ராபர்ட் மாஸ்டருக்கு கேன்சரா? வெளிவருவதற்கு காரணம் இதுதானா? இணையத்தில் பரவி வரும் வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் சமீபத்தில் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
தன்னுடைய உடல்நிலை குறித்து ராபர்ட் மாஸ்டர் அந்த வீடியோவில் ரட்சிதாவிடம் தலையில் சத்தியம் செய்து பேசி இருக்கிறார். அதை குறித்து சமூக வலைத்தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாறி மாறி வெளியே வரும் உண்மை
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அறிமுகமாகி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்து இவரை குறித்து பல்வேறு தகவல்களை வனிதா பேசி வருகிறார். ஏற்கனவே வனிதாவுக்கும் இவருக்கும் தொடர்பு இருந்ததும், அதற்குப் பிறகு இருவரும் பிரிந்து விட்டதும் பலருக்கும் தெரிந்ததுதான். ஆனாலும் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரைப் பற்றி பல வீடியோக்களில் ராபர்ட் பேசியிருந்தார். அதுபோல தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து வரும் வனிதா தினமும் ராபர்டை பற்றி தவறாமல் பேசி வருகிறார்.

வெறுக்க வைத்த செயல்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் ஆகும் போது தன்னுடைய மகள் தன்னை புரிந்து கொள்வதற்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறேன் என்று கூறிய ராபர்ட் மாஸ்டர் அவருடைய வாழ்க்கையில் நடந்த பல சோகமான நிகழ்வுகளை வெளியே கூறாமல் தான் இருந்திருக்கிறார்.
ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் ரட்சிதாவின் பின்னாடியே இவர் சுற்றிக்கொண்டு அங்கே இங்கே இருந்தபடியே ரட்சிதாவை ரசித்தபடி, ரட்சிதா ஒருநாள் பேசவில்லை என்றாலும் அன்று முழுக்க சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்தது போன்ற பல செயல்களினால் ரசிகர்களின் மத்தியில் வெறுப்பு வளர்க்கும் வகையில் நடந்து கொண்டிருந்தார். அதுவும் ரட்சிதா என்னுடைய கிரஷ் என்று கூறிக்கொண்டு முத்தம் கேட்பது, போன் நம்பர் கேட்பது என பல்வேறு செயல்கள் இவர் செய்தது ரசிகர்கள் வெறுக்கும் வகையில் இருந்தது.

கேன்சர் இருக்கிறதா
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இந்த வாரம் நான் எப்படியும் வெளியே சென்று விடுவேன். எனக்கு கேன்சர் இருப்பதால் வெளியே சென்று மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்று ராபர்ட் மாஸ்டர் கூறியிருக்கிறார். அதற்கு பொய் சொல்லாதீங்க மாஸ்டர் என ரட்சிதா கூற, இல்லை சத்தியமாக தான் அப்படி என்று ரட்சிதாவின் தலையில் கையை வைத்து கூறியிருக்கிறார். எனக்கு உண்மையிலேயே கேன்சர் இருக்கிறது என்று அவர் பேசிய வீடியோவை ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். இந்த வீடியோ இருதரப்பு கருத்துக்களையும் பெற்று வருகிறது.

சொன்னது உண்மைதானா
தன்னுடைய அப்பாவின் ஞாபகமாக இருப்பதாக ராபர்ட் மாஸ்டர் கமல் முன்னிலையில் கூறி இருந்த நிலையில், அவருக்கு கடந்த வாரம் அவருடைய காதலி கொடுத்து அனுப்பிய மோதிரத்தை பார்த்த பிறகு மனதளவில் அதிகமாக பயப்பட தொடங்கி இருக்கிறாராம். அதனை தொடர்ந்து இவர் பிக் பாஸிடம் தனியாக பேசி இருக்கிறார். ஆனால் பிக் பாஸ் இவருக்கு அறிவுரை கூறிய பிறகு ஒரு சில நாட்கள் சரியாக இருந்தாலும் அவர் ஆணித்தரமாக நம்பி இருக்கிறார். இந்த வாரம் நாம் வெளியே சென்று விட வேண்டும் என்று அது நடந்து விட்டதால் இவர் பெரிய அளவில் ஏமாற்றம் எனக்கு எதுவும் இல்லை என்று கூறியிருக்கிறார். ஏற்கனவே ஒரு படத்தை தயாரித்ததால் அதிக அளவில் கடனில் இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலமாக அந்த கடனை அடைத்து விடலாம் என்று ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர் எதிர்பார்த்த நிலையில், இவர் ஐம்பதாவது நாளில் வெளியேறி இருக்கிறார் .இந்த நிலையில் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் பரவி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. ஒருவேளை ரட்சிதாவை இவர் ஏமாற்றுவதற்காக அப்படி சொன்னாரா? அல்லது உண்மையிலேயே இவருக்கு உடல்நிலை பிரச்சினை இருக்கிறதா? என்பது யாருக்கும் தெரியாத விஷயமாகத்தான் இருக்கிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications