எதிர்நீச்சல்: வசு மற்றும் ஜனனியின் எதிர்பாராத கொண்டாட்டம்.. இந்த பரபரப்பிலும் என்னம்மா யோசிக்கிறாங்க
எதிர்நீச்சல் சீரியலில் வசு கேரக்டரில் நடிக்கும் வைஷ்ணவி பிறந்த நாளை நண்பர்களோடு சேர்ந்து ஜனனியாக நடிக்கும் மதுமிதா கொண்டாடி இருக்கிறார்.
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி மற்றும் வசு சீரியலில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் நெருங்கிய தோழிகளாக இருந்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் தற்போது பிறந்தநாள் கொண்டாட்டத்தை வெகு விமர்சனமாக கொண்டாடி அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கின்றனர்.
சீரியலில் அமைதியும் சொரூபமாக ஜனனியை பார்த்த ரசிகர்கள் பலர் தற்போது வெளியான வீடியோவில் பார்த்து அதிர்ச்சியாகி இருக்கின்றனர்.

வசு தான் உயிர் தோழி
சின்னத்திரையாக இருந்தாலும் சரி வெள்ளி திரையாக இருந்தாலும் சரி ஒன்றாக பணிபுரிவதால் அங்கே காதலும், நட்பும் ஏற்படுவது சகஜம்தான் ஆனால் அந்த நட்பு காதல் நீண்ட நாள் தொடர்வது தான் அரிதிலும் அரிதாக இருந்து வருகிறது. அந்த மாதிரி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் கதாநாயகியாக ரசிகர்களின் மனதை கவர்ந்த மதுமிதா அவருடைய தோழியாக நடித்து வரும் வசு தான் அவருடைய உயிர் தோழியாம். வசுவின் உண்மையான பெயர் வைஷ்ணவியாம் .இந்த சீரியலில் இவர்கள் இருவரும் தோழியாக நடித்துக் கொண்டிருப்பது போலவே இவர்கள் நிஜ வாழ்க்கையிலும் இருந்து வருகின்றனர்.

வரவேற்பு பெற்ற ஜனனி கேரக்டர்
சீரியலில் பார்க்கும் கேரக்டரை அப்படியே ரசிகர்கள் மனதில் நிறுத்தி விடுவதை போலவே இவர்களுடைய கேரக்டரையும் ரசிகர்கள் நிறுத்திவிட்டனர் .அதிலும் ஒரு சில நடிகர்கள் தாங்கள் நடிக்கும் கேரக்டராக மாறி விடுவார்கள் அந்த மாதிரி தான் தற்போது கூட ஜனனி கேரக்டரில் நடிக்கும் மதுமிதா அந்த கேரக்டராகவே ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகிறார். எதிர்நீச்சல் சீரியல் ஒளிபரப்பாகிய தொடங்கி ஒரு சில மாதங்கள் கடந்து வந்த நிலையில் தற்போது இவர் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றார்.

தோள் கொடுக்கும் தோழி
எதிர்நீச்சல் சீரியலில் ஆணின் அடுக்கு முறையால் திருமணத்திற்கு பிறகு வீட்டுக்குள்ளே முடங்கி இருக்கும் பெண்கள் தங்களுடைய சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக வாழ்க்கையில் எதிர்நீச்சல் அடித்து முன்னேறுவதை குறிக்கும் விதமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் ஜனனி தன்னுடைய வீட்டில் தனக்கு மரியாதையும் மதிப்பும் இல்லாததால் அந்த வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். திருமணத்திற்கு முன்பு பெற்றோரின் துணையோடு இருந்த ஜனனி திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டில் தனக்கு மரியாதை கிடைக்காததால் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையில் தன்னுடைய திறமையை நிரூபிக்க இருக்கிறார். ஜனனிக்கு துணையாக அவருடைய தோழியான வசு ஆரம்பம் முதலே இருந்து வருகிறார்.

சூட்டிங் ஸ்பாட் சேட்டைகள்
சீரியலில் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலர் அவர்களுடைய நட்பை பாராட்டி வந்தனர். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் உயிர் தோழிகளாகத்தான் இருந்து வருகிறார்கள். கன்னட நடிகையான மதுமிதா தற்போது தமிழ் சீரியலில் நடித்து வரும்பொழுது அவர்களுக்கு அவருடைய உயிர் தோழியே தோழியாக நடித்து வருகிறார். இதனால் சூட்டிங் ஸ்பாட்டில் இவர்கள் இருவரும் செய்யும் ரகலைகள் அனைவரும் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் .கேமரா முன்பு இருவரும் அப்படியே போல்டாக இருந்தாலும் கேமரா ஆப் செய்ததும் குழந்தைத்தனமாக செய்யும் சேட்டைகளை பார்த்து சூட்டிங் ஸ்பாட் பல நேரங்களில் பதறிப் போய் இருக்கிறதாம். அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தற்போது பலர் பகிர்ந்து வருகின்றனர்.

வசுவுக்கு பிறந்தநாள்
இந்த மாதிரி தான் தற்போது வசுவின் பிறந்தநாளுக்கு ஜனனி இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருக்கிறார். ஒரு குயின் போல வசு பிறந்தநாள் உடையில் ஜெலிக்க அவரை கண்ணை மூடி பிரம்மாண்டமான கேக் முன்பு நிறுத்தி வைத்து, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து கேக்கை கட் செய்ய வைத்து, நண்பர்கள் மாறி மாறி முத்த மழை பொழிந்து தங்களுடைய அன்பை காட்டி இருக்கின்றனர். பின்பு ஆட்டம் பாட்டத்தோடு பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டியிருக்கிறது. தற்போது எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமணம் நடக்குமா? அதற்கு ஜனனி என்ன செய்யப் போகிறார் என்று பெரும் எதிர்பார்ப்பு இருக்கும் நேரத்தில், கிடைக்கும் நேரத்தில் இவர்கள் வெளியிட்ட கொண்டாட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் மதுமிதா தன்னுடைய தோழி வைஷ்ணவியின் பிறந்தநாளுக்கு டிரஸ் மற்றும் டைமண்ட் நகையும் வாங்கி கொடுத்திருக்கிறாராம்
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
விஜய் பற்றி என்னால் தப்பா பேச முடியாது.. ஏனென்றால்? ஓபனாக பேசிய சுந்தர் சி.. பாராட்டும் தவெக ரசிகர்கள் -
அந்த சம்பவத்தால் விஜய் அப்பாவிடம் அழுதாரு.. கோபத்தில் SAC செய்த சம்பவம்! நான் கூடவே இருந்தேன்! பிரபலம் ஓபன் -
Bhavani: சோசியல் மீடியாவை கலக்கும் இந்த நடிகை யார் தெரியுதா? அல்லு அர்ஜுனின் “சொந்தம்” -
சங்கீதா சொன்னது தான் உண்மையா? விஜயின் சொத்து பட்டியலை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்! அடுத்த பஞ்சாயத்து -
Happy Raj OTT: ஓடிடிக்கு வரும் ஜிவி பிரகாஷின் ஹேப்பி ராஜ்... எந்த தளத்தில், எப்போ பார்க்கலாம்? லீக்கான தகவல் -
அறந்தாங்கி நிஷா ஓபனாக சொன்ன ஒரு வார்த்தை.. அறிவே இல்லையா இப்படியா பேசுறது? மேடையிலேயே திட்டிய நடிகர் -
நடிகர் பிரகாஷ் ராஜின் அம்மா திடீர் இறப்பு.. இவ்வளவு பெரிய சோகங்களை கடந்து வந்தவரா அவர்! நெகிழ வைத்த கதை -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications