Bigg Boss: திவ்யா கூட பேசியதற்க்கு சான்ரா சந்தேகப்பட காரணம் இது தான்! பிக் பாஸ் ரகசியத்தை உடைத்த பிரஜன்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய பிரஜன் தன்னை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் அவர் திவ்யாவுடன் பேசியதை பார்த்து அவர் மனைவி சான்டிரா கோபப்பட்டு இருந்தார். அதைப் பற்றி தான் இப்போது பிரஜன் வருத்தத்தோடு பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நடக்காத சம்பவம்தான் தற்போதைய ஒன்பதாவது சீசனில் நடந்தது. அதாவது இதுவரைக்கும் பிக் பாஸ் வீட்டிற்குள் போன பிறகுதான் போட்டியாளர்கள் காதலர்களாக வெளியே வந்திருக்கின்றனர். ஆனால் காதலித்து திருமணம் செய்த யாரும் இந்த வீட்டிற்குள் ஜோடியாக போனதில்லை. இந்த சீசனில் காதல் தம்பதிகளாக உள்ளே சென்ற பிரஜன் மற்றும் சான்டிரா ஜோடிக்கு ஆரம்பத்தில் அதிகமான மவுசு இருந்தது.

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவர்கள் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதும், விஜய் சேதுபதி என் நண்பர் குடும்பம் என்ற மனப்பான்மையோடு பேசுவதையும் பார்த்ததும் பல ரசிகர்கள் இவங்களுக்கு உள்ளிருப்பவர்களே பரவாயில்லை என்று சொல்லி வந்தனர். ஆனாலும் இவர்களுடைய விளையாட்டு மாற்றமடையுமா அல்லது இவர்கள் வெளியே வரும்போது பிரிந்து விடுவார்களா? என்று கூட சிலர் கலாய்த்து வந்தனர்.
அதற்கு காரணம் பிரஜன் வீட்டிற்குள் நான் என்னுடைய மனைவியோடு சேர்ந்து விளையாடவில்லை தனியாக விளையாடுகிறேன் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காக சில இடங்களில் உள்ள சான்டிராவை நோஸ்கட் செய்திருந்தார். ஆனால் சான்றா எந்த இடத்திலும் பிரஜனை விட்டுக் கொடுக்கவில்லை. இதனால் இதை வைத்து கண்டிப்பாக பிரச்சனை வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனார். கடைசியில் அதே போலவே நடந்து விட்டது.
பிரஜன் வெளியே வந்த நாளில் சான்ரா திவ்யா கணேஷிடம் கடும் கோபமாக பேசியிருந்தார். அப்போது யாருக்கும் ஏன் இவர் இப்படி பேசுகிறார் என்று புரியவில்லை. ஆனால் அடுத்த நாள் சான்டிரா பார்வதியிடம் பேசிக் கொண்டிருக்கும்போது, திவ்யாவிற்க்கு நான்தான் வெளியே போக வேண்டும் என்பது ஆசை, விஜய் சேதுபதி கேட்கும்போது கூட அதைத்தானே சொல்லிட்டு இருந்தா என்று ஆதங்கத்தோடு பேசி இருந்தார்.
மேலும், பிரஜன் திவ்யாவிடம் பேசி விளையாடிட்டு இருந்திருந்தா அவர் ஜாலியா வெளியே தெரிந்திருப்பார் அவர் இப்போ வெளியே போயிருக்க மாட்டாரு என்றும் அவர் சான்ராவோட சேர்ந்து விளையாடியதால் தான் வெளியே போனார் என்று திவ்யா சொன்னதாக சான்டிரா பேசியிருந்தார். இது இணையத்தில் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெளியே வந்த பிரஜன் இது குறித்து விளக்கம் கொடுத்திருந்தார்.
அதில் பிரஜன் சொல்லும்போது, திவ்யா நான் அவரோடு சேர்ந்து விளையாடினால்தான் உள்ளே இருக்க முடியும் என்று சொல்லி இருந்தால் அது தவறு. காரணம் நான் திவ்யாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் போகவில்லை. நான் சான்டிராவோடு தான் உள்ளே போனேன் அதுவும் எல்லோருக்குமே தெரிந்த கதைதான். சான்டிரா இதுவரைக்கும் என் மீது சந்தேகப்பட்டது கிடையாது. என் மீது இப்படி கோபப்பட்டதும் கிடையாது.
நான் ஆடிஷனுக்கு போனாலும் சரி, எந்த சூட்டிங்கிற்க்கு போனாலும் சரி அங்கு இருக்கும் எல்லாரிடமும் பேசுவேன். ஆனால் இத்தனை வருடத்தில் இப்படி சான்டிரா பண்ணியது கிடையாது. இப்போ பண்ணுகிறார் என்றால் அவருக்கு அங்கு ஏதோ பிடிக்கவில்லை என்று தோன்றுகிறது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதோடு வெளியே வேறுவிதமாக சில விஷயங்கள் காட்டப்படுவதை நானே பார்த்து இருக்கிறேன். உள்ளே கனி மற்றும் எப்ஜே நார்மலாக இருக்கிறார்கள். அவர்கள் இருவருக்கும் எந்த தவறான எண்ணமும் இல்லை. ஆனால் வெளியே அது வேறு விதமாக போய்க் கொண்டிருக்கிறது. அதை பார்க்கும்போதுதான் எனக்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கிறது என்று பிரஜன் பேசியிருக்கிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications