குத்துச்சண்டை வீரரையே சுற்றவிட்டு பாடாய்படுத்தும் மணிமேகலை.. மாட்டிக்கொண்டு கதறும் சந்தோஷ்
சென்னை: சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் கதாநாயகனான சந்தோஷ் பிரதீப்பை மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாடாய் படுத்தி எடுத்து இருக்கிறார்.
Recommended Video
ஒரு குத்துச்சண்டை வீரருக்கே இப்படி ஒரு நிலைமையா?? என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

மணிமேகலையின் புதிய ஜோடி
விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி மூன்றாவது சீசன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. மணிமேகலையின் காம்போ பார்த்ததும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த சீசனில் மணிமேகலையோடு ஜோடியாக கலக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களின மத்தியில் இருந்தது. ஆனால் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. அதுவும் வழக்கம்போல கோமாளியாக மணிமேகலை இருக்க அவருக்கு மிரட்டலான ஒரு குக் கிடைத்திருக்கிறார்.

சந்தோஷ் பிரதீப் அறிமுகம்
சார்பட்டா திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரராக ராமர் கேரக்டரில் நடித்து இருந்த சந்தோஷ் பிரதீப் தான் இந்த சீசனில் மணிமேகலையின்
ஜோடியாக களமிறங்கியிருக்கிறார். இவர்கள் இருவரின் கலக்கலான பெர்பாமன்ஸ் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது. எப்போதுமே தன்னுடைய துடுக்குத் தனத்தை அனைவரையும் கவர்ந்து வரும் மணிமேகலை எவ்வளவு பெரிய பாடிபில்டர் வந்தாலும் நான் அவர்களையும் விட்டு வைக்க மாட்டேன் என்று தன்னுடைய குறும்பு தனத்தால் பாடாய் படுத்தி எடுத்து வருகிறார்.

ரியாலிட்டி ஷோவில் கிடைத்த வாய்ப்பு
சந்தோஷ் முதல் திரைப்படத்தில் நடித்து அவருக்கு கிடைத்த வெற்றியின் காரணமாக அவருக்கு அடுத்ததாக பிசாசு 2 எனும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஷுட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்வதற்காக சின்னத்திரையில் அறிமுகமாகி இருக்கிறார். ஏற்கனவே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அப்போது சூட்டிங்கில் பிஸியாக இருந்ததால் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால் மீண்டும் கிடைத்த வாய்ப்பை விட்டுவிடாமல் இதில் களமிறங்கியிருக்கிறார்.

மணிமேகலையின் புது தண்டனை
வெள்ளித்திரையில் மிரட்டல் நாயகனாக வலம் வந்த இவரை சின்னத்திரையில் மணிமேகலை பாடாய் படுத்தி எடுத்து வருகிறார். இருவரும் சமையல் செய்து கொண்டிருக்கும் போது, இந்தா பாருங்க சார்பட்டா பரமேஸ்வரர் என்று மணிமேகலா சந்தோசை அழைத்திருக்கிறார். அதற்கு சந்தோஷ் அப்படி என்றால் யாருங்க?? உங்க எக்ஸ் பாய் பிரெண்ட்டா?? என்று கேட்டிருக்கிறார். அதற்கு எனக்கு வாயில் வந்ததையெல்லாம் கூப்பிடுவேன் என்று மணிமேகலை கூறவும், சந்தோஷ் அதற்கு அவ்ளோ பேரு இருக்காங்களா..!!?? என்று கலாய்த்துக் கொண்டு இருக்கிறார். அதைக் கேட்டதும் காண்டான மணிமேகளை, அட மலை குரங்கே... இந்த மணிமேகலையை எதிர்த்து பேசுறவங்க யாராயிருந்தாலும் சுற்ற வேண்டும் என்று சுற்ற விட்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரசிகர்கள் இதற்காகத்தான் நாங்கள் காத்திருந்தோம் என்று கூறி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications