வீட்டுக்குள் சென்று அசீம் இடத்தை பிடித்து தனலட்சுமி சொன்ன வார்த்தை... இப்படியா அசிங்கப்படுத்துவாங்க?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 95 வது நாளில் ஒளிபரப்பாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் தனலட்சுமி வந்து இருக்கிறார்.
தனலட்சுமி தனக்கு வெளியே ரசிகர்கள் மக்கள் செல்வி என்று ஹேஷ்டேக் வைத்திருப்பதாக கூறி இருக்கிறார்.
அசீம் தனலட்சுமி இடம் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறது என கேட்ட கேள்விக்கு தனலட்சுமி செயல் ரசிகர்களால் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது.

மீண்டும் வந்த தனலட்சுமி
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் நேரத்தில் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதில் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஒவ்வொருவராக வந்த வண்ணமாக இருக்கின்றனர் .அதிலும் இன்று தனலட்சுமியின் வருகை யாரும் எதிர்பார்க்காததாக இருக்கிறது. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய தனலட்சுமி இரண்டு வாரம் கழித்துதான் லைவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அதனால் இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? இல்லையா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

நெகட்டிவே இல்லையாம்
இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத வகையில் இன்றைய முதல் பிரமோவிலே தனலட்சுமி வருகை காட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த தனலட்சுமி உள்ளே இருக்கும் போட்டியாளர்களை பற்றி லைவ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பல்வேறு பதில்களை கூறி இருந்ததால், அதுபடி தான் உள்ளே நடந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். அதுபடி தான் தற்போது அவர் நடந்து இருப்பதாகவும் ஒரு சில வீடியோக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக தனலட்சுமி இடம் அசீம் வெளியே உனக்கு ரசிகர்களின் சப்போர்ட் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு எனக்கு ஒரு நெகட்டிவ் கூட வெளியே இல்லை கேட்பதற்கே ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது என்று தனலட்சுமி கூறி இருக்கிறார்.

இது என்ன பதில்
அதுமட்டுமல்லாமல் தனக்கு மக்கள் செல்வி என்று ஒரு ஹாஸ்டேக் ட்ரெண்ட் ஆகி வந்ததாகவும், ரசிகர்கள் அதிகமானோர் தனக்கு பல்வேறு ஹாஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் என்றும், யாருமே என்னை ஒரு வார்த்தை கூட நெகட்டிவாக பேசவில்லை என்று கூறி இருக்கிறாராம். அதை பார்த்து அதிர்ச்சியான பல நெகட்டிவ்வர்ஸ் வழக்கம் போல தனலட்சுமியை கலாய்த்து வருகின்றனர். இந்த நிலையில் அசீம் வெளியே நிலவரம் எப்படி இருக்கிறது என்று கேட்டிருக்கிறார். அதற்கு வாங்க காட்டுகிறேன் என கையைப் பிடித்து தரதரவென இழுத்தபடியே வெளியே கேட்ட அருகில் கொண்டு நிறுத்தி இருக்கிறார்.

இதில் எது உண்மை
இப்படியே கேட் திறந்ததும் வெளியே போய் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று தனலட்சுமி பேசியதை பார்த்து அசீம் மட்டுமல்லாமல் அசீம் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். ஏற்கனவே அசீமுக்கு ஆதரவாக தான் சமூக வலைத்தளத்தில் மக்கள் செல்வன் என்ற ஒரு ஹேஷ்டேக் ட்ரெண்ட்டாகி வருகிறது. இந்த நிலையில் தனலட்சுமிக்கு ஆதரவாக மக்கள் செல்வி என்கிற பெயர் ஹேஸ் டேக்காக வருவதாக இவர் கூறுகிறாரே என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் வெளியே அசீம் தான் எனக்கு அவ்வளவு பிடிக்கும் அவர்தான் சரியாக விளையாடுகிறார் என்று சொல்லிவிட்டு, உள்ளே போன பிறகு அசீமிடம் முகம் கொடுத்து சரியாக பேசவில்லையே என்றும் தனலட்சுமி பேசியதில் இதில் எது உண்மை என்று குழப்பத்தோடு கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications