பிக் பாஸ் அல்டிமேட்: முதல் ஐந்து இடங்களில் அறிமுகமாகும் போட்டியாளர்கள்.. கமல் கொடுக்கும் சர்ப்ரைஸ்
சென்னை: நாளை ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் ஐந்து இடங்களில் அறிமுகமாகும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது.
அறிமுகமாகும் போட்டியாளர்களுக்கு கமல் திடீர் சர்ப்ரைஸ் கொடுக்க வைத்திருக்கும் பொருட்கள் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமூக வலைத்தளத்தில் பெருகும் ஆதரவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருந்த வரவேற்பு இந்த அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் ரசிகர்களிடம் இருந்து வருகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சி பற்றி பல ரசிகர்கள் தேடி வருகின்றனர். இந்த அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இதைப் பற்றிய புதிய அப்டேட்கள் ரசிகர்களுக்கு ஆர்வத்தை கூட்டியுள்ளது. அந்த வகையில் தற்போது முதல் ஐந்து இடங்களில் அறிமுகமாகும் போட்டியாளர்களின் விவரங்கள் வெளியாகி உள்ளது.

ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஆர்வம்
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியை போன்று இருப்பதாலும் அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போன்று இல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கும் பல வித்தியாசங்களும் இருந்துவருகிறது. இந்தநிலையில் நாளை போட்டியாளர்கள் அனைவரும் அறிமுகமாக இருக்கும் போது அவர்களை வரவேற்கும் நிகழ்வில் கமல் செய்யும் செயல்கள் ரசிகர்களை மேலும் கவர்ந்துள்ளது. அந்த வகையில் தற்போது கமல் முதல் நாள் நிகழ்வில் என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்களுக்கு ஆர்வமும் அதிகரித்திருக்கிறதாம்.

கமல் கொடுத்த திடீர் சர்ப்ரைஸ்
நாளை நடைபெற இருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் அறிமுக விழாவில் முதலாவதாக ஜூலி கலந்துகொள்ள இருக்கிறாராம். அவருக்கு கமல் பெப்பர் கொடுத்து வரவேற்க இருக்கிறாராம். அவரைத் தொடர்ந்து நிரூப் இரண்டாவது போட்டியாளராக அறிமுகமாக இருக்கிறாராம். அவருக்கு இலவங்கப்பட்டை கொடுத்து அனுப்புகிறாராம். மூன்றாவதாக உள்ளே நுழையும் வனிதாவிற்க்கு என்ன கொடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இருக்கும் நிலையில், அவருக்கு கொடுத்திருக்கும் பொருள் தான் பலரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. வனிதாவுக்கு கமல் தேன் கொடுத்து இருக்கிறாராம்.

இது வித்தியாசமான செயல்தான்
வனிதாவை தொடர்ந்து நான்காவதாக சினேகன் அறிமுகமாக இருக்கிறாராம், அவருக்கு கமல் லவங்கம் கொடுக்க இருக்கிறாராம். ஐந்தாவதாக அபிராமி அறிமுகமாக இருக்கிறாராம், அவருக்கு கமல் மங்களகரமான மஞ்சள் கொடுத்து வழியனுப்ப இருக்கிறாராம். இதுவரைக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் பூந்தொட்டி, சாக்லேட் என கொடுத்து வழியனுப்பி வைத்த கமல் இந்த முறை நறுமண மற்றும் மருத்துவ குணம் உள்ள பொருட்களை கொடுத்து அனுப்புவதால் ஏதேனும் உள்குத்து இருக்குமா?? என்று ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள். தற்போது இந்த அப்டேட் தான் பலரையும் குழப்பமடைய வைத்துள்ளதாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications