For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சன்டிவியை கிட்ட கூட நெருங்க விடாத தூர்தர்சன் ஒரு மாதமாக நம்பர் 1 டிடிதான்

ராமாயணமும் மகாபாரதமும் தூர்தர்சன் சேனலுக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே தேசிய அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற சேனல்கள் வரிசையில் நம்பர் 1 இடத்தை தக்கவைத்துள்ளத

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக் டவுன் நீடிக்கும் நிலையில் டிவி சேனல்களை பார்த்து ஏராளமானோர் பொழுது போக்கி வருகின்றனர். கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தொலைக்காட்சி ரசிகர்களின் மனதில் நம்பர் 1 இடத்தில் நங்கூரம் போட்டுக்கொண்டு அமர்ந்துள்ளது தூர்தர்சன். ராமாயாணமும், மகாபாரதமும் மக்களின் மனம் கவர்ந்த இதிகாச சீரியல்தான் என்பதை உறுதிபடுத்தியுள்ளது. தொலைக்காட்சி பார்வையாளர் ஆய்வு அமைப்பு பிஏஆர்சி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கடந்த ஏப்ரல் 25 முதல் மே 1ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் டிடி சேனலை 1694176 பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

அதே கால கட்டத்தில் சன் டிவியை 1094809 பேரும் டாங்கல் டிவியை 1091739 பேரும் பார்த்துள்ளனர். ஜெமினி டிவி இந்திய அளவில் 8 வது இடத்தை பிடித்துள்ளது. 592400 பேர் பார்த்துள்ளதாக பிஏஆர்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிதிவிராஜ் நன்றாக சவால் விடுகிறார்...!பிரிதிவிராஜ் நன்றாக சவால் விடுகிறார்...!

தென்னிந்திய சேனல்களில் சன் குழும சேனல்தான் முதலிடம் பிடித்துள்ளது. 438 கோடி பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது சன் டிவி. தமிழ்நாட்டில் சன் டிவி, ஆந்திராவில் ஜெமினி டிவி, மலையாளத்தில் சூர்யா,கன்னடத்தில் உதயா சேனல்கள் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.

ராஜாதி ராஜாவான டிடி

ராஜாதி ராஜாவான டிடி

தூர்தர்சன் டிவியான டிடியை 1694176 பேரும் சன் டிவியை 1094809 பேரும் டங்கல் டிவியை 1091739 பேரும் டிடி பாரதி சேனலை 832474 பேரும் சோனி சாப் டிவியை 768398 பேரும் பிக் மேஜிக் டிவியை 678212 பேரும் சோனி மேக்ஸ் 668376 பேரும் ஜெமினி டிவியை 592400 பேரும் ஸ்டார் பிளஸ் சேனலை 588807 பேரும் நிக் டிவியை 566320 பேரும் பார்த்து ரசித்துள்ளனர்.

ஓல்ட் ஈஸ் கோல்ட்

ஓல்ட் ஈஸ் கோல்ட்

மக்களின் ரசனை மாறி வரும் என்பார்கள். ஆனால் பழைய இதிகாச தொடர்களை பார்ப்பதில் மக்களின் ரசனை மாறுவதேயில்லை என்று மீண்டும் நிரூபிடித்துள்ளது தூர்தர்சன். ராமாயணம், மகாபாரதம், சக்திமான் என ரசிகர்களை கவர்ந்த தொடர்களை மீண்டும் ஒளிபரப்பி 90 கிட்ஸ்களை மட்டுமல்லாது 2 கே கிட்ஸ்களை கவர்ந்துள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே தூர்தர்சன் சேனல் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளது.

தமிழ் சேனல்களில் சன் டிவி 1

தமிழ் சேனல்களில் சன் டிவி 1

தமிழ்நாட்டில் சன்டிவியை 1004325 பேரும் கேடிவியை 436596 பேரும் ஸ்டார் விஜய் டிவியை 386254 பேரும் ஜீ தமிழ் டிவியை 284512 பேரும் ஸ்டார் விஜய் சூப்பர் டிவியை 198908 பேரும் பார்த்துள்ளனர்.

தூசு தட்டும் சேனல்கள்

தூசு தட்டும் சேனல்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மார்ச் 24ஆம் தேதி போடப்பட்ட ஊராடங்கு மே 17ஆம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஷாப்பிங் மால்கள் இல்லை, தியேட்டர்கள் இல்லை மக்களின் ஒரே பொழுது போக்கு தொலைக்காட்சி சேனல்களும் ஒடிடி பிளாட்பார்ம்களும்தான். சீரியல் சூட்டிங், திரைப்பட படப்பிடிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்பதால் பல சேனல்களில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய சீரியல்களை தூசு தட்டி ஒளிபரப்புகின்றனர்.

சினிமா கை கொடுக்கிறது

சினிமா கை கொடுக்கிறது

சன் டிவி 25 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஹிட் அடித்த சீரியல்கள் மெட்டி ஒலி, சித்தி, தங்கம் என பல சீரியல்கள் ஒளிபரப்ப ஆரம்பித்து விட்டன. ஆனாலும் சினிமாவையும் ஒளிபரப்பி வருகிறது சன் டிவி. அதே நேரத்தில் ஜீ தமிழ் டிவி , கலர்ஸ் தமிழ் சேனல் இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட புதிய சேனல்களில் ஏற்கனவே ஒளிபரப்பான சீரியல்களே மீண்டும் மீண்டும் ஒளிபரப்புவதால் மக்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. புத்தம் புது சினிமாக்கள் சேனல்களுக்கு கை கொடுத்து வருகின்றன.

English summary
BARC has released the report of the most watched TV channels in the 17th week Saturday, 25th April 2020 to Friday, 1st May 2020, According to this report, DD National has received more than 1694176 impressions from April 25 to May 1. Surprisingly, this impression is much higher than the channels of all genres.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X