சுடிதாரில் ஃபங்ஷனை கொண்டாடும் எதிர்நீச்சல் பெண்கள்.. குணசேகரன் எடுக்கப் போகும் அதிரடி முடிவு
சென்னை: எதிர்நீச்சல் சீரியலில் இனி பல அதிரடியான திருப்பங்கள் ஏற்பட போகிறது.
தான் இதுவரை கட்டி காப்பாற்றி வைத்திருந்த மானம் மரியாதை எல்லாம் காற்றோடு போய்விட்டது என குணசேகரன் எடுக்கப் போகும்போது அவதாரத்தை பார்த்து சீரியல் சூடு பிடிக்க போகிறது.
புலி பதுங்குறது பாயிறதுக்கு தான் என்பதை தற்போது குணசேகரனின் குடும்பத்து பெண்கள் புரிந்து விட்டார்கள் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

ரசிகர்களை கவர்ந்த கதை
எதிர்நீச்சல் சீரியல் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்த சீரியலுக்கு என்று அதிகமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஒளிபரப்பான ஒரு சில வாரங்களிலேயே இது டிஆர்பி யில் முன்னணியில் வந்துவிட்டது. காரணம் இந்த சீரியலின் கதாபாத்திரங்களில் மட்டும் கதைக்களம் அப்படி இருக்கிறது என்று பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கூறி வருகின்றனர். இதுவரைக்கும் சீரியலில் குணசேகரன் தான் குடும்பத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தார் வீட்டு பெண்கள் எதிர்த்து பேசினாலே அவர்கள் வாயை ஒரே வார்த்தையால் மூடிவிடுவார்.

காப்பாற்ற வந்த ஜனனி
நமக்கெல்லாம் விடுதலை தருவதற்கு யாரேனும் வர மாட்டார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த குணசேகரனின் வீட்டு பெண்களுக்கு ஜனனி வந்தது பெரிய வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜனனியின் கேரக்டர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து கொண்டு இருந்த நிலையில் தற்போது ஜனனியின் கதாபாத்திரத்திற்கு தகுந்த மாற்றம் கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு குணசேகரனை எதிர்த்து பேசும் ஒரே நபராக ஜனனி இருந்தாலும் தற்போது ஜனனியின் செயலால் வீட்டில் இருக்க பெண்களும் அவருடைய பேச்சைக் கேட்க தொடங்கி விட்டனர்.

பங்க்ஷன் கொண்டாட்டம்
குணசேகரன் வீட்டு குழந்தையின் சடங்கு ஃபங்ஷனுக்கு நான் வரமாட்டேன் என்று வீராப்போடு பேசிய குணசேகரனை வரவில்லை என்றால் இருக்கட்டும் நாம போய் கொண்டாடுவோம் என்று பெண்கள் மட்டும் கலந்து கொண்டு பங்க்ஷனை சிறப்பாக செய்து கொண்டிருக்கின்றனர். அதுவும் எப்போதும் புடவையிலே வலம் வந்து கொண்டிருந்த குணசேகரன் குடும்பத்து பெண்கள் முதல் முறையாக சுடிதார் அணிந்து அனைவரும் தங்களுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய கேரக்டரில் இருக்கின்றனர். இது சீரியல் பார்க்கும் ரசிகர்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் கொடுக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.

ஆட்டம் ஆரம்பம்
இது சீரியலாக இருந்தாலும் கதையோடு ஒன்று போன ரசிகர்கள் இவர்கள் போடும் ஆட்டத்தை பார்த்து இனி குணசேகரன் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்து வருகிறார்கள். ஏற்கனவே நேற்றைய எபிசோட்டில் குணசேகரன் தன்னுடைய தாய் இல்லாத கவலையை, பார்ப்பவர்களே பீல் பண்ணும் விதமாக பதிவு செய்திருந்தார். குணசேகரன் என்னதான் வில்லத்தனம் செய்து கொண்டிருந்தாலும் ஒரு அம்மாவின் மீது வைத்திருக்கும் பாசத்தையும், அம்மா இல்லாததால் அவர் பட்ட துயரத்தையும் பலரும் பார்த்து இவர் நல்லவர் தானோ...!!?? என்று கூட நினைக்கத் தோன்றுவிட்டார்களாம். இந்த நிலையில் இன்று இவர்கள் அனைவரும் சுடிதார் போட்டுக்கொண்டு பங்க்ஷனில் கலந்து கொண்டு போட்ட ஆட்டங்களை பார்த்து குணசேகரன் எடுக்கும் முடிவு தான் சீரியலின் திருப்புமுனையாக இருக்கப் போகிறது.


Click it and Unblock the Notifications
