ஜூலியை டார்கெட் செய்யும் போட்டியாளர்கள்...என்ன இப்படி இறங்கிவிட்டார்கள்..காரணம் இதுதானா??
சென்னை: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இந்த வாரம் ஜூலியை டார்கெட் செய்ய தொடங்கி இருக்கின்றனர் என்று ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Recommended Video
தன்னுடைய செயல்பாடுகளை மாற்றி முதிர்ச்சி தன்மையோடு நடந்து கொண்டிருக்கும் ஜூலிக்கு அவருடைய ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

ரசிகர்கள் கொடுத்த அதிர்ச்சி
ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது எட்டாவது நாளில் அடியெடுத்து வைத்திருக்கும் நேரத்தில் போட்டியாளர்கள் தங்களுடைய உண்மை முகத்தை காட்ட தொடங்கி விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறிவருகின்றனர். கடந்த வாரத்தில் சுரேஷ் சக்கரவர்த்தியின் செயல்பாடுகள் அளவுக்கதிகமாக நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுக்கும் விதமாக இருந்தாலும் ரசிகர்கள் அந்த அளவிற்கு அவருக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்று ஓட்டுகளின் முடிவால் அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர்.

காரணம் போட்டியாளர்கள் தானாம்
அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் அபிநய் தான் வெளியே செல்வார் என்று ஆரம்பத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக சுரேஷ் சக்கரவர்த்தியின் வெளியேற்றம் இருந்திருந்தது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் போட்டியாளர்களும் சுரேஷ் சக்கரவர்த்தி தான் இந்த வீட்டின் சகுனி, கொளுத்தி போடுபவர் என்றெல்லாம் பேசிய அவருடைய கேரக்டரை கெடுக்க தொடங்கி விட்டார்கள். அதனால் தான் அவருக்கு ஓட்டுகள் குறைந்துவிட்டது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஜூலியின் மாற்றம்
ஜூலி பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு தான் அது வரைக்கும் பெற்றிருந்த பெயரையும் புகழையும் இழந்திருந்தாலும் மீண்டும் அவருடைய ரசிகர்கள் மத்தியில் நல்ல மதிப்பைப் பெற்று விட வேண்டும் என்று ஜூலி இந்த அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இதுவரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பு வரைக்கும் இவருக்கு அளவுக்கு அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியில் இவர் பிரஸ்மீட்டிங்கில் மற்றும் ஒவ்வொரு டெஸ்டிலும் நடந்து கொள்ளும் நடவடிக்கைகளை பார்க்கும்போது ரசிகர்கள் இவருக்கு ஆதரவு கொடுக்கத் தொடங்கி இருக்கின்றனர்.

அதிகரிக்கும் ரசிகர்களின் ஆதரவு
என்னதான் ரசிகர்கள் ஜூலிக்கு ஆதரவு கொடுத்து வந்தாலும் பிக்பாஸ் வீட்டிற்குள் சக போட்டியாளர்கள் ஜூலியை அதிகமாக டார்கெட் செய்து வருகிறார்கள். அதனால்தான் இன்றைய எபிசோட்டில் ஜூலி கதறி அழுதிருக்கிறார். ஜூலிக்கு வெளியே நெகட்டிவ் கமெண்ட் இருப்பதால் வனிதா, சுஜாதா போன்றோர் ஜூலியை பற்றி நன்கு தெரிந்தவர்கள் போல தங்களுடைய கருத்துக்களை சொல்கிறோம் என்கிற பெயரில் கண்டமேனிக்கு பேசிவருகிறார்கள் என்று சமூக வலைத்தளத்தில் ஜூலியின் ரசிகர்கள் போட்டியாளர்களின் மீது எனது கருத்துக்களை கூறிவருகின்றனர். தற்போது ரசிகர்களின் மத்தியில் ஜூலிக்கு ஆதரவு இருப்பது தெரியாமல் போட்டியாளர்கள் நடந்து வருகிறார்கள். இதனால் இந்த சீசனில் இவர் கடைசி வரைக்கும் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
