பிக்பாஸ் அல்டிமேட்: நடிகர்கள் ஆகிவிட்டாலே கடவுளா.. கொந்தளித்த சினேகன்..யாருக்கு இந்த கேள்வி தெரியுமா
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் இந்நிகழ்ச்சியில் கேள்வி கேட்கிறேன் என்று சினேகன் பேசிய வார்த்தைகள் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
தானும் ஒரு திரை பிரபலம் என்பதை மறந்து சினேகன் பேசிய வார்த்தைகள் தற்போது நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது.

தேர்ந்தெடுத்த போட்டியாளர்கள்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இதுவரைக்கும் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருந்தாலும் இதில் புதுவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசன்களில் கலந்து கொண்ட ரசிகர்களின் மனதை அதிகமாக கவர்ந்த போட்டியாளர்கள் தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு சீசன்களிலும் ஏற்கனவே பிரச்சனைகளையும், பஞ்சாயத்து களையும் தொடங்கிய போட்டியாளர்களை பார்த்து இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கியதால் நிகழ்ச்சியின் விறுவிறுப்பு அதிகரிக்கும் என்பது அனைவருடைய கணிப்பாக இருந்து வருகிறது.

ஏன் இந்த ஆர்ப்பாட்டம்
ரசிகர்கள் எதிர்பார்த்தது போல தான் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இரண்டாவது நாள் பஞ்சாயத்து தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் அனைவரும் தங்களை இந்த வீட்டின் முக்கியமான ஒரு நபராக காட்டிக் கொள்வதற்காகவே பிரச்சனைகளை இழுத்துக் கொண்டு வருகிறார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். சில நேரங்களில் சில ரசிகர்கள் ஒன்றுமில்லாத பிரச்சனையைக் கூட ஊதிப் பெரிது பண்ணி வருகிறார்கள். அந்த மாதிரி தான் தற்போது சினேகன் கூட செய்த செயல் இருக்கிறது என்று அனைவரும் கூறுகிறார்கள்.

பத்திரிகையாளராக மாறிய சினேகன்
சினேகன் முதல் சீசனில் கலந்துகொண்டு பலருடைய மனதை கவர்ந்து டைட்டிலை ரன்னராக ஜெயித்தவர். ஒரு திரைப்படத் துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் தற்போது டாஸ்க் என்பதற்காக இவர் கேட்ட கேள்விதான் ரசிகர்களை வியப்படைய செய்திருக்கிறது. இரண்டாவது நாளில் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒரு அணியில் போட்டியாளர்கள் பத்திரிகையாளராகவும், மற்றொரு அணியில் பிக்பாஸ் நட்சத்திரமாகவும் செயல்பட்டு வருகிறது. இதில் பத்திரிக்கையாளர் அணியாக சினேகன் இருந்து வருகிறார்.

கேரக்டரோடு கலந்து விட்டாரே
பிக்பாஸ் நட்சத்திர அணியாக நிரூப் அமர்ந்திருக்கும்போது அவரிடம் காரசாரமாக கேள்விகளை சினேகன் கேட்டு வருகிறார். அதில் முதல் கேள்வியாக பிரஸ்மீட் என்று சொன்னால் சொன்ன நேரத்தில் வந்து உட்கார மாட்டிங்களா சார்?? நீங்க பெரிய ஸ்டாராக இருக்கலாம் அதைப் பற்றி எங்களுக்கு கவலை கிடையாது. நடிகர் ஆனதும் எல்லோரும் கடவுள் மாதிரி நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா?? என்று கேள்வியை எழுப்பி இருக்கிறார். அவர் கோபத்தோடு பேசுவதை பார்த்து அருகில் இருந்த அபிநய் சிரித்துக் கொண்டிருந்தாலும் சினேகன், நிரூப்பை தான் சொல்கிறாரா?? அல்லது வேறு எந்த நடிகராவது மனதில் வைத்துக்கொண்டு இப்படி திட்டி தீர்க்கிறாரா?? என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது. இதனைப் பார்த்த ஒரு சில நெட்டிசன்கள் சினேகன் நீங்க மைண்ட் வாய்ஸ் என்று சத்தமா பேசுகிறீர்கள்...இதை கமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்..கவனமாக இருங்க என்று அலர்ட் கொடுத்து வருகிறார்கள்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications