இந்த ட்ரெஸ் தூக்குறதுக்கு 4 பேரு.! அலும்பு பண்ணும் சிவாங்கி.! அவரே வெளியிட்ட வைரல் வீடியோ
சென்னை: ஆத்தாடி இந்த டிரெஸ்ஸை தூக்குறதுக்கு 4 பேரா? சிவாங்கி அலும்பு தாங்க முடியலையேப்பா!
சிரிப்பு, மகிழ்ச்சி உள்ளிட்டவைகளால் பெரும்பாலானோர் கவலையின்றி தங்கள் வாழ்க்கையை ஓட்டி வருகிறார்கள். சிரிப்பால் நிறைய நோய்கள் குணமடைந்துள்ளதால் சிரிப்பு தெரபி என்ற ஒரு தெரபியும் இருக்கிறது.
ஒருவரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது புண்ணிய காரியம் என்பார்கள். அந்த வகையில் மக்களையே சிரிக்க வைக்கும் காமெடியன்களுக்கு எப்போதுமே தனி மவுஸும் மரியாதையும் இருக்கும். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள்.
சுட்டித்தனமான வீடியோவால் அள்ளும் சிவாங்கி - எப்படிப்பட்ட காதலர் வேணுமாம் தெரியுமா

உன்னதமான பணி
அந்த உன்னதமான பணியை செய்யும் டிவி நிகழ்ச்சிகள் ஏராளம் இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை யாராலும் மறக்கவே முடியாது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணியாகவிட்டால் போதும் டான் என மக்கள் விஜய் டிவி முன்பு உட்கார்ந்துவிடுவார்கள்.

மணிமேகலை
இந்த நிகழ்ச்சியில் மணிமேகலை, சிவாங்கி, புகழ் ஆகியோர் முக்கிய இடத்தை பிடித்துள்ளார்கள். இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட் எகிறுகிறது எனலாம். இந்த மூன்று பேரில் சிவாங்கியும் புகழும் வெள்ளித்திரைக்கு வந்துவிட்டார்கள். சிவாங்கி டான் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

எதற்கும் துணிந்தவன்
புகழ் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்துள்ளார். தர்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் தோன்றுவோர் பெரும்பாலும் யூடியூப் சேனல் வைத்து நடத்தி வருகிறார்கள். அதில் அவர்களுக்கு ஏராளமான ஃபாலோயர்ஸ்கள் இருக்கிறார்கள். அது போல் சிவாங்கியும் வைத்துள்ளார்.
சுவாரஸ்யம்
அவர் ஷூட்டிங்கில் சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருவார். அந்த வகையில் அவர் அண்மையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மிகப் பெரிய பலூன் போன்ற உடையை அணிந்துள்ளார். அதனை அணிந்து கொண்டு படிக்கட்டு ஏறும் போது தடுமாறி விழப் பார்த்தார்.

சிவாங்கி அலப்பறை
உடனே அருகில் இருந்த இருவர் அந்த உடையை தூக்கிக் கொண்டு வந்து சிவாங்கிக்கு உதவி செய்தனர். அப்படியும் அவரால் நடக்கவே முடியவில்லை. இதை பார்த்த இன்னொரு படிக்கட்டில் இருந்து ஓடி வந்து சிவாங்கியின் உடையை தூக்கி பிடித்து வருகிறார். ஆக மொத்தம் சிவாங்கியுடன் சேர்த்து மொத்தம் 4 பேர் அந்த உடையை தூக்கிக் கொண்டு வருகிறார்கள். இதை பார்க்கும் ரசிகர்கள் ஏம்மா! குக் வித் கோமாளியில் தான் உன் அலப்பறை தாங்க முடியவில்லை. இதுல இது வேறயா என கேட்கிறார்கள்.