உங்களுக்கு ஆம்பளையே பிடிக்காதா? அசல் கோளாறை முகத்துக்கு நேராக திட்டிய ஜிபி முத்து .. செம பஞ்ச்..!!
சென்னை: பிக் பாஸ் ஆறாவது சீசனில் அதிகமான நெகட்டிவ் கருத்துகளை பெற்று வரும் அசல் கோளாறுவை முகத்துக்கு நேராக ஜிபி முத்து திட்டி இருக்கிறார்.
எதார்த்தமாக பேசுவதாக ரசிகர்களின் மனதில் இருப்பதை எல்லாம் ஜி பி முத்து பேசி விட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
எப்போதும் பெண்கள் கூடவே இருக்கும் அசல் கோளாறுவை, ஜி பி முத்து உங்களுக்கு இப்ப எல்லாம் ஆண்களே பிடிக்காதா? என்று நக்கலாக கேட்டு இருக்கிறார்.

தொடங்கியது ஆறாவது சீசன்
பிக் பாஸ் ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி இருக்கிறது. பெரிய அளவில் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த இந்த சீசன் 21 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பட்ட துறைகளில் இருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் மட்டுமல்லாமல் முதல் முறையாக மக்களின் சார்பாகவும் 2 போட்டியாளர்கள் அறிமுகம் ஆகி இருக்கின்றனர். இந்த நிலையில் ராப் பாடகராக அறிமுகமான அசல் கோளாறு செய்யும் செயல்களை சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்கள் அதிகமாக கலாய்த்து வருகிறார்கள்.

பெண்களிடம் சில்மிஷம்
ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியாளர்கள் செய்யும் தவறு இப்படி தான் சமூக வலைத்தளத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வரும். அந்த வகையில் தற்போதைய சீசனில் அசல் கோளாறு நடந்து கொள்வது சரியில்லை என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சகப் பெண் போட்டியாளர்களிடம் எப்போதும் கைகள் கால்கள் முதுகு என தடவிக் கொண்டிருக்கிறார் என்று அந்த புகைப்படங்களை வெளியிட்டு இவரைப் பற்றி பல்வேறு விதமாக மீம்ஸ்களில் கலாய்த்து வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் எப்போதும் பெண் போட்டியாளர்களுடன் தான் அசல் கோளாறு அதிகமாக இருந்து வருகிறார் என்றும் இவர் மீது பலர் காண்டில் இருக்கின்றனர்.

சிலருடைய ஆதரவு
நேற்று எபிசோட்டில் அசல் கோளாறு நிவாவின் மடியில் படுத்துக்கொண்டு ஜாலியாக பேசிக் கொண்டிருந்ததை பார்த்து நிவாவின் ரசிகர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் பல்வேறு கருத்துகளை அசல் கோளாறுக்கு எதிராக வெளியிட்டு வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் அசல் கோளாவிற்கு ஆதரவாக சில பெண் போட்டியாளர்களும், ஏடிகே, அசீம் போன்ற ஆண் போட்டியாளர்களும் இருந்து வருகின்றனர். ஆனால் நேற்றைய எபிசோடில் அசல் கோளாறுவின் டான்ஸை வைத்து அமுதவாணன் கலாய்த்து அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தி இருந்தார்.

ஜி.பி முத்து கேட்ட வார்த்தை
இந்த நிலையில் இன்றைய லைவ் நிகழ்ச்சியில் ஆண்கள் அணியில் ராம், ஏடி கே, ஜி.பி முத்து, அசல் கோளாறு, அமுதவாணன் என பலரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது அசல் கோளாறு எழுந்து செல்கிறார். அதை பார்த்து ஜிபி முத்து தம்பி, இப்ப எல்லாம் உங்களுக்கு ஆண்களையே பிடிக்கிறது இல்லையே ஏன்? டிஷ்யூ பேப்பர் வாங்கிட்டு வந்து உதடு எல்லாம் தொடச்சிட்டு இங்கே எங்கே சொருகுறீங்க என்று பங்கமாக கலாய்த்து கொண்டிருக்கிறார். இதை பார்த்து ஜி பி முத்துவின் ரசிகர்கள் பலர் நாங்கள் மனதில் நினைத்ததை அப்படியே தலைவர் பேசிவிட்டார். எதார்த்தமாகவே அசல் கோளாறுக்கு சரியான பதிலடி கொடுத்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். ஏற்கனவே இந்த வாரம் கமல் அசல் கோளாறு செய்கைகளை கண்டிப்பாரா? என்று ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது ஜி பி முத்து செய்த செயல் பலருக்கு மன ஆறுதல் கொடுக்கும் விதமாக இருக்கிறதாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications