எதிர்நீச்சல் சீரியலை இன்றே நிறுத்த கூறி வந்த கடிதம்.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்த இயக்குனரின் முடிவு?
சென்னை: சன் டிவி ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலை முடிக்க வேண்டும் என்று கடிதம் வந்துள்ளதாம்.
சீரியலின் கதைகளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் சீரியலுக்கு வந்த பிரச்சினையை பற்றி மனம் திறந்து இயக்குனர் திருச்செல்வம் பேசி இருக்கிறார்.

டி ஆர் பி யில் முன்னணி
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டிஆர்பி யில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த சீரியலின் கதைகளும் பெண்களை அவர்களுக்கே தெரியாமல் அடிமைப்படுத்தும் கட்டமைப்பில் இருந்து அவர்கள் தங்களுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக படும் போராட்டங்களை பற்றியதாக இருந்து வருகிறது. இப்போதைய சூழ்நிலையிலும் பல இடங்களில் ஆண் ஆதிக்கம் கொடி கட்டி பறந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை இந்த சீரியல் தோலுரித்து கட்டி இருக்கிறது என்று இந்த சீரியலுக்கு அதிகமான பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கோலங்கள் தொல்காப்பியன்
எதிர்நீச்சல் சீரியலில் ப்ரோமோ சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சில நிமிடங்களில் லைக்குகள் மில்லியன் கணக்கில் குவிந்து விடுகிறது. அது மட்டுமல்லாமல் கமெண்ட்களும் எந்த சீரியலுக்கும் இல்லாத வகையில் இந்த சீரியலுக்கு குவிந்து கொண்டிருக்கிறது .பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் திருச்செல்வம் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இதுவும் இந்த சீரியலுக்கு மேலும் ஒரு சிறப்பு. ஏற்கனவே கோலங்கள் சீரியல் மூலமாக ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்களின் மனதில் இப்ப வரைக்கும் தொல்காப்பியன் என்ற தொல்ஸ் ஆக இடத்தைப் பிடித்து இருக்கும் திருச்செல்வம் தற்போது எதிர்நீச்சல் சீரியலிலும் தன்னுடைய திறமையை விட்டு விலகாமல் இருக்கிறார்.

இப்படி ஒரு கடிதமாம்
இந்த நிலையில் சமீபத்தில் திருச்செல்வன் ஒரு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். அந்த வீடியோக்களை ரசிகர்கள் அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர். காரணம் அந்த வீடியோவில் இவருக்கு ஒரு லெட்டர் வந்ததாம். எதிர்நீச்சல் சீரியலை இன்றே நிறுத்த வேண்டும் என்று ஒரு நபர் அதில் எழுதியிருந்தாராம். அதற்கு அவர் கூறிய காரணம் சமீப காலமாக என்னுடைய மனைவி என்னை குணசேகரன் ஆகவும் அவளை ஜனனியாகவும் நினைத்துக் கொண்டு செயல்படுகிறாள். தினமும் ஒன்பது முப்பது மணிக்கு இந்த சீரியலை பார்த்ததும் அவளுடைய நடவடிக்கை மாறி விடுகிறது என்று அதில் எழுதி இருந்தாராம்.

ரசிகர்களின் கோரிக்கை
எதிர்நீச்சல் சீரியல் தொடங்கி ஒரு சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னேறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இதுக்கு அதிகமான பாசிட்டிவ் கமாண்டுகள் வந்த வண்ணமாகவே இருக்கும் நிலையில், ஒரு சில நேரங்களில் இந்த மாதிரி நெகட்டிவ் கமெண்ட் வருகிறது. ஆனால் நான் எப்படியும் இந்த சீரியலை நிறுத்தி வைப்பதற்காக முடிவில் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த ரசிகர்கள் பலர் திருச்செல்வம் சார், யார் என்ன சொன்னாலும் நீங்கள் எதிர்நீச்சல் சீரியலின் கதையை மாற்றி விடாதீர்கள். அதே நேரத்தில் சீரியலையும் முடித்து விடாதீர்கள். நாங்கள் விரும்பி பார்க்கும் ஒரே சீரியல் இதுவாக இருக்கிறது, பல வருடங்களாக சீரியல் பார்க்காமல் இருந்த நாங்கள் கூட இப்போது மீண்டும் இந்த சீரியல் பார்க்க தொடங்கியிருக்கிறோம். என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications