கோபத்தை பற்றி பிக்பாஸ் கூறிய வார்த்தை கதறி அழுத அசீம்..கடைசி நேரத்தில் அசீம் ரசிகர்களுக்கு அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 103 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.

103வது நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பிக் பாஸ் வீட்டிற்குள் மொத்த வீடும் அசீமை எதிர்த்து விளையாடினாலும் முதல் முறையாக முழுமையாக விளையாடினார் என பிக் பாஸ் அசீமை பாராட்டி இருக்கிறார்.

அசீமுடைய கோபத்தை பற்றி பிக் பாஸ் கூறிய வார்த்தையை கேட்டு அசீம் கண்கலங்கி கதறி அழுதிருக்கிறார்.

இறுதிக்கட்டத்தில்

இறுதிக்கட்டத்தில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைய இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்று 103வது நாள் தொடங்கி இருக்கிறது. இதில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி கட்டத்தில் இருக்கின்றனர். இவர்களுக்கு சப்போர்ட் கொடுப்பதற்காக ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிட்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் மீண்டும் வந்திருக்கின்றனர் .அவர்கள் வெளியே நடக்கும் விஷயங்களை உள்ளே கூறக்கூடாது என்று பிக் பாஸ் அவர்களிடம் அறிவுறுத்தி இருக்கிறது. ஆனாலும் அதையும் மீறி வெளியில் நடக்கும் நிலவரங்களை பற்றி சிலர் கூறிக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு அடிக்கடி பிக் பாஸ் வார்னிங் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸின் பாராட்டு

பிக் பாஸின் பாராட்டு

இந்த நிலையில் கடைசி வாரத்தில் பிக் பாஸ், உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்களுக்கு பாராட்டுகளும், அவர்கள் இதுவரைக்கும் விளையாடிய விளையாட்டுகளுக்கு வாழ்த்துக்களையும் கூறிக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் இன்று அசீமுடைய விளையாட்டை பிக் பாஸ் பாராட்டி இருக்கிறார். அதில் இந்த மொத்த வீடும் எதிர்த்து நின்ற போதும் துளி கூட பயப்படாமல் எதிர்த்து நின்று போராடி விளையாடி மக்கள் மனதை வென்றிருக்கிறீர்கள் என்று கூறியிருக்கிறார். பின்பு அசீமுடைய AV காட்டப்படுகிறது. அதில் அசீம் இந்த வீட்டில் நான் தனியாகத்தான் கேம் விளையாட வந்தேன், இங்கு சம்பாதித்த இந்த நட்புகள் எல்லாத்தையும் வீட்டிற்கு வெளியேயும் வச்சிக்க விரும்புகிறேன் என்று கூறிய கிளிப்ஸ்கள் அதில் வருகிறது.

 சோகங்களால் கோபம்

சோகங்களால் கோபம்

பின்பு மனதில் நிறைய சோகம் இருந்தால் வெளியே நிறைய கோபம் இருக்கும் என்பார்கள் அந்த சோகங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு புது வாழ்க்கையை நோக்கி பயணிக்க ஆல் தி பெஸ்ட் என்று பிக் பாஸ் சொன்னதும், அசீம் கைகூப்பி கண்கலங்கி அழுது விடுகிறார். அவருடைய பேக்ரவுண்ட் சாங் தனி ஒருவன் நினைத்து விட்டால் என்ற பாடல் ஒலிக்கிறது. இந்த பிரமோ தற்போது அசீம் ரசிகர்களுக்கு மேலும் எனர்ஜி கொடுக்கும் விதமாக இருக்கிறது. ஏற்கனவே இன்று ஒரு நாள் மட்டுமே வாக்கு செலுத்தும் நிலை இருக்கும் நிலையில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

அசீம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

அசீம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

விக்ரமன் மற்றும் அசீம் இடையே அதிகமாக சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு கொண்டிருந்தாலும் இருவருடைய ரசிகர்களும் ஒருவரை மாற்றி ஒருவர் கருத்து மோதல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கடைசி வாரத்தில் அதிகமாக சமூக வலைதளத்தில் இவர்கள் இருவருக்கும் ஆதரவு வேண்டி ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அசீமை பிக்பாஸ் பாராட்டிய விதத்தை ரசிகர்கள் பலர் பாராட்டி இந்த சீசனின் டைட்டில் வின்னர் கண்டிப்பாக அசீமாகத்தான் இருக்க முடியும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+