குக் ஆக களமிறங்கும் சிவாங்கி.. வலிமை நடிகரும் இருக்காராம்..குக் வித் கோமாளி சீசன் 4 குக்குகள் லிஸ்ட்

குக் வித் கோமாளி சீசன் 4 சிவாங்கி குக்காக மாறி இருக்கிறார். இந்த சீசனில் குக்குகள் யார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 4 விரைவில் தொடங்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான இரண்டாவது பிரமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த சீசனில் குக்காக மாறி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்துடன் வலிமை படத்தில் தம்பியாக நடித்த ராஜ் ஐயப்பா குக்காக அறிமுகமாகி இருக்கிறார்.

பல முன்னணி நடிகர்கள் இந்த சீசனில் குக்காக அறிமுகமாக இருக்கின்றனர். அவர்களுடைய விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்ததும் ரசிகர்கள் அதிகமாக சமூக வலைத்தளத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி எப்போது தொடங்குவீர்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கின்றனர். விஜய் டிவியில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி என்றால் இந்த நிகழ்ச்சிகளாக தான் இருக்க முடியும். நிகழ்ச்சிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலகலப்பு பஞ்சமில்லாமல் காமெடி தனத்தோடு அரட்டை இருப்பதாலே இதை பலரும் விரும்பி வருகின்றனர். சின்னத்திரையில் சீரியல்களை வெறுக்கும் ரசிகர்கள் கூட இந்த நிகழ்ச்சியை ரசிக்கின்றனர்.

வெளியான பிரமோ

வெளியான பிரமோ

இந்த நிலையில் ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கிறது என்ற தகவல்கள் ப்ரோமோ மூலம் உறுதி செய்யப்பட்டது. இதில் யார் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்தோடு இந்த நிலையில் வருகிற ஜனவரி 28ஆம் தேதி முதல் நான்காவது சீசன் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனில் கோமாளியாக வந்து கலக்கிய புகழ், பாலா, குரேசி ஆகியோர் திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் இந்த சீசனில் கலந்து கொள்வார்களா? என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் இவர்கள் பிரமோ வில் தற்போது இடம் பிடித்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தான்.

இனி என்ன நடக்கப் போகுதோ

இனி என்ன நடக்கப் போகுதோ

இந்த நிலையில் இந்த சீசனில் சிங்கப்பூர் தீபன், ஜி பி முத்த, மௌன ராகம் ரவீனா, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, மோனிஷா போன்றோர் புதிய கோமாளிகளாகவும் மணிமேகலை, கிரேசி, புகழ், சுனிதா ஆகிய நான்கு பேரும் பழைய கோமாளிகளாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ப்ரோமோவில் சிவாங்கி இடம் பெறவில்லை என்பதால் அவரும் கலந்து கொள்ள மாட்டாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி கொண்டு இருந்தனர். ஆனால் தற்போது அடுத்த புதிய பிரமோவில் சிவாங்கி இடம் பிடித்திருக்கிறார். அதுவும் குக்காக களம் இறங்கி இருக்கிறார். கோமாளியாக இருக்கும்போதே தனக்கு சமைக்கவே தெரியாது என்று கூறிவந்த சிவாங்கி இப்போது குக்காக மாறி இருப்பதால் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

புதிய குக்குகள்

புதிய குக்குகள்

இந்த நிலையில் இந்த சீசனில் வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் தம்பியாக நடித்திருந்தார் ராஜ் ஐயப்பாவும் இந்த சீசனில் குக்காக அறிமுகமாக இருக்கிறார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஷெரின் மற்றும் ரஜினியுடன் முத்து படத்தில் நடித்து தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வரும் விசித்ரா, நாய் சேகர் பட இயக்குனர் கிஷோர், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் விஜே விஷால் ஆகியோரும் குக்காக களம் இறங்க இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+