துல்கரின் அதிரடி டிஜிட்டல் என்ட்ரி...ஆர்வத்தை தூண்டும்..தரமான இயக்குனர்கள்
சென்னை: துல்கர் சல்மான் நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் புதிய வெப் சீரியலில் நடிக்க இருக்கிறார்.
துல்கர் சல்மானின் ரசிகர்கள் அனைவரும் அவரது டிஜிட்டல் அறிமுகத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

புதிய அப்டேட்கள்
சமீபத்தில் மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் ரிலீசாகி நல்ல வரவேற்பைப் பெற்ற "குரூப்" படத்தை தொடர்ந்து... பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி "ஹே.. சினாமிகா" பட வெளியீட்டில் பிஸியாக இருக்கும் துல்கர் சல்மான்... தன்னுடைய அடுத்த படமாக க்ரைம்-த்ரில்லர் கதையில் "சல்யூட்" என்ற படத்தில் நடித்து வந்து கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரது நெட்ப்ளிக்ஸ் வெப்சீரியஸ் குறித்த அப்டேட்கள் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

டிஜிட்டல் முறையில் கவனத்தைத் திருப்பும் திரைஉலகம்
கொரனா ஊரடங்கு மற்றும் மிகப்பெரிய பொருட்செலவின் காரணமாக டிக்கெட் விலை உயர்வு போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில், வருங்காலங்களில் பெரிய அளவிலான மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் மட்டுமே நிலைத்திருக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவுகிறது.இந்த சூழ்நிலையில் திரையுலகத்திலும் மக்களிடத்திலும் தங்களை நிலை நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயத்திற்க்கு திரை நட்சத்திரங்கள் மாறி வருகின்றனர். இதற்கு எளிய வழி ஒடிடி போன்ற டிஜிட்டல் உலகம்தான் என முடிவெடுத்து பல பாலிவுட் பிரபலங்கள் தொடங்கி பல பிரபல இயக்குனர்களும் நடிகர்களும் டிஜிட்டல் முறை பக்கம் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

நெட் பிளக்ஸ் வெப் சீரியலில் அறிமுகமாகும் துல்கர்
தென்னிந்தியாவைப் பொருத்தவரை சூர்யா,விஜய் சேதுபதி என்று பிரபல கதாநாயகர்கள் ஏற்கனவே டிஜிட்டலிலும் சேர்த்து கவனம் செலுத்த ஆரம்பித்து விட்ட இந்த வேலையில், மலையாள திரையுலகின் பிரபல கதாநாயகன் துல்கர் சல்மான் அவர்களும் தன்னை நெட்பிளக்ஸ் வெப் சீரியஸ் மூலம் டிஜிட்டலில் அறிமுகம் செய்ய இருக்கிறார். "த ஃபேமிலி மேன்", "கோ.. கோவா.. கான்" ,"ஸ்ரீ" போன்ற காமெடி படங்களை இயக்கிய பிரபல வெற்றி இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே அவர்கள் இயக்கத்தில் வெப் சீரியலில் நடிக்க இருக்கிறார்.

காமெடி த்ரில்லர்
நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் நேரடி யாக ஹிந்தியில் இந்த வெப் சீரியஸ் தயாரிக்கப்படுகிறது. காமெடி திரில்லர் டைப்பில் உருவாக்கப்படும் இந்த வெப் சீரியஸில் துல்கர் சல்மானுடன் ராஜ்குமார் ராவ்,ஆதர்ஷ் கவுரவ், போன்ற பிரபல ஹிந்தி நடிகர்களும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். தாங்கள் இதற்கு முன்பு இயக்கிய படங்கள் மூலம் தங்களை நல்ல இயக்குனர்களாக நிரூபித்துள்ள ராஜ் மற்றும் டி.கே அவர்கள் இயக்கத்தில் வெளிவரும் இந்த வெப் சீரியஸில் அனைத்து விதமான ரசிகர்களை கவரும் பொருட்டு வெப் சீரியஸ் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications