
என்னாது! விஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு இவ்வளவா? நம்ப முடியலையே!
சென்னை: பல ஆண்டுகளாக முன்னணி சேனல்களில் தொகுப்பாளினியாக இருந்து தற்போது சினிமாவிலும் அடியெடுத்து வைத்த பிரபலம் விஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
சென்னையைச் சேர்ந்த அர்ச்சனா 1999ஆம் ஆண்டு எத்திராஜ் கல்லூரியில் படிக்கும் போதே ஜெயா டிவியில் ஆங்கில செய்திகளில் செய்தி வாசிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.
இதையடுத்து சன் டிவியிலும் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்தவர். சன் டிவியில் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதையடுத்து அவருக்கு ஜாரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
விறுவிறுப்பாகும் விஜே சித்ரா வழக்கு! எஸ்கேப்பாக ஹேம்நாத் போடும் திட்டம்! ’அவர்’ மீதும் சந்தேகம்..!

குழந்தை பராமரிப்பு
குழந்தையை பராமரிப்பதற்காக 2007 ஆம் ஆண்டு சன் தொலைகாட்சியை விட்டு விலகினார். பின்னர் இரு ஆண்டுகள் கழித்து 2009 ஆம் ஆண்டு விஜய் தொலைகாட்சியில் சேர்ந்தார். அங்கு 2013 ஆம் ஆண்டு வரை நம்ம வீட்டு கல்யாணம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து அங்கிருந்து ஜீ தமிழ் சேனலுக்கு சென்றார்.

அதிர்ஷ்ட லட்சுமி
அங்கு அதிர்ஷ்ட லட்சுமி, ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதையடுத்து 2020 ஆம் ஆண்டு அர்ச்சனா பிக்பாஸில் நுழைந்தார். அங்கு பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானார். இதையடுத்து விஜய் டிவியில் இணைந்து ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கினார்.

யூடியூப் சேனல்
இது மட்டுமல்லாமல் இவர் பல்வேறு தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ளார். இறுதியாக தனது மகள் ஜாராவுடன் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரது மகளும் தொகுப்பாளினியாக உள்ளார். இது மட்டுமல்லாமல் அர்ச்சனா, ஜாரா, அர்ச்சனாவின் தங்கை அனிதா ஆகியோர் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்கள்.

3 முதல் 5 மில்லியன் டாலரா
அண்மையில் அர்ச்சனாவும் ஜாராவும் இணைந்து ஹோம் டூர் நிகழ்ச்சியை தங்களது யூடியூப்புக்காக செய்த போது பாத்ரூம் டூர் என்ற பெயரில் பாத்ரூமை காட்டி பெரும் சர்ச்சைக்குள்ளானார். தொடர்ந்து இவர் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.இவரது சொத்து மதிப்பு 3 முதல் 5 மில்லியன் டாலர் ஆகும் என தகவல்கள் கூறுகின்றன.