Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸ் கொடுத்த கோர்ட் வேர்ட்..இந்த சீசனில் டைட்டில் வின்னர் இவர்தானா?ரசிகர்கள்கண்டுபிடித்த ரகசியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் இவராகத்தான் இருக்க முடியும் என்று சில தகவல்கள் தற்போது பரவி வருகிறது.

இதுவரைக்கும் வெளியான ப்ரோமோக்களின் அடிப்படையில் விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர்.

இறுதி கட்டத்தில்

இறுதி கட்டத்தில்

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்போடு கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த நிலையில் இப்ப வரைக்கும் கடைசி இடத்தில் 5 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். அதிலும் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் வீட்டிற்குள்ளே பணப்பெட்டி இருக்கிறது. இதில் இப்ப வரைக்கும் பத்து லட்சம் 50 ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது. இதில் 13 லட்சம் வந்ததும் அமுதவாணன் பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டார் என்ற தகவல்களும் பரவி வருகிறது. இதன் அடிப்படையில் மீதமிருக்கும் நான்கு போட்டிகள் மட்டும் தான் கடைசி யாக பைனல் மேடையில் ஏற இருக்கின்றனர்.

முதல் இடம்

முதல் இடம்

அதில் விக்ரமன், ஷிவின், அசீம், மைனா நால்வராக இருக்க வேண்டும் என்று தகவல்களும் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் ஓட்டுகளில் அடிப்படையில் இப்ப வரைக்கும் விக்ரமன் தான் முதலிடத்தில் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஏற்கனவே அன் அபிஷியல் ஓட்டிங் லிஸ்டில் முதலிடத்தில் இதுவரைக்கும் அசீம் தான் இருந்து வந்தார். ஒவ்வொரு வாரமும் அவர் தவறாமல் நாமினேஷனில் இடம் பிடித்துக் கொண்டிருந்தாலும் ஒவ்வொரு வாரமும் அதிகமான வாக்குகளின் அடிப்படையில் தான் அசீம் பாதுகாக்கப்பட்டு வந்ததாக அவருடைய ரசிகர்கள் கூறி வந்தனர். காரணம் அன் அபிஷியல் ஓட்டுங்கில் அசீம் முதல் இடத்தில் இருக்கும் நிலையில் அதுபோல தானே அபிஷியல் ஓட்டிங்கில் இருப்பார் என்று அவர்கள் கேள்வி எழுப்பி கொண்டிருக்கின்றனர்.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

இந்த நிலையில் தற்போது அசீமிற்க்கு ஆதரவாக ஒரு பக்கம் விமர்சகர்கள் குரல் கொடுத்து கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் விக்ரமனுக்கு ஆதரவாக அவர் உறுப்பினராக இருக்கும் விசிக கட்சியின் பிரபலங்களும், கட்சியின் தலைவரும் குரல் கொடுத்திருக்கின்றனர். அதே நேரத்தில் இதற்கு முன்பு பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த ஆரி, ரித்விகா போன்றவர்களும் விக்ரமனுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதனால் இவர்கள் இருவரில் யார் ஜெயிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களுக்கு அதிகமாக எழுந்திருக்கின்றது. எப்போதுமே எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல இவர்கள் இருவரை விடவும் ஆரம்பத்தில் இருந்தே அதிகமாக தன்னுடைய தனித்துவமான விளையாட்டால் ரசிகர்களை கவர்ந்து வரும் ஷிவினும் வெற்றி பெறுவதற்காக வாய்ப்பு இருப்பதாகவே கருதி கருத்து வெளியாகி வருகிறது.

டைட்டில் வின்னர் இவர்தானாம்

டைட்டில் வின்னர் இவர்தானாம்


ஷிவினுக்கு ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து மற்றும் பல திருநங்கைகளின் சப்போர்ட் இருக்கிறது. ரசிகர்களின் சப்போர்ட்டும் இருக்கிறது. இந்த நிலையில் முதல் முறையாக திருநங்கை போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் ஷிவின் வெற்றி பெறுவதற்காக அதிகமான வாய்ப்பு இருக்கிறது என்று பலர் கருத்து கூறி வருகின்றனர். ஆனாலும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதை பார்க்கும்போது விக்ரமனுக்குத் தான் டைட்டில் வின்னர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். காரணம் இதுவரைக்கும் உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்களின் ஏவி மற்றும் பிக் பாஸ் பாராட்டு கிடைத்த வரிசையில் கடைசியாக விக்ரமன் தான் இருக்கிறார். அதனால் விக்ரமனுக்கு தான் டைட்டில் அதனால் தான் அவருடைய ஏவி கடைசியாக காட்டப்பட இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றம் ஏற்படலாம். ஆனாலும் விக்ரமனின் ரசிகர்கள் கண்டிப்பாக விக்கிரமனுக்கு தான் டைட்டில் என்று உறுதியாக கூறி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+