வலிமை படத்தில் சைத்ரா ரெட்டி கொண்டாடும் அவருடைய ரசிகர்கள்... இது வேற லெவல் வளர்ச்சி
சென்னை: சீரியலில் கதாநாயகியாகவும் வில்லியாகவும் இருந்த சைத்ரா ரெட்டி தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
Recommended Video
முதல் படத்தில் பிரம்மாண்ட நடிகருடன் கைகோர்த்து இருக்கும் சைத்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கல்யாணம் முதல் காதல் வரை ப்ரியா
சின்னத்திரை நடிகைகள் பலருக்கும் சீரியலில் இருந்து வெள்ளித்திரைக்கு வாய்ப்பு கிடைத்திருப்பது போல தான் தற்போது சைத்ரா ரெட்டிக்கும் கிடைத்திருக்கிறது. அவர் முதன்முதலாக கல்யாணம் முதல் காதல் வரை என்னும் சீரியலில் பாதியில் தான் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனாலும் தனக்கான வேலையை சரியாக பார்த்து ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். இவருடைய உயரத்திற்கும் கம்பீரத்திருக்கும் இவருடைய திறமையை நிரூபிக்கும் வகையில் இவருக்கு அடுத்ததாக வாய்ப்பு நெகட்டிவ் ரோலில் கிடைத்தது. அதையும் விட்டு விடாமல் இவர் அதுதான் எனக்கு பிடிக்கும் என்று அதற்கு ஓகே சொல்லிவிட்டார்.

ஸ்வேதாவாக மிரட்டல்
கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பவ்வியமாக பிரியா கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த இவர், யாரடி நீ மோகினி சீரியலில் ஸ்வேதா கேரக்டரில் அனைவரையும் மிரட்டி விட்டார். ஸ்வேதா கேரக்டரில் பலபேர் வயித்தெரிச்சலை சம்பாதித்து இந்த சீரியலில் இவர் நடித்துக் கொண்டிருந்தார். இவருடைய வில்லத்தனத்தை பார்த்து ஒரு பக்கம் திட்டி தீர்த்தாலும், இவருடைய க்யூட்டான அழகை பார்த்து பல இளைஞர்கள் இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஃபேன்ஸ் பேஜ்களை உருவாக்கி கொண்டிருந்தனர். சமீபத்தில்தான் இவருக்கு திருமணம் முடிந்துள்ளது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி
திருமணத்திற்கு பிறகும் இவர் சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் யாரடி நீ மோகினி சீரியல் முடிவடைந்ததும் இவருக்கு அடுத்த சீரியலில் கதாநாயகியாக மீண்டும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. தற்போது சன் டிவியில் கயல் சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார். இந்த நிலையில் இவர் செய்திருக்கும் வேலையை பார்த்து பலர் அதிசயப்பட்டும், ஆச்சரியப்பட்டும் வருகின்றனர். வலிமை திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கும் நேரத்தில் அந்தத் திரைப்படத்தில் இவர் நடித்து இருப்பதை பார்த்ததும் இவருடைய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

வலிமையில் கெத்து காட்டி விட்டாரே
வலிமை திரைபடத்தில் அஜித்குமாரின் அருகில் இருக்கும் இவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் பலபேர் இவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று சொல்லவே இல்லையே என்று இவருக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. வெளியில் சொல்லாமல் இருந்து விட்டு டிரைலர் வந்த பிறகு தனக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்களுக்கு நன்றி கூறி வருகிறார். இதனைப் பார்க்கும்போது பல ரசிகர்கள் இப்படித்தான் அதிகமாக அலட்டிக் கொள்ளக்கூடாது, இந்த குணம் எங்களுக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது என்று பாராட்டி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications