அச்சு அசலாக ரெடின் ஆக மாறிய மணிமேகலை...கெட்டப் எல்லாம் வேற லெவல் தான்
சென்னை: குக் வித் கோமாளியில் மணிமேகலையின் புதிய கெட்டப் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளது.
தற்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகரின் அச்சு அசலான கெட்டப்பை மணிமேகலை அணிந்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.

மூன்றாவது சீசனிலும் அறிமுகம்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இதுவரைக்கும் அறிமுகமாகி வந்த மணிமேகலை ஒரு காமெடியான கோமாளியாக களமிறங்கியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவருடைய அதிரடியான காமெடியை ரசிப்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். ரசிகர்களின் பேராதரவோடு இவர் இந்த நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனிலும் அடியெடுத்து வைத்துள்ளார்.

ரசிகர்கள் எதிர்பார்த்த தருணம்
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் மணிமேகலை ஒருசில எபிசோடுகளில் கலந்துகொள்ளவில்லை என்று தெரிந்ததும் இவருடைய ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வந்தனர். இவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவின் காரணமாக இவர் சூட்டிங் வர முடியாத காரணத்தினால் இருந்து வந்தார். இந்த நிலையில் பலர் இவருக்காக எப்போது இந்த நிகழ்ச்சியில் வருவார் என்று ஆர்வத்தோடு காத்திருந்தனர். தற்போது மூன்றாவது சீசனிலும் இவர் கோமாளி ஆகவே அறிமுகமாகியிருக்கிறார்.

வித்தியாசமான திறமை
தங்கள் உடல் மொழி மூலமும் தங்களுக்கான வசனங்களை தாங்களே எழுதிக் கொண்டு பேசுவது என்று ஒவ்வொருவரும் தங்களுக்கு என்று ஒரு பாணியை பின்பற்றியே பெரிய அளவில் நகைச்சுவை நடிகர்களாக நிலைத்திருக்க முடிந்தது. ஆனால் ரெடின் கிங்ஸ்லி எந்தவித பெரிய மெனக்கெடலும் இல்லாமல் தன்னுடைய டயலாக் டெலிவரி செய்யும் விதத்தில் வித்தியாசம் கட்டுவதன் மூலம் மட்டுமே இன்று முக்கிய நகைச்சுவை நடிகராக வளர்ந்து இருக்கிறார்.அவருடைய கெட்டப்பில் தற்போது மணிமேகலை அனைவருக்கும் என்டர்டைன்மென்ட் கொடுத்துள்ளார்
Recommended Video

அசத்தலான கெட்டப்
ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் ஒவ்வொரு கெட்டப்பில் வலம் வருவார்கள் அந்த வரிசையில் இந்த வாரம் மணிமேகலை ரெடின் கிங்ஸ்லின் கெட்டப் போட்டு வலம் வந்திருக்கிறார். அதுவும் டாக்டர் படத்தில் அவர் போட்ட லேடி கெட்டப்பில் மீசையோடு வலம் வருவது போலவே தற்போது மணிமேகலையும் மாறி இருக்கிறார். ஏற்கனவே ரெடின் கிங்ஸ்லின்க்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய அல்டிமேட் கெட்டப்பை மணிமேகலை போட்டிருப்பதை பார்த்ததும் நிகழ்ச்சிக்காக காத்திருப்பதாக கூறிவருகின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications