ஐந்து சீசனிலும் இல்லாத அதிரடி, பேச நிறைய இருக்கிறது..மிரட்டும் கமல்..இன்னைக்கு பஞ்சாயத்து இருக்கு!!
சென்னை:வழக்கம்போல் வார இறுதி நாளின் முதல் பிரமோ வெளியாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மீதான ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ளது.
வழக்கமாக 40 வது நாள் நடைபெற வேண்டிய சம்பவங்கள் எல்லாம் ஆரம்பத்திலே நடந்து விட்டதாகவும், கேட்பதற்கும் விசாரிப்பதற்கும் நிறைய இருப்பதாக கமல் கூறியுள்ளது இன்றைய நிகழ்ச்சியின் விறுவிறுப்பை கூட்டி உள்ளது.
இன்றைய எபிசோடை டிவியில் மட்டும் காண முடியும் என்பதால் கமல் கேட்பதையும் விசாரிப்பதையும் காண பிக் பாஸ் பார்வையாளர்கள் ஆர்வமுடன் காத்திருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பமே அமர்க்களம்
விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியை ஐந்து சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஆறாவது சீசனை சென்ற வாரம் ஆரம்பித்து உள்ளது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்கள் என்று சுமார் 20 போட்டியாளர்களை பிக் பாஸ் விட்டிற்குள் சென்ற வாரம் வாழ்த்தி வழியனுப்பி வைத்தார் கமல்.தற்பொழுது கமலஹாசனே கடந்த ஐந்து சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசன் அதிரடியாக ஆரம்பித்திருப்பதாக சொல்லும் அளவிற்கு வீட்டிற்குள் சில களோபரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.

விசாரணையை துவங்கும் கமல்
பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே நடக்கும் கூத்துக்களை பார்க்கும் பார்வையாளர்கள், ஒவ்வொரு பிரச்சனை நடக்கும் போதும் கமல் இந்த பிரச்சினையை குறித்து கேட்க வேண்டும், அந்தப் பிரச்சினையை குறித்து பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.ஏனென்றால் வாரம் முழுவதும் வீட்டிற்குள் நடக்கும் பஞ்சாயத்துகளுக்கு சனி, ஞாயிறு கிழமைகளில் நாட்டாமையாக இருந்து கமல் விசாரிப்பதையும், கேள்விகள் கேட்பதையும், தவறு செய்தவர்களை கண்டிப்பதையும் பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய கூட்டம் வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும்.

உரசிக் கொள்ளும் போட்டியாளர்கள்
சமூக வலைதளங்கள் மட்டுமின்றி பொதுமக்கள் பேராதரவுடன் வீட்டிற்குள் இருக்கும் ஜிபி முத்து உடன் தனலட்சுமிக்கு ஏற்பட்ட மோதல் துவங்கி விஜே மகேஸ்வரி, டான்ஸ் மாஸ்டர் சாந்தி, போன்ற போட்டியாளர்களிடையே சில உரசல்கள் நடந்திருப்பதால் முதல் வாரமே பிக் பாஸ் வீட்டிற்குள் புகைச்சல் பெரியளவு துவங்கி விட்டது.எல்லாவற்றிற்கும் மேல் பிக் பாஸ் வீட்டிற்குள் ஜிபி முத்து அழுவதை பார்த்த அவரது ரசிகர்கள் தனலட்சுமி மீது செம கோபத்தில் உள்ளனர்.கமல் இந்த பிரச்சனையை கையாளும் விதத்தை பார்க்க மிகவும் ஆர்வமுடன் இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

தரமான சம்பவங்கள் வெயிட்டிங்
ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே கமலும் இன்று கேள்விகளும் விசாரணைகளும் இருப்பதாக ப்ரோமோவில் கூறியுள்ளது ஜி.பி முத்து ரசிகர்களையும், ஜனனி ரசிகர்களையும் குஷியாக்கி உள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சியை மற்ற நாட்களில் பார்க்கிறார்களோ!! இல்லையோ!!? கமல் வரும் சனி ஞாயிறுகளில் நிகழ்ச்சியை பார்ப்பதற்கென்றே பெருமளவு பிக் பாஸ் பார்வையாளர் கூட்டம் காத்துக் கொண்டிருக்கிற நிலையில் இன்று அவர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு தான் என்று பலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications