பிக் பாஸிற்குள் வந்ததும் "அந்த நபரின்” சாயத்தை வெளுக்க வைத்த தனலட்சுமி.. வெளியேறுபவர் இவர்தானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 95 வது நாளுக்கான முதல் பிரமோ வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி மீண்டும் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கிறார்.
இந்த வாரம் நடைபெற்று வரும் சாக்ரிஃபைஸ் டாஸ்க் அமுதவாணன் தன்னுடைய தலைமுடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று வந்த டாக்ஸ்கை தனலட்சுமி நிறைவேற்றி இருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் நபர்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி யில் இன்னும் ஒரு சில நாட்களில் நிகழ்ச்சியை முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்த வண்ணமாக இருக்கின்றனர். அதுவும் குறிப்பாக பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக வந்து இருக்கின்றனர். ஏற்கனவே ஒரு சில சிறப்பு விருந்தினர்களும் இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து போட்டியாளர்களின் மனதை குழப்பி விட்டனர்.

குழப்பிய சிறப்பு விருந்தினர்கள்
இன்னும் ஒரு சில நாட்களில் பணப்பெட்டி டாஸ்க் தொடங்க இருக்கிறது. இந்த முறை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேற போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் உருவாகி இருக்கும் நிலையில் போட்டியாளர்களில் மனநிலையை மாற்ற வைத்து தங்களுக்கு இருக்கும் நெகட்டிவ் கருத்துக்களை மட்டுமே உள்ளே வந்த சிறப்பு விருந்தினர்கள் பேசி அனைவரையும் குழப்ப வைத்திருக்கின்றனர். இந்த வகையில் இந்த வாரத்தில் யார் பெட்டியை தூக்கிக்கொண்டு செல்வது என்று அவர்களுக்குள்ளே பேச்சுவார்த்தை நடந்து கொண்டு வருகிறது.

மீண்டும் வந்த தனலட்சுமி
இந்த நிலையில் போட்டியாளர்கள் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் சாக்ரிஃபைஸ் டாஸ்க் நடந்து வருகிறது. அதில் ஒரு சிலர் பிக் பாஸ் கூறிய சாக்ரிஃபைஸ்களை செய்து இருக்கின்றனர். குறிப்பாக மைனா நந்தினி தன்னுடைய முடியை குட்டையாக வெட்டி இருக்கிறார். அசீம் லுங்கி மற்றும் பனியனோடு வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது இன்று ஆறாவது நம்பர் என்று சொன்னதும் அனைவரும் தேடிப்பிடித்து கிச்சனுக்குள் இருக்கும் டிராயரை திறந்து பார்க்கின்றனர். அங்கு தனலட்சுமி இருந்து வருகிறார். அதை பார்த்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த வாரம் ஏடிகே தானா
தனலட்சுமி கையில் தான் ஆறாவது நம்பருக்கான பாம் இருக்கிறது. அமுதவாணன் தன்னுடைய தலைமுடியின் நிறத்தை மாற்ற வேண்டும் என்று இருக்கிறது. அதன்படி அமுதவாணனுக்கு தனலட்சுமி தன் கையால் முடியை கலரிங் செய்து விடுகிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பாஸ் வீட்டிற்குள் தனலட்சுமி வந்ததும் அமுது சாயம் வெளுத்து விட்டது என்று கூறி கலாய்த்து வருகிறார்கள். அனைவரிடமும் சகஜமாக பேசும் தனலட்சுமி அசீமை கண்டதும் அண்ணா என்று கட்டிப்பிடித்துக் கொள்கிறார். தனலட்சுமி கையில் பிக் பாஸ் டாட்டூ இருப்பதை கவனித்த அசீம் கையை பாருங்கள் என்று அனைவரிடமும் காட்டிக் கொண்டிருக்கிறார். வாக்குகளின் அடிப்படையில் இப்ப வரைக்கும் கடைசி இடத்தில் இருப்பது ஏடிகே தான் அதனால் அவர் தான் இந்த வாரம் வெளியேற போகிறாரா? என்று பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது.

மீண்டும் கலகலப்பான வீடு
ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு தனலட்சுமியின் முதல் லைவில் தான் அமுதவாணன் மற்றும் விக்ரமனை பற்றி நினைத்திருந்தது எல்லாம் தப்பாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் அமுதவாணன் மற்றும் ஜனனிதான் டைட்டில் ஜெயிப்பார்கள் என்று நினைத்தேன் ஆனால் நான் நினைத்த மாதிரி அவர்கள் இல்லை. ஏடிகே புறம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று பல்வேறு கருத்துகளை கூறிவிட்ட தனலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் வந்த நிலையில் இப்போது என்னவெல்லாம் பிரச்சனை ஏற்பட போகிறதோ என்று ரசிகர்களின் மத்தியில் கேள்விகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அமுதவாணனின் தலையைப் பார்த்து ஜிபி முத்து கேமரா முன்னாடி என்ன பிக்பாஸ் அமுதவாணனின் தலையை இப்படி செய்து விட்டீர்களே என கேட்க, ஷிவின் அமுதவாணனின் மண்டை கலர் கோழி குஞ்சு போல இருக்கிறது என்று கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications