பிக் பாஸ் 6: விஜே மகேஸ்வரிக்கு கிடைத்த ரெட் அலர்ட்.. "செய்தார் வினை செய்தார்க்கு” திரும்பி விட்டதோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் நடைபெற்று வருகிறது. அதில் விஜே மகேஸ்வரி கதையை ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டியாளர்களால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

அடுத்த போட்டியாளர்களின் கதையை காது கொடுத்து கேட்காமல்,சாதிக்க வேண்டும் என்று ஆசையோடு வந்த மகேஸ்வரிக்கு சோதனையை போட்டியாளர்கள் கொடுத்திருக்கின்றனர்.

போட்டியாளர்கள் கதையை ஆரம்பிக்கும் முன்பு சக போட்டியாளர்கள் ரெட் பட்டனை அழுத்தி அனைவரையும் வெளியேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

கதையால் கிடைக்கும் அனுதாபங்கள்

கதையால் கிடைக்கும் அனுதாபங்கள்

விஜய் டிவியில் பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி ஒரு வாரம் முடிவடைந்த நிலையில் இந்த வாரம் கதை சொல்லும் டாஸ்க் தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தாலும் இந்த சீசனில் வித்தியாசமாக முயற்சியை பிக்பாஸ் எடுத்து இருக்கிறது. கடந்த சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க் மூலமாகத்தான் ரசிகர்களை போட்டியாளர்கள் பலர் வெகுவாக கவர்ந்திருந்தனர். அதில் ஒருவர் அமீர் அவருடைய சோகக் கதையை கேட்டு அவருக்கு அனுதாப அலை அதிகமாகிவிட்டது. அதனால் அவர் கடைசி வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

தெரியாததை தெரிஞ்சுக்கணும்

தெரியாததை தெரிஞ்சுக்கணும்

இந்த சீசனிலும் போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் தெரியாத கதைகளை கூறவேண்டும். அதே சமயத்தில் அந்த கதைகள் போட்டியாளர்களையும், ரசிகர்களையும் கவரும் விதத்தில் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட நேரத்திற்குள் ரசிகர் போட்டியாளர்களை கவரும் விதத்தில் கதையை சொல்ல வேண்டும் என்று பிக் பாஸ் இந்த முறை விதிமுறை வைத்துள்ளது. அதில் போட்டியாளர்களின் மனதை கவர்ந்த கதைகள் கூறும் போட்டியாளர்கள் எட்டு பேர் அடுத்த வாரம் நாமினேஷனில் வராமல் பாதுகாக்கப்படுவார்கள் என்று சலுகையும் கொடுத்திருக்கிறது.

விபரீதமான போட்டியாளர்கள்

விபரீதமான போட்டியாளர்கள்

விளையாட்டை வெறிகொண்டு விளையாட வந்திருக்கும் போட்டியாளர்கள் எந்த போட்டியாளர்களையும் அடுத்த வாரம் பாதுகாக்க வைத்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வருகிறார்கள். அந்த மாதிரி தான் நேற்றைய எபிசோடில் முதல் ஆளாக கதை சொல்ல வந்த அசீமை போட்டியாளர்கள் செய்த செயல் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது. தன்னுடைய கதையை சொல்ல தொடங்குவதற்கு முன்பே போட்டியாளர்கள் ஓடி சென்று போட்டி போட்டு ரெட் பட்டனை அழுத்தி கதையை நிறுத்தி விடுகின்றனர். அதில் அதிகமான போட்டியாளர்களின் கதையை நிராகரித்ததில் விஜே மகேஸ்வரியும் ஒருவர்.

மகேஸ்வரிக்கு கிடைத்த ஆப்பு

மகேஸ்வரிக்கு கிடைத்த ஆப்பு

நேற்றிலிருந்து தொடங்கி வரும் கதை சொல்லும் டாஸ்க் பல போட்டியாளர்களின் கதையை நிராகரித்த விஜே மகேஸ்வரியின் கதை இன்றைய ப்ரோமோவில் நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்தே எதையாவது பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த என்று தன்னுடைய ஆசை கதையை கூறத் தொடங்கி இருக்கிறார். அதற்குள் ஓடி வந்து அசீம், அசல் கோளார், மைனா நந்தினி மூவரும் பட்டனை அழுத்தி கதையை நிறுத்திவிட்டனர். ஏற்கனவே நேற்று அசீம் கதை சொல்லும்போது விஜே மகேஸ்வரி இதே போல தான் செய்தார். அதை இன்று அவருக்கு திரும்ப கிடைத்திருக்கிறது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+