததை குறித்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள்

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு மீண்டும் ரச்சிதா இன்று வந்திருக்கிறார். ஏற்கனவே ஆரம்பத்தில் இருந்து எவிக்ட் ஆகிய போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த வண்ணமாக இருக்கும் நிலையில் இன்று ரச்சிதாவின் வருகை அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. அதனால் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்கு நான் போகப்போகிறேன் என்று நேற்று வெளியிட்ட பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து எப்போது வருவார் என்று ஆர்வத்தோடு காத்திருந்தனர். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்ததும் ரச்சிதா செய்த செயல் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

கண்டுக்கவே இல்லை

கண்டுக்கவே இல்லை

பிக் பாஸ் வீட்டில் அனைவரிடமும் சகஜமாக பேசி பழகிய ரச்சிதா அங்கே இருந்த ராபர்ட் மாஸ்டரை மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. இதை ரசிகர்கள் பலரும் 24 மணி நேரத்தில் நோட் பண்ணி இருக்கின்றனர். அதை குறித்து லைவில் பலர் சாட் செய்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே ராபர்ட் மாஸ்டரால் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய பெயர் எந்த அளவிற்கு அடிபட்டது என்பதை ரச்சிதா வெளியே வந்து நன்றாக பார்த்துவிட்டார். அதனால் தான் ரச்சிதா இப்போது சரியாக நடந்து கொண்டு இருக்கிறார் என்று ஒரு சிலர் கருத்து கூறி வந்தாலும், ராபர்ட் மாஸ்டர் இப்பவும் எந்த இடத்தில் இருந்தாலும் அங்கே இருந்து ரச்சிதாவை பார்த்த வண்ணமாகவே இருக்கிறார் என்று சிலர் அதில் கலாய்த்து வருகின்றனர்.

இல்லாத நேரத்தில் நடந்தவை

இல்லாத நேரத்தில் நடந்தவை

ராபர்ட் மாஸ்டர் நேரடியாக ரச்சிதாவிடம் பேசவில்லை என்றாலும் அவருடைய பார்வை மட்டும் ரச்சிதாவை விட்டு அகலவே இல்லையே என்று சிலர் கலாய்த்து கொண்டிருக்கும் நேரத்தில் ரச்சிதா பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதும் நான் இல்லாத நேரத்தில் கூட என்னுடைய பெயர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி ஒழித்துக் கொண்டே இருக்கிறது என்று இரு தினங்களுக்கு முன்பு அசீம் ராபர்ட் மாஸ்டரிடம் ரச்சிதாவை குறித்து பிரச்சனை செய்ததை பற்றி பேசி இருக்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது வெளியே என்ன நிலவரம் என்பதை பற்றி பேசக்கூடாது என்று சொல்லி அனுப்பி இருந்தாலும் ரச்சிதா தன்னையும் மீறி அன்று நடந்த நிகழ்வுகளை பேசிக் கொண்டிருக்கிறார்.

எல்லாத்தையும் சொல்லிட்டாரே

எல்லாத்தையும் சொல்லிட்டாரே

பிக் பாஸ் 24 மணி நேர எபிசோடை ஹாட்ஸ்டாரில் எதார்த்தமாக பேசிக் கொண்டிருக்கும்போது பார்த்ததாகவும் அப்போது அங்கே ரச்சிதா ரச்சிதா என்று பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. அதை பார்த்ததும் எனக்கே ஆச்சரியமாகிவிட்டது. வீட்டில் இருந்தவர்கள் இவரையும் டிவியையும் மாறி மாறி பார்த்தார்களாம். இதுவெல்லாம் உனக்கு தேவையா? என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்டார்கள், என்னவென்று தான் நடந்த பிரச்சனை அனைத்தையும் நான் பார்த்தேன் என்று ரச்சிதா கூறிக் கொண்டிருக்க, அது மட்டுமல்லாமல் அன்று அசீம் அனைவரும் வெளியே இருக்கும் போது அவசர அவசரமாக முகத்தை வாஸ் செய்துவிட்டு வந்தது முதலிய விஷயங்களையும் பட்டும் படாமல் போட்டியாளர்களோடு பேசிக் கொண்டிருக்க, அனைவரும் நாங்கள் அசீம் மேக்கப் போடுகிறார் என்று பிரச்சனை நடந்தபோது இதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தோம் என கூறிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே அனைவருக்கும் வார்னிங் கொடுத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் ரச்சிதா வெளியே உள்ள விஷயங்களை எல்லாம் பேசுவதை கவனிக்கவில்லை போல ஆனால் ரசிகர்கள் கவனித்து விட்டார்கள்.அதை குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+