வைல்ட் கார்டு என்ட்ரி ஜி.பி முத்து தானா!? அவரே வெளியிட்ட புகைப்படம்.. குவியும் வாழ்த்துக்கள்
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜிபி முத்து செரினா மற்றும் குயின்சியை முதல்முறையாக குடும்பத்தோடு சந்தித்திருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சில வாரங்களிலே வெளியேறி இருந்தாலும் தற்போது சக போட்டியாளர்களை சந்தித்த ஜி பி முத்து அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான ஜிபி முத்து அந்த நிகழ்ச்சியில் தன்னோடு சக போட்டியாளராக இருந்து குயின்சி மற்றும் ஷெரினாவை குடும்பத்தோடு சென்று சந்தித்திருக்கிறார்.சமூக வலைதளத்தில் பலருக்கும் பரிச்சயமாக இருக்கும் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமாக செயல்படுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சில நாட்கள் மகிழ்ச்சியை கொடுத்துவிட்டு பின்பு திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் எப்போதும் போல தன்னுடைய வழக்கமான வேலையை செய்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் பிரபலம்
தான் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் அப்படியே போட்டோ மற்றும் வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது ஜி பி முத்துவின் வழக்கமாக இருந்து வருகிறது. ஏற்கனவே டிக் டாக் செயலியின் மூலமாக இவர் பிரபலமானாலும் அது தடை செய்யப்பட்ட பிறகும் சமூக வலைத்தளத்தில் பிரபலமாக நெட்டிசன்கள் அதிகமாக கலாய்க்கும் நபராக இருந்தாலும் அதை பற்றி கண்டுகொள்ளாமல் ஜிபி முத்து தன்னை கலாய்ப்பவர்களை கலாய்த்து பார்க்கும் ரசிகர்களுக்கு என்டர்டைன்மென்ட் கொடுத்து வருகிறார். ஒருவர் அடுத்தவரை திட்டுகிறார் என்றால் அதைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது என்றால் அது ஜிபி முத்துவின் திட்டலாக தான் இருக்க முடியும்.

வெளியிட்ட புகைப்படம்
ஒரு சில வாரங்களில் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த ஜி பி முத்து தற்போது குயின் சி நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அவரையும் ஷெரினாவையும் சந்தித்திருக்கிறார் குயின்சி பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ஷெரினா மற்றும் ராபர்ட் மாஸ்டரை ஏற்கனவே சந்தித்து இருந்தார். இந்த நிலையில் இப்போது ஜிபி முத்துவை குடும்பத்தோடு பார்த்து இருக்கிறார். ஏற்கனவே ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக உள்ளே வருவாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்போது அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் மத்தியில் கேள்வியை எழுப்பி இருக்கிறது.

அடுத்த வயல்ட் கார்டு தானா
தூத்துக்குடியில் உள்ள உடன்குடியில் சொந்த ஊராக இருக்கும் ஜி பி முத்து சென்னையில் இருக்கும் ஷெரினா மற்றும் குயின்சியை சந்தித்திருப்பதால் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொள்வதற்காக தான் ஜி பி முத்து சென்னைக்கு வந்து இருப்பாராக இருக்குமோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே ஒவ்வொரு சீசனிலும் கலந்து கொள்வாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அதிலெல்லாம் தன்னால் முடியாது என்று விலகி விட்ட நிலையில், இந்த நிகழ்ச்சியில் முதல் நாளில் இவர் அறிமுகமானதும் அதிக அளவில் இந்த நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிற தொடங்கியது. அதைத் தொடர்ந்து தன்னால் அதிக நாட்கள் உள்ளே இருக்க முடியாது என்று கூறிதான் அவர் வெளியே வந்திருந்தால். இந்த நிலையில் இப்போது நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேலாக ஆகிவிட்டதால் இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருப்பதால் ஜிபி முத்து வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அனைவருக்கும் சந்தேகம் தோன்றியிருக்கிறது.












Click it and Unblock the Notifications