புடவையில் செம குத்தாட்டம் போடும் சைத்ரா ரெட்டி... கயல் நடிகையின் க்யூட் ரீல்ஸ்
கயல் சைத்ரா ரெட்டியின் ரீல்ஸ்களைப் பார்க்கவே ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவர் சீரியலில் நடிக்கும் அதே காஸ்ட்டியூம் உடன் ஆடும் அழகே அழகுதான்.
சென்னை: கயல் டிவி சீரியல் ஹீரோயின் ஆடியுள்ள புல்லட் பாட்டு ரீல்ஸ் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. கீர்த்தி ஷெட்டியை விட சைத்ரா ரெட்டி தனது முகத்தில் அழகான பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். இதே போல டான் பட பாடலுக்கு ஆடிய நடனமும் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
விஜய் டிவியில் ரொமான்ஸ் சீரியலில் அறிமுகமாகி ஜீ தமிழில் பேயாக மாறி பயமுறுத்தியவர் சைத்ரா ரெட்டி. சின்னத்திரையின் அழகு குயின் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சன் டிவியில் இப்போது கண்டிப்பான அக்காவாக கயல் டிவி சீரியலில் கலக்கலான தோற்றத்தில் நடித்து வருகிறார் சைத்ரா. சிரிப்பை தொலைத்த முகம்... தங்கையின் திருமணத்தை நடத்த பல வில்லன்களை சமாளிக்கவே கயலுக்கு சரியாக இருக்கிறது. இதில் எங்கே காதலிப்பது டூயட் பாடுவது.

டிஆர்பியில் நம்பர் 1
கயல் டிவி சீரியல் இப்போது டிவி சீரியல்களில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. வழக்கமான குடும்ப கதைதான் என்றாலும் கயலுக்காகவே சீரியல் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள். பல சீரியல்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆரம்பம் முதலே முதலிடத்தை தக்கவைத்துள்ளது கயல் சீரியல். அனைவரின் இல்லங்களிலும் செல்ல மகளாகவே மாறி விட்டார் சைத்ரா ரெட்டி.

கலக்கல் ரீல்ஸ்
டிவி சீரியலில் சீரியஸ் ஆக நடித்து வரும் சைத்ரா ரெட்டி தினம் தினம் ரீல்ஸ் போட தவறுவதில்லை. தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் சக நடிகருடன் டூயட் பாடி ஆடி வருகிறார். அந்த ரீல்ஸ்களை மில்லியன் கணக்கில் பார்த்து ரசித்து வருகின்றனர்.

புடவையில் குத்தாட்டம்
சீரியலில் அழகாக புடவை கட்டி பாந்தமாக நடித்து வருகிறார். அவரது புடவைக்காகவே இல்லத்தரசிகள் சரியாக சீரியலை ட்யூன் செய்து விடுவார்கள். அந்த அளவிற்கு காட்டன் புடவையை கலக்கலாக கட்டுவார். நர்ஸ் ஆக வேலைக்கு போகும் நேரத்தில் மட்டுமே யூனிபார்ம் போட்டிருப்பார். அந்த யூனிபார்ம் கூட அவருக்கு அழகாகவே இருக்கும்.

தேவதையாக ஜொலிக்கும் கயல்
லூஸ் ஹேரில் எளிமையான நகைகள், லேசான மேக் அப்பில் அழகு தேவதையாகவே ஜொலிக்கிறார் கயல் சைத்ரா ரெட்டி. அதே உடையோடு அவர் ரீல்ஸ் போடுவதால் பலரையும் கவர்ந்து வருகிறது. டான் படத்தில் வரும் டூயட் பாடலுக்கு ஆடி அதனை பதிவிட்டுள்ளார் சைத்ரா ரெட்டி

புல்லட் பாட்டுக்கு செம ஆட்டம்
அதே போல வாரியர் படத்தில் கீர்த்தி ஷெட்டியும் ராம் பொத்தினேனியும் ஆடியுள்ள புல்லட் பாட்டுக்கு புடவையில் செமயாக குத்தாட்டம் போட்டிருக்கிறார் சைத்ரா ரெட்டி. ஆடுவது மட்டுமல்லாது அவர் முகத்தில் வெளிப்படுத்தியுள்ள பாவனைகள் பலரையும் கவர்ந்து வருகிறது.
சினிமா ஒரு ரவுண்ட் வரலாம்
சைத்ரா ரெட்டி ஏற்கனவே அஜீத் நடித்த வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவர் அழகாக நடனமாடுவதைப் பார்த்த ரசிகர்கள் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கலாம் என்று கூறி வருகின்றனர். சைத்ரா ரெட்டி மனது வைத்தால் சீரியலில் மட்டுமல்ல சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வர வாய்ப்புள்ளது என்கின்றனர் ரசிகர்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications