ஹாட்ஸ்டார் கொடுத்த பொங்கல் ட்ரீட்... தனுஷ் ரசிகர்கள் ஹேப்பி...!!!
சென்னை: தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் விரைவில் நேரடியாக ஓடிடி யில் வெளிவர இருக்கும் "மாறன்" திரைப்படத்தின் ஒடிடி உரிமையை கைப்பற்றியுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் அப்படத்தின் மோஷன் போஸ்டரை தற்போது ரிலீஸ் செய்துள்ளது.
மாஸ் பி.ஜி.எம் யில் சும்மா ஸ்டைலாக இருக்கும் தனுஷை மோஷன் போஸ்டரில் பார்த்த ரசிகர்கள் தனுஷையும் பட குழுவினரையும் பாராட்டியும், வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.

பிசியாக கேரியர்
நடிகர் தனுஷ் ஹிந்தி, ஹாலிவுட், என்று அடுத்த அடுத்த லெவலுக்கு தன் சினிமா கேரியரை உயர்த்திக்கொண்டு பிசியாக நடித்து வந்தாலும்,தமிழ் மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வமாகவும், மிகவும் கவனம் செலுத்தியும் வருகிறார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு அரை டஜன் தமிழ் படங்களை கைவசம் வைத்திருக்கும் தனுஷ், ஒவ்வொரு படத்தின் இயக்குனரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்து நடித்து வருகிறார். சில படங்கள் சறுக்கினாலும், ஏதாவது ஒரு படம் வெற்றி பெற்று விடும் என்ற நம்பிக்கையில் பெரும்பாலும் இயக்குனரையும் கதையும் வைத்து தனது அடுத்த படங்களை முடிவு செய்து வருகிறார்.

இயக்குனர் கார்த்திக் நரேன்
"துருவங்கள் பதினாறு" படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்ற இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். அவர் தனது அடுத்த படமாக கௌதம் மேனனுடன் இணைந்து நரகாசுரன் என்ற படத்தை இயக்கும் முயற்சியில் இருந்தார். ஒருசில பிரச்சனைகள் காரணமாக இன்னும் படத்தின் பணிகள் முடிவடையாமல் இருக்கிறது. பின்பு அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாஃபியா என்ற படத்தை எடுத்திருந்தார்.படம் சரிவர போகவில்லை என்றாலும் படத்தின் மேக்கிங் ஸ்டைலுக்காக அப்படம் கொஞ்சம் பாராட்டப்பட்டது. பொதுவாக திறமையான இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு வழங்கும் தனுஷ், கார்த்திக் நரேன் அவர்களை நம்பி "மாறன்" படத்திற்கு கால்ஷூட் கொடுத்து நடித்து முடித்திருக்கிறார்.

ஊரடங்கு காரணம்
கொரனா, ஒமிக்ரான் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில், தியேட்டர் களுக்கான கட்டுப்பாடு எந்த அளவில் இருக்கும்..!? படங்களை ரிலீஸ் செய்ய முடியுமா..!? முடியாதா..!? என்ற சந்தேகமான சூழ்நிலை நிலவுவதால் மாறன் படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துவிட்டது. பெரும் தொகையை கொடுத்து அதற்கான உரிமையை பெற்றுள்ள ஹாட் ஸ்டார் நிறுவனம், படத்திற்கான விளம்பர பணியைத் தொடங்கி விட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ஒரு நிமிடம் வரை ஓடக்கூடிய மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

மோஷன் போஸ்டர்.
அசுரன் படத்திற்கு பிறகு ஜி.வி பிரகாஷ் தனுசுக்கு இசையமைத்துள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் செம்ம ஸ்டைல் லுக்கில் தனுஷ் இருப்பதாகவும்,பி.ஜி.எம் ல் ஜி.வி பிரகாஷ் சிறப்பாக ஸ்கோர் செய்திருப்பதாகவும், இப்போஸ்டர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டி உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications