புத்த பூர்ணிமா நாளில் மகனின் பெயர்...சூப்பர் போட்டோ சூட் நடத்திய நீலிமா ராணி
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா ராணி. திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாம் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
சென்னை: திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நீலிமா. குட்டிக்குழந்தையுடன் குடும்பத்தோடு போட்டோ சூட் நடத்தி புத்த பூர்ணிமா நாளில் தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார்.
சின்னத்திரையில் 2000ம் ஆண்டுகளில் ராணியாக வலம் வந்தவர் நீலிமா ராணி. இவர் தேவர் மகன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து சின்னத்திரையில் ஆசை, மெட்டி ஒலி, கோலங்கள், வாணி ராணி, அத்திப்பூக்கள் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
இதற்கிடையில் பாண்டவர் பூமி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல, குற்றம் 23 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்தார்.

வாணி ராணி
நீலிமா ராணி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பலருக்கும் இவருக்கு திருமணம் முடிந்தது தெரியாது அவ்வளவு அழகாக இன்னமும் தன்னுடைய இளமையை மெயின்டெயின் செய்து வருகிறார். சினிமாவில் நடிக்க போன பின்னர் சீரியலுக்கு பிரேக் விட்ட நீலிமா ராணி மீண்டும் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லியாக நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.

ரசிகர்கள் அதிகம்
வில்லியாகவும் காதலியாகவும் மனைவியாகவும் தாயாகவும் எத்தனையோ சீரியல்களில் நடித்து வெற்றி பெற்றிருந்தாலும் சினிமாவில் வெற்றி பெறவேண்டும் என்ற வேகத்தோடு இருக்கிறார். சீரியல்கள், திரைப்படங்கள் மூலமாக தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள இவர் தற்போது, தனிப்பட்ட வகையில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் ஏராளமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

இரண்டாவது குழந்தை
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது எடுக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.சினிமா, சீரியலுக்கு திடீரென பிரேக் எடுத்த அவர் இரண்டாவது குழந்தைக்கு தாயாகி இருப்பதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவித்தார். ஜனவரியில் நாங்கள் நான்கு நபர்களாக ஆக போகிறோம். இன்னும் 20 வாரங்கள் தான் உள்ளது... எங்களுக்கு மகிழ்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

கலக்கல் போட்டோ சூட்
கர்ப்பிணியாக இருக்கும் போது விதவிதமான போட்டோ ஷூட்களை நடத்தி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். நீலிமா தாமரைமேல் ஒரு அழகான கர்ப்பிணி அம்மனாக இருக்கும் அவதாரத்தில் இருந்தார். இதை பார்த்து பலரும் நீலிமாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்

ஆண் குழந்தை
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நீலிமாவிற்கு ஆண் குழந்தை பிறந்தது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி 13 ஆண்டுகள் கழித்து இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார் நீலிமா. மகனின் முகத்தை வெளியே காட்டாத நீலிமா சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தோடு ராமேஸ்வரம் சென்றிருந்த புகைப்படத்தையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முதன் முதலாக குடும்பத்தோடு ஆன்மீக பயணம் சென்றதாகவும் குறிப்பிட்டார்.

இளவரசனின் பெயர்
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு தனது மகனின் பெயரை அறிவித்துள்ளார் நீலிமா. தனது மகனுக்கு அத்வைத்தா என்று பெயர் வைத்துள்ளார். மேலும், தனது மகனுடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். எங்கள் இளவரசனின் பெயர் அத்வைதா இசை என்று இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நீலிமா ராணி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications