தன்னுடைய சொல்லை நிறைவேற்ற அசீம் செய்த செயலைப் பற்றி விவரிப்பு..பஞ்ச் வசனங்களால் மொத்த பிளானும் லீக்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 வின்னராக ஜெயித்த பிறகு அசீம் முதல்முறையாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தான் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த பணத்தில் என்ன செய்யப் போகிறேன் என்பதை பற்றி அதில் விரிவாக பேசி இருக்கிறார்.
ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் கூறியதை தான் தற்போது தான் விரைவில் செய்ய இருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.
அசீமுடைய முயற்சியை அவருடைய ரசிகர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்

ரசிகர்களுக்கு நன்றிகள்
நான் வெளியே வந்து ஒவ்வொரு சோசியல் மீடியா பக்கங்களில் பார்க்கும்போதும் எனக்கு இருந்த ஆதரவு பார்த்து நான் திக்கற்ற நிலையில் இருந்தேன். என்னால் என்ன ரியாக்ட் பண்ணனும்னு தெரியாம இருந்தேன். ஒவ்வொருத்தங்களும் அந்த அளவிற்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க. ஒருத்தவங்க ரெண்டு பேருனா பரவாயில்ல அவ்ளோ சோசியல் மீடியா பேஜில் அவ்ளோ ரசிகர்கள் எனக்கு சப்போர்ட் பண்ணி இருக்கீங்க, அதற்கு மிகப்பெரிய நன்றிகள். என் மேல நீங்க வச்சிருந்த பாசம் பார்த்து நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. ஆனால் நான் ஒன்னு மட்டும் சொல்கிறேன் என்ன ஆனாலும் என்னுடைய மக்களை மட்டும் நான் விட்டுற மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

செய்யப் போகும் உதவி
அதுமட்டுமில்லாமல் நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதே சொன்னதுதான். நான் டைட்டில் ஜெயித்தால் 50 லட்சம் ரூபாயில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு அவர்களுடைய பள்ளிக்கூட கல்விக்கு நான் அந்த 25 லட்சம் ரூபாய்க்கும் ஓபன் அக்கௌன்ட் ஓப்பன் செய்து கொடுப்பேன். அதற்கு யாரு வேண்டுமென்றாலும் அப்ரோச் செய்யலாம். அதை சரியாக வெரிப்பை பண்ணி அவங்களுக்கு அதை கொடுக்க வைப்பேன். அதை ஒரு சோசியல் மீடியா பேஜில் பகிர்ந்து வருவேன். அதில் அவர்களுடைய பெயரை மட்டும் மறைக்கப்பட்டு மீதமுள்ள தகவல்கள் அதில் காட்டப்படும் என்று நான் சொன்னேன் அதை மெய்ப்பட நான் செய்து காட்டுவேன்.

சிறந்த செயல்
நான் வின் பண்ணுனா பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் பணம் 50 லட்சத்தில் நேர் பாதி 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோரை பாதிக்கப்பட்ட என் தமிழ் சொந்தங்களுக்கும், என் தமிழ் உறவுகளுக்கும் என்னை இத்தனை வாரம் நாமினேட் செய்தாலும் ஜெயிக்க வைத்த தமிழ் இல்லங்களில் வாழும் எனது அன்பு உள்ளங்களுக்கு நான் கொடுக்க வேண்டும் நினைக்கிறேன். என்னதான் சொல்லும் செயலும் ஒன்றானாலும், உலகில் தலை சிறந்த சொல் செயல் தான். என்னுடைய செயலை செயல் வடிவத்தில் காட்டுவதற்காக நினைக்கிறேன்.

பஞ்ச் வசனம்
கூடிய விரைவில் 25 லட்சம் ரூபாய் ஓப்பன் அக்கவுண்ட் ஓபன் செய்து அதை காட்டுவேன். நீங்க எனக்கு பண்ணுனதுக்கு நான் பண்றது ஒரு பிரசன்டேஜ் கூட இல்லை. இனியும் அடுத்தடுத்த என்னுடைய வாழ்க்கையின் முயற்சியிலும் நீங்க துணை நிற்பீர்கள் என்று அதீத நம்பிக்கையுடன் இருக்கிறேன். அடுத்து நான் எடுத்து வைக்கிற ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடைய ஆதரவு இதே மாதிரி கொடுப்பீர்கள் என்று எண்ணுகிறேன். எப்போதும் நான் சொல்வது தான். "நான் வீழமாட்டேன் வீறு கொண்டு எழுவேன்" ஏனென்றால் நான் திமிரி எழும் தமிழன், நன்றி என்று கூறி முடித்து இருக்கிறார். அசீம் இரண்டு நாட்களாக காணவில்லையே என்று தேடிக் கொண்டிருந்த அவருடைய ரசிகர்களுக்கு அசீமுடைய இந்த பதில் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. சொன்னதை செய்து காட்ட துணிந்து விட்டார் என்று தற்போது சமூக வலைதளத்தில் பலர் கொண்டாடி வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications