என்னை காலி பண்ணனும்னு பேசி வச்சிட்டு தான்! மைனா, மணிகண்டனின் முகத்திரையை கிழித்த போட்டியாளர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்று 101 வது நாள் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் மைனா மற்றும் மணிகண்டனை பற்றி மகேஸ்வரி பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.
மணிகண்டனோடு சண்டை ஏற்படும் போது மகேஸ்வரி பேசிய வார்த்தைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் பல்வேறு கருத்துக்கள் குவிந்து வருகிறது.

கண்டுபிடிக்கப்பட்ட முட்டை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கிறது. கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே வெளியே சென்றிருந்த போட்டியாளர்கள் மீண்டும் உள்ளே வந்திருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையை கொண்டாட விஜய் டிவி பிரபலங்கள் பலரும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தனர். அப்போதுதான் பிரச்சனைக்கான ஆரம்பமே ஏற்பட்டு இருக்கிறது. விஜே பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்து இறுதி கட்டத்தில் இருக்கும் போட்டியாளர்கள் யாரெல்லாம் உணவுப் பொருட்களை பதுக்கி ஒழித்து வைத்திருக்கின்றனர் என்று கண்டுபிடிக்க கூறியிருந்தனர். அந்த வகையில் மாகாபா மற்றும் மணிகண்டன் பிரியங்கா இருவரும் உள்ளே சென்று பார்த்ததில் அங்கே அசீம் மற்றும் அமுதவாணன் இடம் இருந்து முட்டை தட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

முட்டைக்காக சண்டை
அப்போது சாந்தி மாஸ்டர் நான் எல்லோருக்கும் முட்டை வேண்டும் என்று எத்தனையோ முறை கேட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் யாரும் தரவில்லை என்று சொல்ல, விக்ரமனும் நானும் மணிகண்டன் மற்றும் அசீமிடம் கேட்டேன் அவர்களும் தரவில்லை என்று சொல்ல அருகில் இருந்த மகேஸ்வரி யோடு மணிகண்டன் சண்டையை தொடங்கி விட்டார். இருவரும் ஆரம்பத்தில் இருந்தே காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் நிலையில் மணிகண்டன் மகேஸ்வரியை பார்த்து ஏற்கனவே நீங்க ரொம்ப கிழிச்சிட்டீங்கன்னு தான் வெளிய போயிட்டீங்க, இப்போ கிழிச்சது காணாது என்று மீண்டும் உள்ளே வந்து கிழிக்க வந்துட்டீங்களா? என திட்டி இருந்தார்.

மகேஸ்வரி கூறிய ரகசியங்கள்
அதற்குப் பிறகு மகேஸ்வரி பேசிய வீடியோவை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அதில் இந்த சீசன் போட்டியாளர்களான மணிகண்டன் மற்றும் மைனா பிக் பாஸ் வீட்டிற்கு வரும்போது தன்னை குறி வைக்க தொடங்கி இருக்கிறார்கள். அதனை நான் போனில் Loudspeaker மூலம் கேட்டதாகவும் கூறினாராம்.மேலும் மைனா பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாக தொலைபேசியில் தன்னை அழைத்து பத்து வருடங்களுக்கு முன்பு ரச்சிதா தன்னை எப்படி கேவலப்படுத்தினார் என்று போனில் சொன்னதாகவும் கூறி இருக்கிறார்.

மகேஸ்வரியின் குமுறல்கள்
அதுமட்டுமல்லாமல் இந்த விஷயத்தை குறித்து நான் இதுவரைக்கும் யாரிடமும் சொல்லவில்லை ஆனால் அதுதான் நான் செய்த தவறு என்று நினைக்கிறேன் என்று கூறி இருக்கிறார். ஃபோனில் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு மைனா சக போட்டியாளரான மணிகண்டனிடம் மகேஸ்வரி மிகவும் வலிமையானவர் நன்றாக பேசுவாள் முதலில் அவளை அகற்றி விட வேண்டும் என்று கூறியதை மகேஸ்வரி Loudspeakerல் கேட்டதாகவும் ஆனால் அதைப்பற்றி நான் மைனாவிடம் கேட்கவே இல்லை ஆனால் இப்போது மைனாவும் மணிகண்டனும் செய்வதை பார்த்தால் நான் அப்படி செய்தது தவறு என்று தோன்றுகிறது என கூறினாராம். இந்த வீடியோவை ரசிகர்கள் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications