மாஸ்க் போடுற இடமா அது...!!??கூல் இல்ல....குழப்பம்...எல்லாத்துலயும்
சென்னை: சமீபகாலமாக கூல் சுரேஷ் குழப்ப சுரேஷ் ஆக மாறி கூவுற கூவல் எல்லாம் காமெடி ரகமாக இருக்கிறது.
சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி காமெடியனாக மாறிய அவர் நிஜத்திலும் காமெடியனாகவே மாறிவிட்டார் போல என்று சுரேஷின் சமீபத்திய அட்ராசிட்டியை பார்த்துவரும் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.

சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகம்
பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் படத்தின் மூலம் அறிமுகமான கூல் சுரேஷ், அதன் பிறகு தான் நடித்த ஸ்ரீ, காக்க காக்க, மச்சி,எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, தேவதையை கண்டேன், போன்ற திரைப்படங்களில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பிரபலமானார். புள்ளிங்கோ கெட்டப் எல்லாம் பிரபலமாவதற்கு முன்பே அந்த காலத்திலேயே புள்ளிங்கோ கெட்டப் போன்று டிசைன் டிசைனா ஹேர் ஸ்டைலிலும், கலர் கலர் காஸ்டியூம் போட்டு கலக்கியவர். தான் நடிக்கும் படங்களில் நெகட்டிவ் கேரக்டர் என்று அளவு எடுத்து செய்தார் போல் கெட்டப்பிலும்,உடல் மொழியிலும் நடிப்பதில் கெட்டிக்காரர்.

சிம்புவின் தீவிர ரசிகர்
அவ்வப்போது ஏதாவது சமூக சேவைகள் ஈடுபட்டு வரும் இவர் சமுக வலைதளங்களில் கருத்து சொல்வதாக நினைத்துக்கொண்டு ஏதேனும் வீடியோ போட்டு பார்ப்பவர்களை காண்டாக்கி வந்தார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் சிம்புவின் பிஆர்ஓ போல் செயல்பட்டு வருகிறார். கொஞ்ச நாட்களாகவே மைக்கை பார்த்தாலே கூல் சுரேஷ் குழப்ப சுரேஷ் ஆக மாறி எதையாவது உளறிக்கொட்டி டிரெண்ட் ஆகி வருகிறார். இவர் நிதானமாகத்தான் பேசுகிறாரா!!? அல்லது போதையில் உளறுகிறாரா!!? என்று இவர் முன்பு மைக்கை நீட்டுபவர்கள் குழம்ப வேண்டியிருக்கிறது.

மாஸ்க் போட்டு இருந்த இடம்
எல்லா கேங்கிலும் இவரைப் போன்ற ஒரு ஆர்வக்கோளாறு கண்டிப்பாக இருப்பார்..எவ்வளவு பெரிய கூட்டமாக இருந்தாலும் கூச்சமில்லாமல் எதையாவது செய்து கூட்டத்தை திரும்பி பார்க்க வைத்து விடுவார் அந்த கேரக்டர்.மாநாடு படத்தின் ரிலீஸின்போது கூட தியேட்டர் முன்பு மீடியாவிடம் சுரேஷ் பேசிய பேச்சுக்களும் வார்த்தைகளும் மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாறி பல யூடியூப் சேனல்கள் ரோல் செய்துவந்தனர். மாநாடு 25ஆம் நாள் அன்று தியேட்டருக்கு வந்த கூல் சுரேஷ் அங்கிருந்த மீடியாக்காரர்களை பார்த்து தன்னை எதிர்பார்க்காத அளவு பெரிய அளவில் டிரெண்ட் செய்து விட்டதாகவும்,அதற்கு நன்றி என்றும் கூறினார். அது கூட பரவாயில்லை.. அவர் மாஸ்க் போட்டு இருந்த இடமும், ஸ்டைலும் தான் அவரை அனைவரும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது....

இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்
யாருமே வைப்பதற்கு கூச்சப்படும் வித்தியாசமான ஹேர் ஸ்டைல், அணிவதற்கு வெட்கப்படும் டிசைனில் டிரஸ் போடுவது, மைக் முன்னால் விவகாரமாக சவுண்டு விடுவது என்று வித்தியாசம் காட்டி வந்த கூல் சுரேஷ், கொஞ்சம் ஒருபடி மேலே போய் முகத்தில் அணியவேண்டிய மாஸ்க்கை சட்டை பையை மறைத்துக்கொண்டு அணிந்து இருந்ததை பார்த்த இணையவாசிகள் இவர் கூல் சுரேஷ் இல்லை குழப்ப சுரேஷ் என்று அவரை கலாய்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications