பொசுக்குன்னு சட்டையை கழற்றிய பாலாஜி... டாஸ்க்குகாக இப்படியா??கலாய்க்கும் ரசிகர்கள்
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வெயிட்டை காட்டு எனும் டாஸ்க் தொடங்கியிருக்கிறது.
தன்னுடைய பலத்தை காட்டி பிக்பாஸ் பணத்தை வெல்லும் டாஸ்க்கில் போட்டியாளர்கள் செய்யும் செயல்களை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

தொடரும் டாஸ்க்குகள்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது தான் தொடங்கியது அங்கே டாஸ்க் மட்டும் பஞ்சமில்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு டாஸ்க் என்னும் விகிதத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களை பாடாய் படுத்தி எடுத்து வருகிறது. போட்டியாளர்கள் ஒருபக்கம் விளையாட்டு விளையாடிக் கொண்டு இருந்தாலும் மற்றொரு பக்கம் ரசிகர்களை என்டர்டைன்மென்ட் செய்வதிலும் தவறவில்லை. இருந்தாலும் சில நேரங்களில் இவர்கள் செய்யும் அலப்பறை தான் பலரையும் காண்டாகி இருக்கிறதாம்.

டாஸ்க் உறுதிமொழி
தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பதினோராவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில் இன்று காலையில் முதல் டாஸ்க் தொடங்கப்பட்டிருக்கிறது. அதில் வெயிட்டை காட்டு எனும் டாஸ்க் தொடங்கியிருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் 100 பிபி அல்டிமேட் பாயின்ட்ஸை அந்த டேபிளில் வச்சதுக்கு அப்புறம்தான் இந்தப் போட்டியை நீங்க விளையாட ஆரம்பிக்கணும், அதில் யார் ஜெயிக்கிறார்களோ அவங்க 100பிபி பாயிண்ட் எடுத்துக்கலாம் எனும் பிக்பாஸ் உறுதிமொழியை சுருதி படித்திருக்கிறார்.

அனிதாவின் விடாமுயற்சி
வழக்கம்போல போட்டியாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய பாயிண்டை மேஜையில் வைத்துவிட்டு பலத்தை நிரூபித்து வருகிறார்கள். அதில் ஜோடி ஜோடியாக போட்டியாளர்கள் மோதிக்கொண்டு இருந்தாலும் சில இடங்களில் ஆண் போட்டியாளர்களும் பெண் போட்டியாளர்களும் மோதிக்கொண்டது பார்க்கும்போது சுவாரசியமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். நிரூப் கையை பிடித்துக்கொண்டு அனிதா விடாமுயற்சியோடு தொங்கிக் கொண்டிருக்கிறார்.

தாடி பாலாஜியின் செயல்
அதில் தாமரை மற்றும் ஜூலியின் அசத்தலான பர்பாமன்ஸ் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கும்போது தாடி பாலாஜியும் வனிதாவும் களமிறங்கியது ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் போட்டியாளருக்கு சுவாரசியத்தை கொடுத்து இருக்கிறது. அதனால்தான் தாடி பாலாஜியை சக போட்டியாளர்கள் உசுப்பேற்றி விடுகிறார்கள். அதனால் தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை கழற்றி வீசிவிட்டு தன்னுடைய வெயிட்டை காட்ட தொடங்கிவிட்டார். எப்படியாவது ஜெயித்துவிட வேண்டும் என்று இவர் விளையாடி கடைசியில் ஜெயித்துவிட்டார். ஆனால் இப்படி ரியாலிட்டி ஷோவில் அதுவும் லைவ் நிகழ்ச்சியில் அரைகுறை உடையோடு வரலாமா?? பெண் போட்டியாளர்கள் பலபேர் சூழ்ந்திருக்க இந்த மாதிரி டிரஸ்ஸைக் கழற்றி கொண்டு நிற்கலாமா என்று பலர் கலாய்த்து வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications